உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, November 9, 2014

15.11.2014 அறந்தாங்கியில் மவ்லவி அப்பாஸ் அலி விளக்கவுரையாற்றுகிறார்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள் விளக்கவுரையாற்றுகிறார்

அன்பான சகோதரர்களே

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 15.11.2014 சனிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின் துவங்கவுள்ள மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில்,

முன்னாள் ததஜ மேலாண்மை குழு உறுப்பினரும், ததஜவின் முன்னாள் மாநிலப் பேச்சாளரும், ஆன்லைன்பீஜே என்ற இணையதளத்தில் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தவருமான

மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள் 
கலந்து கொண்டு விளக்கவுரை நிகழ்த்தவுள்ளார்கள்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனைவரும் வருக

மேலும் விபரங்கள் விரைவில் இன்ஷா அல்லாஹ்..

குறிப்பு:
சமீபத்தில் அதிரையில் நடந்த விவாதம் வரை பல ஸஹீஹான ஹதீஸ்கள் ததஜவினரால் மறுக்கப்பட்டும், ததஜவினரை தவிர ஏனைய உலக முஸ்லீம்கள் அனைவரையும் முஷ்ரிக்குகளாக கருதும் போக்கை கண்டித்தும் ததஜவிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. 

சகோதரர் பீஜேவிற்கு பகிரங்க விவாத அழைப்பு.....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... 

அன்பான சகோதரர்களே !!! 

நான் சிஹ்ர் சம்பந்தமாக நன்கு ஆய்வு செய்துவிட்டுத் தான் தவ்ஹீத் ஜமாத்திலிருந்து வெளியேறினேன். பணத்திற்காக நான் வெளியேறியிருந்தால் இவர்களை கண்டு பயந்தோடும் நிலையே எனக்கு ஏற்படும். அல்லாஹ் அப்படிப்பட்ட இழிவை எனக்குத் தரவில்லை.நான் சத்தியத்திற்காக வெளியேறிய காரணத்தால் இது பற்றி விவாதம் செய்யும் மன உறுதி எனக்குள்ளது. 

தவ்ஹீத் ஜமாத்தில் உள்ள அதிகமான மக்கள் என் விளக்கத்தை அவசரமாக எதிர்பார்க்கிறார்கள். சரியான விளக்கம் தரப்பட்டால் கண்டிப்பாக அவர்களும் உலக முஸ்லிம்களை முஷ்ரிக்குகளாக ஆக்கும் இந்த வழிகேட்டிலிருந்து நிச்சயம் மீளுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. 

எனவே நான் சகோதரர் பீஜே அவர்களை விவாதத்திற்கு அழைக்கிறேன். அவருக்கு இயலாவிட்டால் தவ்ஹீத் ஜமாத்தில் உள்ள மற்ற தாயிக்களை இது பற்றி விவாதம் செய்ய அழைக்கிறேன். 

இந்த விவாதம் தெருச்சண்டையைப் போன்றில்லாமல் வெறுமனே கருத்துப்பரிமாற்றமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஒரே நிபந்தனை. தவ்ஹீத் ஜமாத் மோதல் போக்கையும் தனிநபர் தாக்குதல்களையும் கைவிட்டு அழகிய முறையில் என்னுடைன் விவாதம் செய்ய முன்வர வேண்டும். 

தவ்ஹீத் ஜமாத்தில் சையது இப்ராஹீமைத் தவிர்த்து மற்ற யார் வேண்டுமானாலும் என்னை இதற்காக தொடர்பு கொள்ளலாம். இயக்கப் பற்றை ஒதுக்கி வைத்துவிட்டு மார்க்கப்பற்றுடன் சிந்திக்குமாறு சகோதரர்களை அன்பாய் கேட்டக்கொள்கிறேன்.
 பதிவு-சகோ.அப்பாஸ் அலி

No comments:

Post a Comment