உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, November 13, 2014

துபையில் நடைபெற்ற அப்துல் பாசித் புஹாரி அவர்கள் வழங்கிய தர்பியா

அல்லாஹ்வின் பேரருளால் நேற்றிரவு (13.11.2014 வியாழன் இஷாவுக்கு பின்) துபை அல்கோஸ் பகுதியில் இயங்கும் அல் மனார் சென்டரின் தமிழ் தஃவா பிரிவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட தர்பியா வகுப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில், மவ்லவி அப்துல் பாசித் புஹாரி அவர்கள் கலந்து கொண்டு 'அமீருல் முஃமினீன் கலீபா உமர் (ரலி)' அவர்களின் தியாக வாழ்வின் சில சம்பவங்களிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் குறித்து கேட்போர் உள்ளங்கள் கரையும் வண்ணம் அழகிய முறையில் எடுத்துரைத்தார்கள்.

இன்று சில நவீன முஃதஸ்ஸிலாக்களால் ஸஹாபாக்களின் ஈமானிய தியாக வாழ்க்கை எள்ளிநகையாடப்படும் காலக்கட்டத்தில் வாழும் நமக்கு உமர் (ரலி) போன்ற, சொர்க்கத்திற்கு முன்னறிவிப்பு செய்யப்பட்ட நபித்தோழர்களின் இறையச்சமும் வாழ்வுமுறையும் இதுபோல் எடுத்துச் சொல்லப்படுவது நம்முடைய மறுமை வாழ்விற்கு மிகவும் பிரயோஜனம் தரக்கூடிய ஒன்றாகும்.

வியாழன் இரவன்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் ஆண்களும் பெண்களும் வழமையை போல் அதிகளவில் வருகை தந்திருந்தனர்.

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 28.11.2014 வெள்ளியன்று அல்கோஸ் அல்மனார் சென்டர் திறந்தவெளி அரங்கில், மவ்லவி அப்துல் பாசித் புஹாரி அவர்கள் சொற்பொழிவாற்றும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பயனடைய அன்புடன் அழைக்கின்றோம்.
No comments:

Post a Comment