உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, November 10, 2011

லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள்!


Lipton Tea
பெய்ஜிங்: யூனிலீவர் நிறுவனத்தின் உலகப் புகழ்பெற்ற லிப்டன் டீயில் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதை சீன தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்கப்படும் தேயிலை பிராண்ட் லிப்டன் டீ. யூனிலீவர் நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பான இதில் rare-earth elements எனப்படும் மிக அரிதான ரசாயன கூறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமியில் மிக அரிதாகக் கிடைக்கும் சீரியம், இட்ரியம், எர்பியம் உள்ளிட்ட 17 வகையான தனிமங்கள் தான் ரேர் எர்த் எலிமெண்ட்ஸ். இதில் சில வகை தனிமங்கள், டீ தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. தேயிலை கெட்டுப் போகாமல் இருக்கும், டீக்கு நல்ல வாசனையைத் தரவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், லிப்டன் உள்ளிட்ட 5 வகையான பிராண்டுகளில் இவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக சீனாவின் தரக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

லிப்டன் நிறுவனம் சீனாவில் விற்கும் டீயில் கிலோவுக்கு 2 மில்லிகிராமுக்கு அதிகமாக இந்த தனிமங்கள் உள்ளதாம். இந்தத் தனிமங்களின் அளவுக்கு அதிகமான பயன்பாடு எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பார்முலாவை லிப்டன் உலகம் முழுவதும் பயன்படுத்துகிறதா என்பது தெரியவில்லை. அப்படியிருந்தால், இந்தியாவில் விற்பனையாகும் டீயிலும் பிரச்சனை இருக்கலாம்.
Thanks to: Thatstamil
[IST]

No comments:

Post a Comment