ஒரு முஃமினின் உலகம் எது!!!!?
துபாய் அல் மனார் சென்ரரில் நேற்று நடைபெற்ற மௌலவி அப்துல் பாசித் புகாரி அவர்களின் அருமையான பயான்.......
ஒரு முஃமினின் உலகம் எது என்பதனை மிக அருமையாக புரிய வைத்தார்கள். மறுமையில் சுவர்க்கம்தான் ஒரு முஃமினின் உண்மையான உலகம். அந்த வாழ்வை அடைவதற்காகவே இந்த உலகை ஒரு முஃமின் பயன்படுத்த வேண்டும். அவனுக்கு இந்த உலகி்ல் வரும் கஸ்டங்கள், பிரச்சனைகள், வீணான அவமானங்கள் போன்ற எவைகளுமே அவனின் உண்மையான திசையை மாற்றி விடாது. இந்த உலகின் தோல்விகளோ சோகங்களோ அவனை கவலை கொள்ள வைக்காது. வறுமை அவனை நிலைகுலயச்செய்யாது. பொருளாதாரம் அவனைப் பெருமைப்படவும் வரம்பு மீறவும் வைக்காது.
வாழ்வில் வரும் சகல பிரச்சனைகளையும் ஈமானிய சக்திமூலமே எதிர்கொள்வோம். அதுவே ஒரு முஃமினை அவனின் உண்மையான உலகிற்கு அழைத்துச்செல்லும்.
அல்லாஹ் இந்த உலகத்தில் தரும் கல்வி, செல்வம், செல்வாக்குகள் அனைத்துமே சோதனைகளாகும் அவன் நினைத்தால் அவைகளை மீண்டும் பறித்துவிடவும் பறித்ததை மீண்டும் திருப்பித்தருவும் ஆற்றலுடையவன். எனவே அவன் தந்ததும் அவன் எடுத்துக்கொண்டதும் ஏன்!! உலகிலுள்ள அனைத்துமே அவனுக்குரியதாகும்.
அல்லாஹ்வின் நிஃமத்துகள் விடயத்தில் ஒரு முஃமின் சிந்தனை சுலைமானியப் பார்வை (نظرة سليمانية )யுயடையவனாகவேயிருப்பான். மாறாக காறூனியப் பார்வை (نظرة قارونية) ஒரு மனிதனை அழித்துவிடும். இதிலிருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்வது மிக அவசியமாகும்..... இவ்வாறு மிகவும் கருத்தாழம் மிக்கதாக அவரின் உரை அமைந்திருந்தது இத்தகைய பெறுமதிமிக்க உரைகள் மூலம் அல்லாஹ் நமது வாழ்வை மறுசீரமைப்பானாக .
மௌலவி அப்துல் பாசித் (புகாரி) அவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்கள் குடும்ப அங்கத்தவர்கள் நம் அனைவருக்கும் மன்னிப்பையும் பரக்கத்தையும் நல்குவானாக!
அன்புடன் துபாயிலிருந்து
உங்கள் சகோதரன் நாசர் தைய்யூப்
குறிப்பு:
துபையில் நடைபெற்ற மவ்லவி அப்துல் பாசித் புஹாரி அவர்களின் சிறப்பு பயான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முஸஃபா சகோதரர்கள் அழைத்து செல்லப்பட்டதால் இந்த வார பயான் நடைபெறவில்லை. இன்ஷா அல்லாஹ் வரும் வாரம் வழமைபோல் முஸஃபாவில் மஃரிப் முதல் இஷா வரை நடைபெறும்.
லால்குடி முஸதபா
துபையில் நடைபெற்ற மவ்லவி அப்துல் பாசித் புஹாரி அவர்களின் சிறப்பு பயான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முஸஃபா சகோதரர்கள் அழைத்து செல்லப்பட்டதால் இந்த வார பயான் நடைபெறவில்லை. இன்ஷா அல்லாஹ் வரும் வாரம் வழமைபோல் முஸஃபாவில் மஃரிப் முதல் இஷா வரை நடைபெறும்.
லால்குடி முஸதபா
No comments:
Post a Comment