உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, September 14, 2014

மாநிலச் செயலாளர் உட்பட அதிரை ததஜவினர் கூண்டோடு வெளியே!!!

தமிழ் கூறும் இணைய உலகில், பல்வேறு கள்ள வெப்சைட்டுகளை ததஜ தலைமையே நடத்துவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் பரவியிருப்பதை அறிந்திருப்பீர்கள். அத்தகைய குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் நிகழ்வொன்று கடந்த 11.09.2014 வியாழன் அன்று அதிரையில் நடந்தேறியது.

அதிரை ததஜ கிளை பெயரில் அதிகாரப்பூர்வமாக நடத்தப்பெறும் ஒரு வெப்சைட்டில் பல்வேறு அவதூறுகளையும் வம்பிழுப்புகளையும் 'கொள்கையற்றவர்கள்' என்ற விமர்சனத்துடன் தான் உண்டு தன் இறைபணி உண்டு என சென்று கொண்டிருந்த அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பை, எழுதியவனின் பெயரையோ அல்லது அந்த வெப்சைட்டின் அட்மின் பெயரையோ வெளியிட வக்கின்றி 'கோழைத்தனமாக' ஒழிந்து கொண்டு தொடர்ந்து சீண்டி வந்தனர் என்பதும் அதைத் தொடர்ந்து அதிரை தாருத் அமைப்பின் சார்பாக அதன் செயலர் சகோதரர் ஜமீல் அவர்கள் அதிரை ததஜவினரிடம் 'கொள்கையற்றவர்கள் யார்?' என விவாதம் செய்திட பகிரங்க சவால் விட 'திறுதிறு நிலைக்கு' ஆளாகியவர்களை ஒரு வழியாக 11.09.2014 அன்று விவாத ஒப்பந்தத்திற்கு அழைத்து வர, 

இங்க தான் இருக்கு டிவிஸ்டு...

அதிரை தாருத் தவ்ஹீத் குறித்து விமர்சித்த 'ஆம்பள' இன்னைக்காவது வெளியே வருமென்று அதிரை தாருத் தவ்ஹீதினர் எதிர்பார்க்க, அதிரையில் சுமார் 10 ஆண்டுகளாக கூலிக்கு தாஈயாக வேலை பார்க்கும் ததஜ மாநிலச் செயலாளர் அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸியோ, அதிரை ததஜ கிளை நிர்வாகிகளோ உறுப்பினர்களோ யாருமே அங்கில்லை மாறாக கலீல் ரசூல் என்பவரும், செய்யது இப்ராஹீம் என்பவரும் (2 பேரும் மாநில நிர்வாகிகளாம்), முஜிபுர் ரஹ்மான் என்பவரும், மாவட்ட தாஈ (அதிரை கிளையில் எந்த பொறுப்பிலும் இல்லாத) அன்வர் அலி என்பவரும் (இருவரும் மாவட்டமாம்) வீடியோ பதிவு செய்ய வந்தவரும் சென்னையை சேர்ந்தவராம் ஆக அதிரை கிளைக்கு சம்பந்தமில்லாத ஐவர் அதிரை ததஜ கிளை சார்பாக விவாத ஒப்பந்தம் செய்ய அங்கிருந்தார்களாம். (இப்பொழுது மீண்டுமொரு முறை இத்தொகுப்பின் முதல் பாராவை படியுங்கள்)

'கொள்கையற்றவர்கள்' என அதிரை தாருத் தவ்ஹீதை (வெப்சைட் வழியாக) வலிய வம்பிழுத்தவர்கள் அதிரை ததஜ கிளையினர். ஒவ்வொரு முறையும் அதிரை ததஜ கிளை நிர்வாகிகளை தொலைபேசியிலும் நேரிலும் விவாதம் சம்பந்தமாக தொடர்பு கொண்டபோதெல்லாம் 'கேட்டுச் சொல்கிறேன், கேட்டுச் சொல்கிறேன்' என்று பூடகமாக பதில் சொன்னவர்கள், கடைசி வரை விவாத ஒப்பந்த அரங்கிற்குள் கூட உள்ளே அனுமதிக்கப்படாத பரிதாபத்திற்குரியவர்களாகி போன அதிரை ததஜ கிளையினரை நினைத்து 'இந்த நிலையில் பார்ப்பதற்காவா நாங்கள் விதையாக இருந்து அன்றைய அதிரை ததஜ கிளையை உருவாக்கினோம் என உண்மையிலேயே வருத்தப்படுகிறோம்'. யா அல்லாஹ் இன்னும் தலைமையின் சுயரூபம் அறியாமல் அதிரை ததஜ கிளையில் நீடிக்கும் எங்கள் சகோதரர்களுக்கு நேர்வழி காட்டுவாயாக என உளமாற பிரார்த்திக்கின்றோம். இனியாவது 'சுயமாக சிந்தித்து தெளிவு பெறுவார்கள்' எனவும் நம்புகிறோம்.

