அதிரை
நியூஸ் கல்வி விருது மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா
எதிர்வரும் [ 25-05-2015 ] அன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் அதிரை
பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில்
நமதூர் பகுதி பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில்
அதிக மதிப்பெண்கள் பெற்று, முதல் நான்கு இடங்களை பெற்றுள்ள மாணவ மாணவிகள்,
கல்விச்சேவையில் சிறந்து விளங்கும் ஆசிரியை ஆசிரியர்கள், கல்வி
நிறுவனங்கள், பல்வேறு துறைகளில் சாதனைபடைத்தவர்களுக்கு சிறப்பு
விருந்தினர்கள் முன்னிலையில் விருது வழங்கி கெளரவிக்கப்பட உள்ளது.
மேலும்
அதிரையை சேர்ந்த கல்வியாளர்கள் பலர் நமதூர் பகுதியின் ஏழை மாணவ,
மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு கல்வி உதவித்தொகை வழங்கவும், நமதூர்
ஒவ்வொரு பள்ளிகளில் நடப்பாண்டில் SSLC, +2 அரசு பொதுத்தேர்வுகளில் தனிப்
பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்ற மாணவ,
மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கவும் முன்வந்துள்ளனர்.
இந்த விழாவில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
--
அதிரை நியூஸ்
No comments:
Post a Comment