உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, September 23, 2011

புதுப்பட்டிணத்தில் நடந்தது என்ன?

நேற்றைய தினம் காவிக் காடயர்கள் புதுப்பட்டிணத்தில் நிகழ்த்திய வெறியாட்டம் குறித்து முதலில் கிடைத்த செய்தியினை பதிந்திருந்தோம். இன்று நேரடி களத்தொகுப்பு சுருக்கமாக...

நேற்று (22.09.2011) மாலை முஸ்லீம் சிறுவர்கள் சிலர் அபு மெட்ரிக் பள்ளி அருகே சிரித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளனர், அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த 3 வாலிப ரவுடிகள் அந்த சிறுவர்களிடம் வலிய வந்து வீண் வம்பு செய்துள்ளனர் பின்பு அவர்களிடம் இருங்கட உங்களை வந்து ஒரு கை பார்க்கின்றோம் என மிரட்டி விட்டு முன்பே தயாராக கடல் வழியாக வரவழைக்கப்பட்டிருந்த வெளியூர் காவி பயங்கரவாதிகளை ஊருக்குள் அழைத்து வந்து டிரான்ஸ்பார்மர் லைன் மீது சைக்கிள் செயினை வீசியெறிந்து மின்சாரத்தை துண்டித்து விட்டு பள்ளிவாசலையும் அருகிலிருந்த 3 வீடுகளையும் கற்களை கொண்டும் அரிவாளை கொண்டும் தாக்கியுள்ளனர், இதில் பொதுமக்கள் பலரும் கற்களால் தாக்கப்பட்டுள்ளனர். (நாம் முன்பு பதிந்திருந்தபடி தீவைப்பு சம்பவங்கள் ஏதுமில்லை). 

மனித மிருகங்கள் வெறியாட்டம் நடத்தி முடித்தபின் கடல் வழியாகவே தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதல் நடந்தபோது முஸ்லீம்கள் யாரும் எதிர்தாக்குதலில் ஈடுபடவில்லை மேலும் அதற்கான அவகாசமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழமைபோல் எல்லாம் முடிந்தபின் பட்டுக்கோட்டை DSP. அசோக்குமார் மற்றும் தஞ்சை டவுன் DSP. சிவநவநீதக்கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போலீஸ் படை குவிக்கப்பட்டு காவிகள் தரப்பில் இதுவரை 7 மீனவர்களை கைது செய்துள்ளனர். முஸ்லீம்கள் தரப்பில் 10 பேரை கேட்டு போலீஸார் ஜமாஅத்தினர்களை தொந்தரவு செய்து கொண்டுள்ளனர், அதாவது தாக்குதலில் முஸ்லீம்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தும் இதை கலவரமாக கணக்குக் காட்டத் துடிக்கிறது காவல்துறை.

அதிரையில் ஆர்ப்பாட்டம்
புதுப்பட்டிணத்தில் இறையில்லம் தாக்கப்பட்டதை கண்டித்தும், காவி பயங்கரவாதிகளை கைது செய்யக் கோரியும், பாதுகாப்பில் கோட்டை விட்ட காவல்துறையின் மெத்தனப்போக்கை கண்டித்தும் இன்று ஜூம்ஆ தொழுகைக்குப் பின் சுமார் 2.30 மணியளவில் அதிரை முஸ்லீம்களின் திடீர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
தக்வா பள்ளி முனையிலிருந்து துவங்கிய பேரணி பேரூந்து நிலையத்தின் அருகே பெருந்திரளாக ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சகோதரர் அப்துல்லா மற்றும் சகோதரர் சாகுல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இயக்க வேறுபாடின்றி ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நேரில் எஸ்.எம்.பாக்கர்
இன்று அதிரையில் நடைபெற்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்கூட்டதிற்காக வருகை தந்திருந்த INTJ மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறச்சென்றார். ஊர் எல்லையில் எஸ்.எம்.பாக்கர், செங்கிஸ்கான், மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளை சந்தித்த ஊர் ஜமாஅத் மற்றும் பல்வேறு இயக்க சகோதரர்களும் நடந்தவற்றை விவரித்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள், தேவையேற்பட்டால் புதுப்பட்டிணம் மக்களுக்காக தமிழகம் தழுவிய போரட்டமாக முன்னெடுத்துச் செல்லப்படும் என உறுதியளித்தனர். இறுதியாக போலீஸூடன் போராடி ஊருக்குள் சென்று பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் வீடுகளை பார்வையிட்டதுடன் அவற்றை வீடியோ ஆவணமாக்கித் திரும்பியது INTJ மீடியா பரிவு.
கடைசிச் செய்தி
இன்று இரவு சுமார் 9 மணியளவில் கிடைத்த ஊர்ஜிமற்ற தகவலின் படி 2 முஸ்லீம்கள் கைது செய்யப்பாட்டுள்ளதாக தெரிகிறது.

