உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, September 26, 2014

அதிரை ததஜவினருக்கு இறுதி கெடு விதித்து மீண்டும் கடிதம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

அதிரை ததஜவுக்கும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கும் இடையில் சமீபத்தில் விவாத ஒப்பந்தம் ஏற்பட்டதை அனைவரும் அறிவீர்கள் அதன் கதை தனி.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அவர்களின் தலைமையிடமும் அவரை பின்பற்றுவோரிடமும் ஏற்பட்ட பல்வேறு கொள்கை குழப்பங்கள் குறித்து கலந்துரையாடியோ அல்லது அவர்கள் விவாதத்தை திணித்தால் விவாதம் செய்தோ தெளிவு பெற்றிட வேண்டி பல்வேறு காலகட்டங்களில் சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீன் அவர்களால் தனிப்பட்ட முறையில் விளக்கம் கோரும் கடிதங்கள் கொடுக்கப்பட்டும் அவை அனைத்தும் கற்பத்தில் மரித்த பிள்ளைகள் போல் அசைவற்று அவர்களின் வயிற்றிலேயே தங்கிவிட்டது.

இறுதியாக கடந்த ரமலானில் அவர்களின் வெப்சைட்டில் தேவையில்லாமல் தனிநபர் விமர்சனத்தில் இறங்கியவர்களுக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து தங்கள் வயிற்றோடு தங்கிவிட்ட ஆபத்தை ஒரு பெரும் மறதிக்கு பின் உணர்ந்தவர்கள் சகோதரர் நிஜாம் அவர்கள் எழுப்பிய மார்க்க விஷயங்களை விட்டு விட்டு தனிநபர் ஒழுக்கங்கள் பற்றி விவாதத்திட கடிதம் தந்தனர், அந்த கடிதத்திற்கும் சகோதரர் நிஜாம் அவர்கள் பதிலை அவர்கள் விதித்த கெடுக்கு முன்பாக வழங்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அதிர்ச்சியில் செலக்டிவ் அம்னீஷியா என்ற நோயால் தாக்கப்பட்டு சகோதரர் நிஜாம் வாரி வழங்கிய 30 நாட்களும் முடிந்து கூடுதலாக 4 நாட்களும் கழிந்த பிறகும் அசைவற்று இருந்ததால் நேற்றிரவு அவர்களின் மடத்திற்கே சென்று வரும் 05.10.2014க்குள் பதில் தர வேண்டும் என இறுதி கெடு வழங்கி ரமலானுக்கு பிந்தைய தனது மூன்றாவது கடிதத்தை கொடுத்தார்.

சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீன் அவர்கள் கடந்த ரமலானுக்கு பின் வழங்கிய கடிதங்களை வாசிக்க இந்த லிங்கிற்குள் சென்று பார்க்கவும்.
05.10.2014க்குள் பதில் தர கேட்டு இறுதி கெடு விதிக்கப்பட்டு நேற்றிரவு அவர்கள் பாணியிலேயே வழங்கப்பட்ட கடிதத்தை கீழே காணலாம்.




No comments:

Post a Comment