உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, November 19, 2014

FLASH NEWS அப்பாஸ் அலி மற்றும் ததஜவினர் இடையே விவாத ஒப்பந்தம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

ததஜவின் முன்னாள் ஆய்வாளரும் மவ்லவியுமான அப்பாஸ் அலி Misc அவர்களுக்கும் ததஜவினருக்கும் இடையில் இன்று (19.11.2014) சென்னையில் விவாத ஒப்பந்தம் கையெழுத்தானது. காலை சுமார் 10 மணிக்கு துவங்கிய ஒப்பந்த நிகழ்வு இரவு சுமார் 9 மணி வரை இழுத்தடிக்கபட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தியது.

எதிர்வரும் 21.12.2014 அன்று திருச்சியில் 'சூனியம்' சம்பந்தமான முதற்கட்ட விவாதமும், இரண்டாம் கட்டமாக 'ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? என்ற தலைப்பிலும் ஒருவருக்கொருவர் என்ற அடிப்படையில் விவாதம் நடத்திட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

வழமைபோல் 'சூனியம்' 'ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படும்' போன்ற நவீன முஃதஸ்ஸிலா கொள்கை குழப்பங்களின் சூத்திரதாரி விவாதிக்க வரமாட்டார் என மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், விவாத ஒப்பந்தத்திலிருந்தே வெருண்டடோட செய்யும் நோக்கில் மெண்மை குணம் கொண்ட அப்பாஸ் அலி அவர்களை மிரட்டுதல், அவமானப்படுத்துதல், அசிங்கமாக அர்ச்சித்தல் என மனதை நோகடிக்கும் அராஜக செயல்கள் பலமாக அரங்கேறியதாகவும், ஒரு கட்டத்தில் காவல்துறையினர் தலையிட்டு அப்பாஸ் அலி அவர்களை மீட்கும் நிலை ஏற்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

முழுமையான விபரங்கள் நாளை இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment