உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, October 11, 2011

அன்பிற்குரிய‌ இஸ்லாமிய‌ ச‌கோத‌ர்க‌ளுக்கு...

அஸ்ஸ‌லாமு அலைக்கும்(வ‌ர‌ஹ்)

அன்பிற்குரிய‌ இஸ்லாமிய‌ ச‌கோத‌ர்க‌ளுக்கு,

ந‌ம் ச‌முதாய‌ம்குரித்து ஒரு சில‌ க‌ருத்துக்க‌ளை இங்கு ப‌திய‌ ஆசைப்ப‌டுகிறேன். த‌ற்கால‌த்தில் எந்த‌ இஸ்லாமிய‌ பிளாக்கில் பார்த்தாலும் நீயா? நானா என்ற‌ அடித‌டிக‌ள் ம‌ட்டும் அதிக‌மாக‌ உள்ள‌ன‌. இப்பொழுது நாம் த‌னியாக‌ நின்று இந்த‌ வ‌ருத்த‌ங்க‌ளை சுட்டிக்காண்பித்தால் நாமும் ஒரு புதிய‌ இய‌க்கமாக‌ க‌ருத‌ப்ப‌டுவோமே அல்லாது உண்மைக‌ள் காதுக‌ளை சென்று சேராது.

இது ஒருபுற‌ம் இருக்க‌ வெளிப்புற‌த்தில் இருந்து மீடியாக்க‌ள் இஸ்லாத்தைப்ப‌ற்றி த‌வ‌றான‌ செய்திக‌ளை ப‌திவுசெய்வ‌தில் மிக‌ச்சாதுரிய‌மாக‌ த‌ங்க‌ள் ப‌ணிக‌ளை செய்துகொண்டுள்ள‌ன‌, ந‌மக்குள்ளே உள்ள‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்கே தீர்வுகாண‌ முடியாம‌ல் திண‌ரும் ச‌முதாய‌த்த‌லைவ‌ர்க‌ள் எங்கே மீடியாக்க‌ளைப்ப‌ற்றி யோசிக்க‌ ........

செய்தி இப்ப‌டி இருக்க‌ தின‌ம் தின‌ம் அன்னிய‌ ஆண்க‌ளோடு ஓடிப்போகும் 
பெண்க‌ளின் எண்ணிக்கையும் அத‌ற்கு ச‌லைக்க‌வில்லை என்ற‌ வ‌கையில் தினம் தின‌ம் புதுப்புது செய்திக‌ள் .... அல்லாஹ் இந்த‌ ச‌முதாய‌த்தைக் காப்பாற்றுவாயாக‌.

க‌ட‌ந்த‌ சில‌ வார‌ங்க‌ளுக்கு முன்னால் நிக‌ழ்ந்த‌ நிக‌ழ்வு ந‌ம்மை நிலைத‌டுமாற‌வைக்கிற‌து. திருச்சியில் உள்ள‌ ஒரு புக‌ழ்பெற்ற‌ க‌ல்லூரியில் ப‌யிலும்  ந‌ம் மார்க்க‌ச‌கோத‌ரி ஒரு மாற்றுமத‌ ச‌கோத‌ரனுட‌ன் போய் திரும‌ண‌ம் முடிக்கிறார். சும்மா அல்ல‌ போகும்போது வீட்டிலிருந்து 120 ப‌வுன் ந‌கையையும் எடுத்துச்சொல்கிறார்.

அத‌ன் பின் அவ‌ர்க‌ள் பிடிக்க‌ப்ப‌ட்டு கேட்க‌ப்படும்போது இந்த‌ 120 பவுன் த‌விர‌ என் வீட்டில் உள்ள‌வ‌ர்க‌ள் வேறு என்ன‌ என‌க்கு செய்துவிட்டார்க‌ள் என்ப‌து போன்ற‌ ப‌தில் வருகிற‌து.

இந்த‌ நிகழ்வின் சோக‌ம் முடிவ‌த‌ற்கு முன் இன்னொரு பெண் த‌ன் காத‌ல‌னுட‌ன் ம‌துரை கோவிலில் த‌ன் திரும‌ண‌த்தை முடிக்கிறார்.

ச‌கோத‌ர‌ர்க‌ளே கொஞ்ச‌ம் சிந்தித்துப்பாருங்க‌ள்...........

இதிலிருந்து ந‌ம் ச‌முதாய‌ப்பெண்க‌ள் பாதுகாக்க‌ப்ப‌ட‌ என்ன‌ செய்ய‌ப்ப‌ட்வேண்டும் என்ற‌ உங்க‌ள் உய‌ரிய‌ க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்யும்ப‌டி வேண்டிக்கொள்கிறோம்.

உங்க‌ள் கருத்துக்க‌ளை tamiltafseer@googlegroups.com, / k-tic-group@yahoogroups.com  இந்த‌ த‌ள‌த்தில் தெரிவிக்கும் ப‌டி வேண்டிக்கொள்கிறோம்.
எப்போது நமது சமுதாய பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகள் டாடி மம்மி எ‌ன்று அழைக்க வேண்டும் எ‌ன்று ஆசை வ‌ந்து, பிள்ளைகளை LKG UKG எ‌ன்று சேர்க்க ஆரம்பித்து அவர்களது மார்க்க கல்வியை இரண்டாம் பட்சமாக கூட அல்லாமல் அதற்கும் கீழாக நினைக்க ஆரம்பித்தார்களோ அப்போது ஆரம்பித்த சமுதாய சறுக்கல் இ‌து. இப்போதாவது நமது சமுதாயம் விழித்துக் கொண்டு ஆரம்ப கட்ட மார்க்க கல்வியை உடநே நமது இள‌ம் பிஞ்சுகளுக்கு ஆரம்பித்து வைக்க வேண்டும். அப்போது தான் நமது அடு‌த்த தலைமுறையாவது, நமது சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்க உதவியாக இருப்பார்கள்.அதற்கு அல்லாஹ் உதவி நன்மையும் உதவியும் செய்வாநாகவும், ஆமீன்

syed mohamed thameem
2/151 zahir hussain street
thirumangalakudi post 612 102

Singapore - 0065 9350 3683

No comments:

Post a Comment