களத்தொகுப்பு
அதிரைஅமீன்

1 comment:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  அன்பார்ந்த அனைத்து சகோதரர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்
  புதுப்பட்டினத்தில் வாழும் முஸ்லீம் சமுதாயத்தர்களின் மீது ஹிந்துத்துவ விசமிகளால் நடத்தப்பட்ட மதக்கலவரம் அல்லாஹ்வின் பேரருளால்
  இன்று தமிழகம் முழுவதும் அறியப்பட்டு அனைத்து சகோதரர்களும் தனது
  பிரச்னையாக நினைத்து முன்னிற்பது மிகவும் சந்தோசமளிக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.

  புதுப்பட்டினம் மக்களுக்காக உதவிசெய்ய நினைக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ் உதவிக்கொண்டு இதன் பலனை மறுமையில் பெறலாம். இன்ஷா அல்லாஹ்.!

  யா அல்லாஹ்! இந்த பிரச்னையால் துவண்டுகிடக்கிற புதுப்பட்டினம் மக்களுக்கும், எனக்கும், அவர்களுக்காக முன்னிற்கும் அனைத்து சகோதரர்களுக்கும் வெற்றியையும், நல்லருளையும் வழங்கிடுவாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

  இன்ஷா அல்லாஹ்! வருகிற வெள்ளிக்கிழமையன்று (30/09/2011) அன்று மாலை நான்கு மணிக்கு சேதுபாவாசத்திரம் காவல்நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர். எதற்காகவென்றால் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தவர்களை மட்டும் கைது செய்கிறார்கள். ஆனால் கலவரத்தை செய்து இழப்புகளை ஏற்படுத்திய மதக்கலவரக்காரர்களை இதுவரை முஸ்லீம் ஜமாத்தார்கள் கொடுத்த புகாரின்பெயரில் (17 நபர்கள்) கைது செய்யவில்லை. முஸ்லிம் ஜமாத்தார்களை திருப்திப்படுத்துவதற்காக புகார் கொடுக்காத நபர்களை
  புதுப்பட்டினம் கரையூர் தெருவைச் சார்ந்த தற்போதைய ஊராட்சி மன்றத்தலைவர் ராமசாமி கொடுத்த தகவலின்படி ஏதும் செய்யாத,கலவரத்திற்கு ஈடுபடாத அப்பாவி (ஹிந்து) மக்களை காவல்துறை கைது செய்தியிருக்கிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் கரையூர்தெரு ஹிந்துக்களின் எவ்வித பிரச்சனைக்கும் ஈடுபடுவதில்லை அதனால் இவர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகத்தான் இவர்கள்மீது பொய்யான புகார் கொடுத்து ஊ ம த ராமசாமிக்கும், சேதுபாவ சத்திரம் காவல்துறை அதிகாரி பூபதிக்கும் அதிகளவில் நட்பு இருப்பதால் தான் இதனடிப்படையில் நடந்து இருக்கிறது. ஆனால் முஸ்லீம் ஜமாத்தார்கள் கொடுத்த புகாரின்படி கைதுசெய்யவில்லை. இதனால் சேதுபாவ சத்திரம்
  காவல்துறை உயர் அதிகாரியை கண்டித்தும், பள்ளிவாசலை சேதப்படுத்திய
  கலகக்காரர்களை உடனே கைது செய்யவேண்டும் என்கிற கோரிக்கையின்படி இன்ஷா அல்லாஹ் வருகிற வெள்ளியன்று முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர்கள்.

  ஆகவே! புதுப்பட்டினம் முஸ்லீம் மக்களுக்காக அனைத்து சகோதர்களும் எவ்வித விருப்பு வெறுப்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அல்லாஹ்வின் பேரருளால் ஒற்றுமையோடு கலந்துகொள்ள வேண்டும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  நமது சமுதாயம் அல்லாஹ் உதவிக்கொண்டு நலமுடன் வாழவேண்டும் என்றால் நாம் அனைவரும் ஒற்றுமை என்கிற சங்கிலியால் பிணைக்கப்பட வேண்டும். இன்ஷா அல்லாஹ்...!

  அல்லாஹ் அக்பர்.! இன்ஷா அல்லாஹ் அனைவரும் வாரீர்! ஒன்றுமையை காட்டுவீர்கள்..!

  அனைத்து சகோதர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் KO

  --
  என்றும் அன்புடன்
  இப்படிக்கு
  இனியவன்

  ReplyDelete