புல் மட்டம் கூட நிரம்பாத மரைக்கா குளம் படங்கள்
சமீபத்தில் அடித்துப் பெய்த மழையில் அதிரையிலுள்ள குளங்கள் அனைத்தும் கிட்டதட்ட நிறைந்து வழிந்தன.
ஒரு சில குளங்களுக்கு மட்டும் பம்பிங் முறையில் அதிரை பேருராட்சி தலைவரின் முயற்சியால் நீர் நிரப்பப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.
ஆனால், அதிரையில் பெண்களுக்கென்று மட்டும் பிரத்தியேகமாக உள்ள மரைக்காகுளம் மட்டும் மழையாலும் நிறையவில்லை, பம்பிங் முயற்சியும் செய்யப்படவில்லை. சமூக ஆர்வலர்களும் களமிறங்கவில்லை. எந்தக் கட்சிக்காரர்களும் கண்டுகொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட ஜமாத்தும் புறக்கணித்துவிட்டது.
சிஎம்பி லைனிலிருந்து தண்ணீர் வரும் அதன் வாய்க்காலும் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் மேல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருடங்கள் ஆகிவிட்டன.
இந்நிலையில் மழையால் நிறைந்த குளத்திற்கு எல்லாம் ஆற்றுத்தண்ணீர் கொண்டுவருவதாக படங்காட்டும் 'அந்த பிரிவின் தொண்டர்களையும்' இந்த வருடம் காணவில்லை.
இப்படி அனைவரும் கண்டுகொள்ளாதிருக்கும் மரைக்காகுளத்தை நிறைக்க வரும் நாட்களிலாவது தெருசார் அமைப்புக்களாவது முன்வர வேண்டும்.
No comments:
Post a Comment