அளவற்ற அருளாளன் நிகரற்ற
அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும்
கோடைகால இஸ்லாமிய நல்லொழுக்கப் பயிற்சி முகாம்
இன்னும்; உங்களைப்படைத்தவன் அல்லாஹ் தான்> பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்கிறான்; கல்வியறிவு பெற்றிருந்தும் (பின்) எதுவுமே
அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம் வரையில் வாழ்ந்திருப்பவர்களும்
உங்களில் உண்டு - நிச்சயமாக அல்லாஹ்
நன்கறிந்தவனாகவும்> பேராற்றல் உடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 16:70.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எவன் மறுமையை பயந்து> தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து> இரவு காலங்களில் நின்றவனாகவும்> சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றானோ> (அவன் நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவானா? நபியே!) நீங்கள் கேளுங்கள்: கல்வி அறிவுடையவனும்> கல்வி அறிவில்லாதவனும் சமமாவார்களா? (இந்தக் குர்ஆனைக்
கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தாம். அல்குர்ஆன் 39:9.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு மனிதனின் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம்
செயலற்றவைகளாகி விடுகின்றன.
மரணத்த பின்பு மனிதன் கூடவே செல்லும் அம்மூன்று செயல்கள்-
1.சதக்கத்துல் ஜாரியா (எனும் நிலையான தான தர்மங்கள்)
2.பலன் தரும்
கல்வி (இம்மை மறுமை இரண்டிற்க்கும் நன்மை பயக்கும்
கல்வி).
3.பெற்றோருக்காக துஆ செய்யும் (பிரார்த்திக்கும்) நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்ஷா அல்லாஹ்> இவ்வருட கோடைக்கால பயிற்சி முகாம் வழமைபோல்>
எதிர்வரும் 10.05.2015 முதல் 25.05.2015 வரை தினமும் காலை 9 மணிமுதல்
அதிரை> CMP லேன் பகுதியில் அமைந்துள்ள AL மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தகுதிவாய்ந்த ஆலிமாக்களை கொண்டு நடைபெறவுள்ளது.
விண்ணப்பப் படிவங்கள் இன்று பிலால் நகர் தர்பியா சென்டரிலும்> நாளை காலையில் முகாம் நடைபெறும் AL மெட்ரிக் பள்ளி வளாகத்திலும் கிடைக்கும்.
மாணவிகள் அனைவரும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றது.
அதிரை தாருத் தவ்ஹீத்
அதிராம்பட்டிணம்.
No comments:
Post a Comment