உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, October 31, 2011

நரகில் விடுதலை கிடைக்கும் நாள்...‏


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹுஇவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை)அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3 : 185)

Dear Brothers & sisters please take your time to read this mail and  FOLLOW IT IN  YOUR LIFE and forwarding it to all your friends and family insha allah.

Jasakkallah Khairan

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் நல்லடியார்களுக்கு அவர்களின் குறுகிய ஆயுளில் நிறைந்த நல்லமல்களைச் செய்து மகத்தான பேறுகளைப் பெறுவதற்காக சில முக்கிய நாட்களை வழங்கியிருப்பது அவனுடைய மிககப்பெரிய கருணையாகும்.சிறப்புக்குரிய அந்தநாட்களாவன:-

1. ரமளான் மாதம்,
2. ரமளானின் கடைசிப் பத்து நாட்கள்.
3. ரமளானின் லைலத்துல் கத்ரு இரவு.
4. ஜும்ஆவுடைய நாள்.
5. ஜும்ஆவுடைய நாளில் இமாம் மிம்பரில் ஏறியது முதல் இறங்குவதுவரை.
6. ஒவ்வொரு நாளும் பிந்திய இரவு.
7. அந்த வரிசையில் ஒன்றுதான் துல் ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களும்! இந்நாட்களின் சிறப்புக்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் பல ஆதாரங் கள் உள்ளன! அல்லாஹ் கூறுகிறான்


وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ

வைகறைப் பொழுதின் மீதும் பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக! (அல்பஜ்ர் 89:1-2)

1.துல் ஹஜ்ஜின் பத்து நாட்களைக் கொண்டு இறைவன் ஆணையிட்டுக் கூறுவதென்றால் நிச்சயமாக அவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கவேண்டும். இல்லை யெனில் அவ்வாறு ஆணையிட்டுக்கூறும் அவசியமில்லை.
2.அடியார்கள் தன்னை குறிப்பிட்ட நாட்களில் நினைவுபடுத்த வேண்டும் என்று கூறிய நாட்களும் இந்த துல்ஹஜ் பத்து நாட்களில் தான் வருகிறது.


இறைவன் திருமறையில் கூறுகிறான்:

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ

அவர்கள் தங்களுடைய (இம்மை,மறுமைப்) பேறுகளை பெறுவதற்காகவும்சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியதற்காகவும்,குறிப்பிட்டநாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும்,( ஹஜ்ஜுக்கு வருவார்கள்) 22:28.

இவ்வசனத்தில் ‘குறிப்பிட்ட நாட்கள்’ என்பது துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களாகும் என்பது பெருமபாலான் அறிஞர்களின் கருத்தாகும். இப்னு உமர் (ரலி)இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றனர்.
3. துல்ஹஜ்ஜு பத்து நாட்களும்,உலக நாட்களில் மிகவும் சிறந்த நாட்களாகும் என நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையும் விடவும் சிறந்ததாஎன நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது,ஆம் அல்லாஹ்வின் பாதையில் போர்புரிவதையும் விடவும் இது சிறந்தது.ஆனால் ஒருவன் அவனுடைய பாதையில் தனது உயிர்,பொருள் போர் ஆகிவற்றால் போர் புரிந்து திரும்பி வராமல் ஷஹீதாகி மரணித்தவரைத் தவிர’ எனக்கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ,ஆதாரம்: புகாரி)
4. அரபா நாளும் அதில் உள்ளது. அரபா நாள் பாவங்களுக்கு மன்னிப்பும்நரகவிடுதலையும் நிடைக்கும நாளாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- அல்லாஹ் நரகிலிருந்து தனது 
அடியார்களை அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரபா நாளாகும்.இதைத் தவிர வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செயவதில்லை.அல்லாஹ் அந்நாளில் இறங்கி வந்து,இவர்கள் என்ன விரும்புகின்றனர்என்று தனது வானவர்களிடம் பெருமையாகக் கேட்பான். (அறிவிப்பவர் ஆயிஷா(ரலி)ஆதாரம்: முஸ்லிம்.)

துல்ஹஜ் பத்து நாட்களின் சிறப்புக்கும்,மாண்புக்கும் அரபாத் நாள் அந்நாளில் இருப்பது ஒன்றே போதுமானது.

