தஞ்சாவூர், நெல்லை கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவு அலுவலகங்களுக்கு "மூடு விழா' நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவு கடந்த 2002ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இப்பிரிவுகளில் புதிய பாஸ்போர்ட் பெறுதல், பாஸ்போர்ட் புதுப்பித்தல், பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல், குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்குதல் உட்பட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் இந்த அலுவலகங்களில் சுமார் 2,000 பேர் வரை இப்பிரிவின் மூலம் சேவைகளை பெற்று வந்தனர்.
இதற்கிடையில் தனியார் நிறுவனங்களின் மூலம் பல்வேறு பகுதிகளில் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இதில் மதுரை, நெல்லையில் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி, திருச்சி, தஞ்சாவூரில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி, சென்னையில் 3 இடங்களில் கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி முதல் இதற்கான அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இந்த தனியார் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு உரிய முறையில் சேவைகளை செய்வதில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக பாஸ்போர்ட் உயர் அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்களும் தெரிவிக்கப்பட்டன.
தனியார் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்ட பாஸ்போர்ட் பிரிவு அலுவலகங்கள் "களை" இழந்து காணப்பட்டன. இந்த அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மீது உரிய நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்படாமல் காலதாமதம் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது.
தனியார் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்ட பாஸ்போர்ட் பிரிவு அலுவலகங்கள் "களை" இழந்து காணப்பட்டன. இந்த அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மீது உரிய நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்படாமல் காலதாமதம் செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது.
தனியார் அலுவலகங்களால் கலெக்டர் அலுவலகங்களில் இயங்கி வரும் பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவுகளுக்கு "மூடு விழா' நடத்தப்படும் என "தினமலரில்' ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக நெல்லை, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் பிரிவு அலுவலகங்களுக்கு "மூடு விழா' நடத்தப்பட்டது.
நெல்லை அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட் உட்பட எந்தவித விண்ணப்பங்களும் பெறக் கூடாது என பாஸ்போர்ட் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.தஞ்சாவூரில் வரும் 1ம் தேதி முதல் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களை ஏற்று கொள்ள கூடாது என்றும், வேண்டுமெனில் புதிய பாஸ்போர்ட் பதிவு விபரங்களை மட்டும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இரு மாவட்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் பிரிவு அலுவலகங்கள் வரும் ஆண்டு மார்ச் மாதம் இறுதி வரை செயல்பட பார்லிமென்ட் கமிட்டி முடிவு செய்திருந்தது. ஆனால் இதற்கு மாறாக அதிகாரிகள் தற்போதே இந்த அலுவலகங்களுக்கு மூடு விழா நடத்த உத்தரவிட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதனால் தினமும் இப்பிரிவு அலுவலகங்களுக்கு வரும் நூற்றுக்கணக்கான மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனினும், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வேண்டுகோளின்படி பாஸ்போர்ட் பிரிவு அலுவலகங்கள் தொடர்ந்து செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
மேலும், கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் பிரிவு அலுவலகங்களின் மூலம் புதிய பாஸ்போர்ட் மற்றும் அனைத்து சேவைகளுக்கும் குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் தனியார் நிறுவனங்கள் அதிகமாக செயல்பட்டால் இக்கட்டணங்கள் அனைத்தும் உயரும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் பாஸ்போர்ட் குறை தீர்க்கும் பிரிவு அலுவலகங்களை தொடர்ந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.
தினமலர் டிசம்பர் 31,2011,03:22 IST
No comments:
Post a Comment