அன்பார்ந்த அதிரைவாழ் முஸ்லீம்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வழமையாக பெருநாள் திடல் தொழுகைகள் மேலத்தெரு சானாவயல் பகுதியில் நடைபெற்று வந்தது இனி இன்ஷா அல்லாஹ் வரும் ஈதுல் ஃபித்ரு முதல் புதிய திடலில் நடைபெறும் என அதிரை ஈத் கமிட்டியினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் வரும் பெருநாள் தினத்தன்று காலை சுமார் 7 மணியளவில் கீழத்தெரு பகுதியில், காட்டுப்பள்ளி தர்காவுக்கு இடதுபுறம் அமைந்துள்ள மைதானத்தில் தொழுகை நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.
குறிப்பு:
பெருநாள் தினத்தன்று ஈத் தொழுகை நேரத்தில் மழை பெய்தால் ALM பள்ளிக்கூட வளாகத்தில் தொழுகை நடைபெறும்.
இவண்
ஈத் கமிட்டி - அதிரை
புதர் மண்டியுள்ள பகுதிகளை சீரமைக்கும் பணிகள் மிகத்துரித வேகத்தில் நடைபெற்று வருவதை காட்டும் படங்கள் கீழே...
தகவல்
அதிரை அமீன்
No comments:
Post a Comment