உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, September 29, 2011

ஒன்று படுவோம்!


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
ஒன்று படுவோம்!

இஸ்லாம் என்பது கப்ரு வலிபாடு, மௌலிது, ஞானப்புகழ்ச்சி, குதிரை மற்றும் யானை ஊர்வலங்கள், அவ்லியாக்கள் பெயரால் நேர்ச்சை, கந்தூரி விழாக்கள், இன்னிசைக் கச்சேரிகள் நடத்துதல், தாயத்து, தகடு, குத்பியத்து, ராத்திபு ஆகியவை தான் சமுதாயத்திலுள்ள பெரியவர்களாலும், முல்லாக்களாலும் காலங்காலமாக தவறாக போதிக்கப்பட்டு கண்மூடித்தனமாக வாழ்ந்து கொண்டிருந்த நாம் இவையெல்லாம் நரகப்படுகுழிக்கு அழைத்துச் செல்கின்ற மாபெரும் பாவச்செயல்கள் என்பதை விளங்கி அவற்றிலிருந்து மீண்டு நேர்வழியை அறிந்து கொண்டு அதன்படி செயல்படும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு வழங்கினான். அவனுக்கே அனைத்துப் புகழும்!

'நீங்கள் நரக படுகுழியின் விளிம்பில் இருந்தீர்கள் அதிலிருந்து அவன் உங்களை காப்பாற்றினான்.' (அல்குர்ஆன் 3:103)

எனினும் இந்த பாக்கியத்தை நாம் சாதாரணமாகப் பெற்று விடவில்லை. அதற்காக நாம் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது ஊரையும், உற்றார் உறவினர்களையும் பகைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஊரில் நமக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளையும், உரிமைகளையும், மரியாதையையும் இழக்க வேண்டி வந்தது. திருமணப் பதிவுப் புத்தகத்தை தர மறுத்ததுடன் மையவாடியில் அடக்கம் செய்ய தடை போட்டனர். பின்னர் பல வழக்குகள் காரணமாக நீதிமன்றம். காவல் நிலையம் என அலைக்கழிக்கப்பட்டோம். மிகப் பெரிய மன வேதனைக்கும் இழிவுக்கும் ஆளாக்கப்பட்டோம். கொள்கை எதிரிகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானோம். நாகூசும் அளவுக்கு இழிசொற்களால் வசை பாடினர். நமது பெண்களைக் கூட விட்டு வைக்காமல் இஸ்லாமிய ஹிஜாப் (பர்தா) அணிந்த பெண்களைப் பார்த்து 'பேய் போகிறது'  என்று எள்ளி நகைத்தனர். இந்த தவ்ஹீத் கொள்கைக்காக நம்மில் அடி உதைகள் வாங்கியவர்கள் ஏராளம் உண்டு.

இவற்றையெல்லாம் கடந்துதான் இன்று இந்த 'தவ்ஹீத்' எனும் பாக்கியத்தை நாம் தக்க வைத்துக் கொண்டுள்ளோம். எனினும் இந்த கடந்த கால உண்மைகள் இன்றைய இள ரத்தங்களுக்கும் புதிய தலைமுறைக்கும் தெரியவில்லை வளர்ந்து வந்த வரலாறும் அது கடந்த வந்த பாதையும் நமது இளைய சமுதாயத்துக்கு கண்டிப்பாக எடுத்துச் சொல்லப்பட வேண்டிய காலம் வந்து விட்டது.

அத்துடன் தவ்ஹீத் என்றால் என்ன? ஷிர்க் என்றால் என்ன? இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இரண்டு ஒன்று சேர முடியுமா? என்ற அடிப்படைக் கல்வி நமது இளைஞர்களுக்கு ஊட்டப்பட வேண்டும்.

இறைத்தூதர்களும் நபிமார்களும் இந்த பூமிக்கு வந்தது ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டுவதற்கும் ஏகத்துவத்தின் அடிப்படையில் மனித சமுதாயத்தை ஒன்று படுத்துவதற்குமேயாகும். கொள்கை விஷயத்தில் யாருடனும் அவர்கள் சமரசம் செய்து கொண்டேதேயில்லை எந்த காரணத்திற்காகவும் அதை அவர்கள் விட்டுத்தரவேயில்லை.


