உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, September 12, 2011

தமுமுகவின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

திட்டமிட்டபடி (11.09.2011) நேற்று மாலை மஃரிப் தொழுகைக்குப் பின், அதிரை பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அதிரையின் கல்வித்தந்தை MKN காதிர் முகைதீன் அப்பா அவர்களின் கொடையை போற்றும் அரங்கில் தமுமுக அதிரை கிளையின் அனைத்து சமய மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டமும் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.
மாநாட்டைப்போல் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் முன்னிருந்த விழா மேடையிலே ஆன்றோரும், சான்றோரும், மருத்துவர்களும், முஹல்லா ஜமாஅத் தலைவர்களும், கிராம பஞ்சாயத்து தலைவர்களும், மமகவின் கூட்டணி கட்சி பிரதிநிதிகளும், வர்த்தக சங்க தலைவர்கள், சங்கங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தமுமுக மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகளுடன் சரிநிகராய் அமரவைக்கப்பட்டும் நினைவு பரிசுகள் வழங்கியும் கண்ணியப்படுத்தப்பட்டனர். 
இச்சீரிய சமூக நல்லிணக்கப் பெருவிழாவில், தமுமுக, மமகவின் மாநில நிர்வாகிகளான பேராசிரியர் ஹாஜா கனி, தமீமுன் அன்சாரி மற்றும் மாநிலப்பொதுசெயலாளர் S. ஹைதர் அலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தவிர்க்க இயலா காரணங்களால் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தமுமுகவின் மாநிலத் தலைவருமான பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. 

அதிரை இஸ்லாமிக் மிஷனுக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசு

இந்த மாபெரும் மக்கள் சங்கமம் துவங்குமுன் ஜில்லென்று ஓர் மழை தூவி அதிரையையும் அவையையும் குளிரூட்டி சென்றது. தேனீக்களுக்கு ஈடான தொண்டர் அணியினர் சுற்றி வந்து உதவ, அதிரை கிளை சகோதரர்கள் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கூட்டத்தின் சிகரமாய் தீர்மானங்கள் அமைந்திருந்தன.

நிகழ்ச்சி முழுமையாக இணையதளம் மூலம் நேரலை செய்யப்பட்டது.

களத்திலிருந்து
அபுஹாரித்
படங்கள்
ஜமால்

No comments:

Post a Comment