இது மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையோ, கடலூர் மாவட்டமோ அல்ல.
மொஹஞ்சதாரோ, ஹரப்பாவில் அகழ்வராய்ச்சிக்காக தோண்டப்பட்ட இடங்களின் மிச்சமும் அல்ல.
சாட்சாத் இது நம்ம ஊரு அதிரையின் அவலம் மிகுந்த சாலைகளே, நம்புங்கள்!
வாகனங்கள், விபத்துக்கள் பெருக்கம் ஒரு பக்கம், வாழ்க்கை தர உயர்வு ஒரு பக்கம் என பகட்டுகள் வளர்ச்சி கண்டாலும் இன்னும் சாலைகள் மட்டும் சோழர் காலத்தை நினைவூட்டுகின்றன.
இதில் பல சாலைகள் தண்ணீர் குழாய் பதிப்பிற்காக சமீபத்தில், மழைக்கு முன்பே தோண்டப்பட்டு அலங்கோலத்தில் விடப்பட்டவை. மற்றவை மழையில் காணாமல் போயிருக்கலாம்?
காவி நிறத்தில் தெரியும் பல சாலைகள் தார் சாலைகளாக இருந்தவை என்ற வரலாற்றை வேறு நினைவுபடுத்த வேண்டியுள்ளது!
இதில் சிஎம்பி லைனிலிருந்து மரைக்காகுளம் வழியாக மேலத்தெரு செல்லும் பாதை இது வரை சாலையாக உருமாற யாருமே முயற்சிக்கவில்லை.
சாலைகளை செப்பனிட இன்னும் எத்தனை வீட்டைத் தான் இடிப்பது என அலுத்துக் கொள்கின்றனர் முறையாக வரி செலுத்தும் பொதுமக்கள்.
அதிரையின் சாலைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்படவிட்டால், அதிரை முழுமையையும் சமமாக நேசிக்கும் சரியான ஒருவரை குறித்து மக்கள் சிந்திக்கும் நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாது.
No comments:
Post a Comment