'(நபியே) நீர் விட்டுக் கொடுத்தால் அவர்களும் விட்டுக் கொடுக்க விரும்புகின்றனர்' (அல்குர்ஆன் 68:9)

தவ்ஹீதும் ஷிர்க்கும் ஒரு போதும் ஒன்று சேராது. இரண்டுக்கும் இடையில் கியாமத் நாள் வரை போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். ஒற்றுமை என்ற பெயரில் இரண்டையும் ஒன்றிணைக்க முயற்சிப்பது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போய் சேர்த்து விடும். அது புதியதோர் கலப்படக் கொள்கைக்குத்தான் வழிவகுக்கும். அதனால் தவ்ஹீதின் பரிசுத்தத் தன்மைக்கு களங்கம் ஏற்பட்டு விடும். நபிமார்கள் கட்டிக் காத்து வந்த 'இஸ்திகாமத்' - கொள்கைப்பிடிப்பு கேள்விக்குறியாகிவிடும்.

'இப்ராஹீமிடமும் அவரோடு இருந்தவர்களிடமும் நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. தம் சமூகத்தாரிடம் அவர்கள். 'உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதை நீங்கள் வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள் உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை உங்களுக்கும் எங்களுக்கும் இடையே பகையும் வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டது.' என்று கூறினார்கள்.' (அல்குர்ஆன் 60:4)

தவ்ஹீதும் ஷிர்க்கும் சமமாகாது. தவ்ஹீது - சொர்க்கத்திற்கு கொண்டு செல்லும். ஷிர்க் - நரகப்படுகுழிக்குத்தான் அழைத்துச் செல்லும். தவ்ஹீத்வாதி செய்யும் ஏனைய பாவங்களை அல்லாஹ் நினைத்தால் மன்னித்து அல்லது அதற்கான தண்டனையை வழங்கி பிறகு அவனை சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்வான். ஷிர்க் செய்பவன் எவ்வளவு பெரிய புண்ணியச் செயல்களை செய்திருந்த போதிலும் அவற்றையெல்லாம் அழித்துவிட்டு அவனை அல்லாஹ் நரகத்தில் தள்ளிவிடுவான்.

'எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை திட்டமாக தடுத்து விட்டான். இன்னும் அவர் ஒதுங்குமிடம் நரகம்தான்.' (அல்குர்ஆன் 5:72)

'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்.'அல்குர்ஆன் 4:48-116)

ஷிர்க் செய்பவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வழி கேடர்கள் ஆவர்.

'கியாமத் நாள்வரை தமக்குப் பதில் தராத அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவனை விட மகிவும் வழி கெட்டவன் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.' (அல்குர்ஆன் 46:5)

சமுதாயத்தை ஒன்று படுத்தத்துடிக்கும் ஆர்வலர்கள் அதை எந்த அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்கு அல்லாஹ் சொல்லித் தரும் அறிவுரையைப் படித்துப் பார்ப்பது அவசியமாகும்.

'வேதத்தையுடையோரே! நூம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்கக் கூடாது>அவனுக்கு எவரையும் இணையாக்கக் கூடாது> அல்லாஹ்வை விட்டு விட்டு நம்மில் சிலர் சிலரை கடவுளர்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது> என்ற எங்களுக்கும் உங்களுக்கும் பொதுவான விஷயத்தின் பக்கம் வாருங்கள் என்று கூறுவீராக!'அவர்கள் புறக்கணித்து விட்டால்> 'நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்' என்று கூறிவிடுங்கள்! (அல்குர்ஆன் 3:64)

எனவே ஷிர்க்கில் இருப்பவர்களை மீட்டு தவ்ஹீதின் பக்கம் கொண்டு வரும் (ஃபர்ழான) முதல் கட்டாயக் கடமையைச் செய்வதன் மூலம் சமூகத்தில் உண்மையான ஒற்றுமையை நிலைநாட்ட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!.

என்றும் இறைப்பணியில்
கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாய சேவையில்
அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM)- அமீரகம்.
Email.aimuaeadirai@gmail.com

No comments:

Post a Comment