உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, November 21, 2014

கந்தூரிக்கு எதிராக RDO அலுவலகத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் (ADT)

அதிரையின் கடற்கரைத் தெருவில் நடைபெறவிருக்கும் கந்தூரி தொடர்பாக இன்று (21.11.2014) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு, கடற்கரைத் தெரு கந்தூரிக் கமிட்டியினர் வந்திருந்தனர்.

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக

1. அதிரை அஹ்மது (தலைவர்)
2. ஜமாலுத்தீன் புகாரீ (துணைத் தலைவர்)
3. ஜமீல் முஹம்மது ஸாலிஹ் (செயலாளர்)
4. அப்துர் ரஹ்மான் (துணைச் செயலாளர்)
5. நிஜாமுத்தீன் (பொருளாளர்)
6. அஹ்மது ஹாஜா (உறுப்பினர்)
7. கமாலுத்தீன் (உறுப்பினர்)

ஆகியோர் கலந்துகொண்டோம்.



கந்தூரி வழிபாடும் ஊர்வலமும் இஸ்லாத்துக்கு எதிரானவை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ததோடு, அவற்றில் எங்களுக்கு எவ்வித உடன்பாடும் இல்லை என்பதை, கூட்ட நடவடிக்கைக் குறிப்பில் எழுத வைத்தோம்.

வழக்கமாக அமர்வுக் கூட்டத்தை வழிநடத்திச் செல்லவேண்டிய கோட்டாட்சியரும் உள்ளூர் நடப்புகளை விவரிக்கக்கூடிய அதிரை நகரக் காவல்துறை ஆய்வாளரும் இல்லாமல் அமர்வு தொடங்கியது. மூன்று நாட்களுக்கு முன்னரே நமதூருக்குப் பதவியேற்று வந்திருக்கும் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நமதூர் நிலவரங்களைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. உருப்படியாக அழைப்பாணை தயாரித்து அனுப்பத் தெரியாமல் கந்தூரிக் கமிட்டியினரைப் பற்றியே குறிப்பிடாமல் அழைப்பாணை வந்தது. ஆவணமாகப் பதிவாகிவிட்ட அழைப்பாணையை மாற்றவேண்டும் என்றுகூடத் தெரியாதவராக வட்டாட்சியர் செயல்பட்டார். மாவட்ட ஆட்சியாளருக்கு நாம் அனுப்பிய வேண்டுகோள் மனுவைக்கூட அவர் படித்துப் பார்க்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

நகரக் காவல்துறை ஆய்வாளர் அனுப்பியிருந்த குறிப்புகளின் அடிப்படையில் கீழ்க்காணும் 4 நிபந்தனைகளைக் கந்தூரிக் கமிட்டியினர் ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டனர்:

1. கந்தூரி ஊர்வலம் செல்லும் வழி: ஹாஜா நகர், ஈஸிஆர் ரோடு, தக்வாப் பள்ளி, கீழத் தெரு, (பாக்கியாத் பகுதி நீங்கலாக) மேலத் தெரு, பெரிய நெசவுக்காரத் தெரு, சிறிய நெசவுக்காரத் தெரு, மெயின் ரோடு, தரகர் தெரு, பள்ளிவாசல் தெரு வழியாக மட்டும் ஊர்வலம் செல்ல அனுமதி.

2. ஊர்வலத்தில் 6 வண்டிகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

3. ஊர்வலத்தை மாலை 4:30 முதல் இரவு 7:30 மணிக்குள் முடித்துக் கொள்ளவும்.

4. ஊர்வலம் புறப்படும் இடத்தில் மட்டும் குறைந்த அளவாக வாணவேடிக்கைகள் நடத்திக் கொள்ளலாம்.

Thanks to:
http://adiraidaaruttawheed.blogspot.in/2014/11/blog-post_41.html

No comments:

Post a Comment