உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, November 20, 2014

ததஜவினர் நடத்திய ஒப்பந்த பேச்சுவார்த்தை எனும் அராஜகம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

நேற்றைய தினம் சென்னையில் அப்பாஸ் அலி அவர்களுக்கும் ததஜவிற்கும் இடையில் விவாத ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதை அறிவித்திருந்தோம் அதன் தொடர்பில் மனதை பதைபதைக்க வைக்கும் செய்திகள் சில...

விவாத ஒப்பந்தம் செய்திட அப்பாஸ் அலி மற்றும் இருவர் துணைக்கு செல்ல, ததஜ தரப்பிலிருந்து மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட செய்யது இபுறாஹீம், கலீல் ரஸூல், யூசுப் என 3 அயோக்கியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

விவாத ஒப்பந்த நிகழ்வை வீடியோ பதிவு செய்திட இருதரப்பிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றாலும் அப்பாஸ் அலி அவர்கள் தரப்பில் வாடகை வீடியோ கேமராமேன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அந்த வீடியோ கிராபர் மாலை 6 மணிக்கு மேல் வேறு வேலை இருக்கிறது என்று சென்றுவிட, அதற்கு பின் தான் ததஜ பயங்கரவாதிகள் தங்கள் புத்தியை காட்டியுள்ளனர்.(ததஜவினரில் திருவிளையாடலை வீடியோகிராபர் விஷயத்தில் சந்தேகிக்க வேண்டியுள்ளது).

அறை கதைவை அடைத்து அப்பாஸ் அலி அவர்களை வெளியேறவிடாமலும், இழிவாக விமர்சித்தும், அடிப்பதற்கும் பாய்ந்துள்ளனர். அப்பாஸ் அலி அவர்கள் கூட சென்றிருந்த சகோதரர் ஒருவர் போலீஸை அழைத்து அப்பாஸ் அலி அவர்களுக்கு அடிவிழாமல் காப்பாற்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், அல்லாஹ்வின் உதவியால் மிகவும் பொறுமை காத்த அப்பாஸ் அலி அவர்கள் ஒரு வழியாக ஒப்பந்த பேச்சுவார்த்தையை நிறைவு செய்துவிட்டு வந்துள்ளார்கள்.

எதிர்வரும் 21.12.2014 அன்று 'சூனியம்' என்ற தலைப்பிலும்

27.12.2014 மற்றும் 28.12.2014 ஆகிய இருதினங்கள் 'ஸஹீஹான ஹதீஸ்கள் ஒருபோதும் குர்ஆனுக்கு முரண்படாது' என்ற தலைப்பிலும்

இருகட்டங்களாக திருச்சியில் விவாதம் நடத்திட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் பேப்பர் வடிவில் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

முன்னதாக, தவறான போதனைகளின் சொந்தக்காரான பீஜே என்பவர் தன்னுடன் விவாதிக்க வரவேண்டும் என அப்பாஸ் அலி அழைத்ததற்கு அவர் வர மாட்டார் உடல்நிலை சரியில்லை என சொல்லப்பட்டுள்ளது. பீஜேயின் உடல்நிலை சரியாகும் வரை காத்திருக்கின்றேன் என சொன்னபோதும் அவர் விவாதிக்க வரவே மாட்டார் என மறுக்கப்பட்டுள்ளது.

(இனி பீஜேயுடன் விவாதிக்க வேண்டுமென்றால் அகோரி மணிகண்டன் மாதிரி டுபாக்கூர் ஆட்கள் பெயரில் ஒப்பந்தம் போட்டுவிட்டு தான் முஸ்லீம்களே போய் விவாதிக்க முடியும் போல் தெரிகிறது. முஃமீன்களை, முஸ்லீம்களை கண்டு ஓட்டமெடுக்கும் நிலைக்கு ஆணவக்காரர்களை ஆளாக்கிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்).

மவ்லவி முர்ஷித் அப்பாஸி அவர்கள் குறிப்பிடுவது போல் இனி அப்பாஸ் அலி போன்ற முஃமீன்களுடன் விவாதிக்க ததஜ சருகுகள் தான் வருவார்கள் என்பதாலும், இன்னும் ஒப்பந்தம் கையெழுத்திடப்படாததாலும், குறைந்தபட்சம் மவ்லவியாக பட்டம் பெற்றுள்ள, மவ்லவியாக இதுவரை வெளியுலகிற்கு ததஜவினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவருடன் தான் மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள் விவாதிக்க செல்ல வேண்டும் மேலும் அந்த ஒப்பந்த பத்திரத்திலும் இந்த நிபந்தனை தெளிவாக குறிப்பிடப்படவும் வேண்டும் மாறாக மனிதத்தோல் போர்த்திய மிருகங்களான மேற்படியார் மூவரில் எவர் வந்தாலும் அந்த விவாதத்தை புறக்கணிக்க வேண்டும்.

குறிப்பு: நான் மேலே குறிப்பிட்டுள்ள மிரட்டல், அடிக்க முயற்சித்தல், இழிவாக பேசுதல், அறை கதவை அடைத்து வெளியேறவிடாமல் தடுத்தல் போன்ற அத்தனை வரம்புமீறிய அராஜகங்களும் நடந்தது உண்மை என அல்லாஹ்வை சாட்சியாக்கி கூறுகிறேன்.

அதிரை அமீன்

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது என அறந்தாங்கி மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள் ஆற்றிய உரையை கேட்க இந்த லிங்கை சுட்டுங்கள்.

No comments:

Post a Comment