உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, September 20, 2011

அதிரை மேலத்தெரு முஹல்லாவில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான பூங்கா.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அன்பிற்கினிய அதிரை வாசிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு. அதிரை மேலத்தெரு வடபுறம் - மரைக்காயர் குளம் மேடு அருகில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பூங்கா சில நாட்களாக செயல்பட்டு வருகிறது.

குழந்தைகள் விளையாடுவதற்கான ஊஞ்சல்கள், ஏறி இறங்கும் சறுக்கை மற்றும் சில பொழுதுபோக்கு விளையாட்டுக்களுக்கான சாதனங்கள் பொருத்தப்பட்டு, சுற்றிலும் முள்கம்பிகளால் பாதுகாப்புச் சுவர் அமைக்கப்பட்டு, மரைக்காயர் குளத்தருகில் குளுகுளு இயற்கைச் சூழலை ரசிக்கும்படியாக சிமென்ட் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.                                                 4                                                               3
எப்படி இருந்த இடம் இப்படி ஆயிருச்சி !
21

 

முன்பு திறந்தவெளி கழிப்பிடமாக இருந்த இடத்தை சமப்படுத்தி, சுத்தம் செய்ததோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதி உதவியோடு கழிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் குழந்தைகளுக்கான பூங்காவாகப் பயன்படுத்துவும் பெருநாள் தினங்களில் பெருநாள் தொழுகைக்கும் இப்பகுதியை பயன்படுத்தும் திட்டம் இருப்பதாக இப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்தார்.


சுற்றுச்சூழலுக்கு கேடாக இருந்த பகுதியை ஊர்மக்களின் பொதுநலனுக்கு ஏற்ப செம்மைபடுத்த உதவியவர்களை இவ்விசயத்தில் பாராட்டியே ஆக வேண்டும்.

இலட்சங்களில் வீட்டுமணைகள் விலை ஏறிவிட்ட போதிலும் அப்பகுதியில் ஓர் பூங்கா அவசியம் என்பதை உணர்ந்து, அதற்கான முயற்சிகளைச் செய்தவர்கள் பாராட்டுக்குறியவர்கள்.


இந்த பூங்கா முற்றிலும் மேலத்தெரு முஹல்லா உள்ளூர் மற்றும்
வெளிநாடு வாழ் சகோதரர்களில் முழு ஒத்துழைப்பில், அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கத்தினரின் (TIYA ) பெரும் முயற்சியால், ஏற்படுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

பெண்கள்  CMP LANE, வள்ளியம்மை நகர் மற்றும் மகிழங்கோட்டை ரோடு வழியாக தினமும் சுப்ஹு மற்றும் மக்ரிப் நேரங்களில் நடை பயிற்சி (WALKING) செய்து வருகின்றனர் இதனால் பெண்களுக்கு இரவு நேரங்களிலும் பாதுகாப்பு பிரச்சனையை கருத்தில் கொண்டு பூங்காவிற்குள் நான்கு புறமும் குறுகிய சிமென்ட் சாலை அமைத்து பெண்கள் பூங்காவிற்குள் நடை பயிற்சி (WALKING) செய்யும் அளவிற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் பராமரிக்க, பாதுகாக்க ஒருவரை நியமனம் செய்துள்ளனர்.

ALM பள்ளிக்கு செல்லும் வழியில் பூங்கா அமைந்துள்ளதால் அங்கு பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மத்தியிலும், ALM பள்ளியில் பெண்களுக்கும் ஜும்மா பயான், தொழுகை நடைபெற்று வருவதால் அந்த வழியில் செல்லும் பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று மாலை நேரங்களிலும், பள்ளி விடுமுறை நாட்களிலும் கூட்டம் அதிகமாக வருகிறார்கள். அனைத்து தெருக்களிருந்தும் பெண்கள், சிறுவர்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு இடமாக இருந்து வருகிறது.தொகுப்பு
அப்துல் காதர்

No comments:

Post a Comment