தட்டிக்கழிப்பதற்காக தலைமை நிர்வாக ததஜகாரர்களால் மிக நீண்ட நேரம் இழுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் ஒரு வழியாக விவாத ஒப்பந்தம் இரு தரப்பினராலும் கையெழுத்திடப்பட்டதாம் ஆனால் உள்ளே என்ன பேசினார்கள் என்ற விபரம் ததஜ அதிரை கிளையினர் ஒருவருக்கும் சொல்லப்படவே இல்லையாம், நெசமா!?

ஒப்பந்தம் போடவே தலைமையிலிருந்தும் மாவட்டத்திலிருந்தும் ஆட்கள் வர வேண்டிய அவலத்திற்கு ஆளாகி விட்டோம் இனி விவாதம் பண்ண தல வருமோ, திருச்சி வருமோ, கோவை வருமோ அல்லது இலங்கை செய்யது இப்ராஹீம்கள் வருவார்களோ என ததஜ அதிரை கிளையினர் குழம்பிப்போய் உள்ளதாக அதிரையர்கள் மத்தியில் பலத்த பேச்சு அடிபடுகிறது.

ததஜவினர் எதிர்பார்ப்பது போல் உலகத்திலுள்ள எல்லோரும் அகோரி மணிகண்டன்கள் இல்லை என்பதை இந்த ஒப்பந்த நிகழ்வு உணர்த்துவதாக அதிரையில் பேசுற பேச்சு துபாய் வரை வந்துவிட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தாருத் தவ்ஹீத் அமைப்பினரோ எம்பெருமானார் ரசூல் (ஸல்) அவர்களின் நெறிகாட்டலின் அடிப்படையில் 'நம்மோடு அல்லாஹ் இருக்கின்றான்' என்ற நன்நம்பிக்கையில் மிக உறுதியாக உள்ளார்களாம்.

தாருத் தவ்ஹீத் அமைப்பினர் ஒப்பந்த வீடியோ பதிவை வெளியிடுமுன் ததஜகாரர்கள் சென்சார் செய்யப்படாத முழு வீடியோவை வெளியிட்டு புண்ணியம் தேடிக் கொள்ள முன்வர வேண்டும். எப்போதுமே ததஜ தான் முதலில் விவாத, சூனிய ஒப்பந்த வீடியோக்களை வெளியிடுவது வரலாறு, அந்த வரலாறு இந்த முறை அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினருக்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் அதிரை ததஜ தம்பிகள் மிக ஆவலுடன் உள்ளதாக கேள்விபடுகிறோம், சீக்கிரம் வெளியிடுங்கள் ஆனால் ஒப்பந்த வீடியோவை பார்த்து விட்டு கூண்டோடு வெளியே நிற்க வைக்கப்பட்ட அதிரை ததஜ கிளையினர் நிரந்தரமாக வெளியேறினால், வழிகெட்ட நவீன முஹ்தஸ்ஸிலா (அல்லாஹ்வுடைய வசனங்களையும் நபி (ஸல்) அவர்களுடைய வழிகாட்டலையும் தனக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்டுள்ள குறுபுத்தியை கொண்டு உரசிப்பார்த்தே ஏற்பேன் என்ற குதர்க்கவாத) சிந்தனையிலிருந்து  அல்லாஹ் அவர்களை காப்பாற்றியதற்காக நிச்சயம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம். 

குறிப்பு: 
மவ்லவி முர்ஷித் அப்பாஸி அவர்கள் அதிரையில் இருந்தவரை பெட்டிப்பாம்பாக அடங்கிக் கிடந்த அசரப்தீன், முர்ஷித் மவ்லவி இலங்கை சென்றதை அறிந்து கொண்டவுடன் அவர்களின் ஜூம்ஆ மேடையில் நாலாந்தர நடையில் விமர்சித்தார் மேலும் கூலிக்கு கூவியதாக பேசினார் (இன்னும் அவர் பேசியதன் பதிவு அவர்களின் வலைதளத்தில் உள்ளது) எனவே, அவர் வரம்பு மீறிய அதே அளவு நானும் மீறியுள்ளேன், அசரப்தீனை அதிரைக்கு கூலிக்கு பேசி கொண்டு வந்தவர்களில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் எனக்கு உண்மையை கொண்டு விமர்சிக்க உரிமை உள்ளது – அதிரை அமீன்

No comments:

Post a Comment