உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, September 2, 2011

02.09.2011 - இன்றைய ஜூம்ஆ மற்றும் ஆலோசணை அமர்வுகள்

ஜூம்ஆ உரை:
அதிரை CMP LANE பகுதியில் அமைந்துள்ள ALM பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெற்ற இன்றைய ஜூம்ஆவில் சகோதரர் (நாச்சியார்கோயில்) ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு குர்ஆனையும் ஹதீஸையும் புரிந்து கொள்வது எவ்வாறு என்ற பொருளில் உரை நிகழ்த்தினார்கள்.
சகோதரர் அவர்கள் தனதுரையில், ஏட்டிக்குப் போட்டியாய் விளங்கிக்கொள்ளுதல் மற்றும் காரிஜியாக்களின் பாணியில் விளக்கங்கள் தருவதால் ஏற்படும் விபரீதங்களையும் விளக்கியதுடன் ஒவ்வொரு ஜமாஅத்தினரும், பிரிவினரும் தங்களுக்கு ஏற்றார் போல் வியாக்கியானங்கள் தருவது சரியா? குர்ஆன் கூறும் உண்மையான அர்த்தம் தான் என்ன வினா தொடுத்து சிந்தனைகளை தூண்டினார்.குர்ஆனையும் ஹதீஸையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கினார்கள் என்று வரலாற்று வரிகளுடன் விளக்கியவர், இன்று சிந்திக்கின்றோம், ஆய்வு செய்கின்றோம் என்ற பெயரில் சிலர் கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்களை நிந்திக்கும் செயல்களை ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டினார். மொத்தத்தில் இன்றைய ஜூம்ஆ வந்திருந்த அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒன்றாய் அமைந்தது.

ஆலோசணை அமர்வு:
இன்று மாலை அஸருக்குப் பின் ALM பள்ளிக்கூட வளாகத்தில் சகோதரர் அதிரை அஹமது அவர்கள் தலைமையில் கூடிய ஆலோசணை அமர்வில் அதிரையில் தவ்ஹீத் மர்கஸ் அமைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன. இன்ஷா அல்லாஹ் வரும் நாட்களில் இது தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், திட்டங்களை விரைந்து முன்னெடுத்துச் செல்லவும் தீர்மானிக்கப்பட்டு, தகவல் திரட்டல்களுக்காக இருநபர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

No comments:

Post a Comment