5. துல்ஹஜ் பத்துநாட்களிலும் அமல் செய்வது ஏனைய நாட்களில் அமல் செய்வதைவிடவும் மேலானது. ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:- உலக நாட்களில் மிகவும் அமலகள் செய்வதில் அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பான நாட்கள் துல்ஹஜ் பத்து நாட்களாகும.இதுபோல் வேறு எந்நாட்களும் இல்லை! எனவே இந்த நாட்களில் லா இலாஹ இல்லல்லாஹுஎன்றும்,அல்லாஹு அக்பர் என்றும்,அல் ஹம்து லில்லாஹ் என்றும் அதிகமதிகமாகச் சொல்லுங்கள்! (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூலகள் : முஸ்னத் அஹ்மத்,தப்ரானி.)

பத்ஹுல் பாரியில் இப்னு ஹஜர்(ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள் :      துல்ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களின் சிறப்புக்குக் காரணம் இஸ்லாத்தின் தலையாய வணக்கவழிபாடுகள் இந்நாட்களில் ஒருங்கே அமைந்திருப்பதாகும்! தொழுகைநோன்புதர்மம்ஹஜ் ஆகிய யாவும் இந்நாட்களில் நிறை வேற்றப்படுகின்றன! இந்த நிலை வேறு எந்த நாட்களிலும் அமைவதில்லை! எனவே நாம் இந்நாட்களில் பின் வரும் நல்அமல்களில் அதிகக் கவனம் செலுத்துவது சிறப்பாகும் :-

நோன்பு
இந்நாட்களில் ஸுன்னத்தான நோன்புகளை நோற்கவேண்டும்.நோன்பும் நல்லமல்களில் உள்ளதாகும்.
தக்பீர் சொல்வது
இதற்கு மேலே சொன்ன நபி;மொழி ஆதாரமாய் உள்ளது. அதை அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்கள் இந்நாட்களில் தொழுகைக்குப் பின்பும் தக்பீர் அதிகம் சொல்பவர்களாய் இருந்துள்ளார்கள். வீதிகளிலும் கூடாரத்தில் வைத்தும் மக்களின் அவைகளிலும் அதிகம் தக்பீர் சொல்பவர்களாய் இருந்துள்ளனர்.

அரஃபா நாளின் நோன்பு
ஹாஜிகள் அல்லாதாருக்கு இந்நோன்பு ஸுன்னத்!இந்த நோன்பு பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
இந்தநோன்பு சென்ற ஆண்டுக்கும் வரும் ஆண்டுக்கும்குற்றப் பரிகாரமாகஅமையும் என நான் எண்ணுகிறேன்,. ஆறிவிப்பவர்:அபூகதாதா அல் அனஸாரி (ரலி) ஆதாரம்: முஸ்லிம்,அபூதாவூதுநஸயீ)
அரஃபாவில் தங்கியுள்ள ஹாஜிகள் இந்நோன்பை நோற்க மாட்டார்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்காமல் தான் அரஃபாவில் தங்கியிருந்தார்கள்!

இந்நாட்களை நாம் சிறப்பிப்போம்.
நன்மைகளைத் தேடிக்கொள்வதற்கான் இதுபோன்ற காலகட்டங்களில் பாவமீட்சி தேடி இறைவன்பக்கம் திரும்புவதே ஒரு முஸ்லிமுக்கு அழகாகும்! அது தூய்மையான பாவமீட்சியாகவும் வாய்மையான தாகவும் இருக்கவேண்டும்! பாவங்ளை விட்டு விலகுவதுடன் இனி எப்போதும் அவற்றைச் செய்வதில்லை என்று உறுதி கொள்ள வேண்டும்! நிச்சயமாக பாவங்கள்தாம் இறையருளைப் பெறவிடாமல் மனிதனைத் தடுத்து அவனை இறைவனை விட்டும் தூரமாக்கு கின்றன!


நாம் அனைவரும் வாய்மையுடனும் தூய்மையுடனும் இறைவனை வணங்கிவழிபட்டு அவனது அன்பையும்அருளையும் பெறமுயல் வோமாக!

 AAMEEN AAMEEN AAMEEN..

------------------------------------------------
No comments:

Post a Comment