உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, November 16, 2014

அப்பாஸ் அலியின் அறந்தாங்கி நிகழ்ச்சிக்குப் பின் நடந்தது என்ன? (Video Updated)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்ஹம்துலில்லாஹ், மவ்லவி அப்பாஸ் அலி அவர்களின் விலகலுக்குப் பின் நடைபெற்ற முதல் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் சிறப்புடன் நிறைவுற்றது.ததஜ தலைமை சார்பாக இ.முஹமது என்பவர் மூலம் எழுதிய 2வது கடிதத்தின் கடைசி பாராவில் முன்பே மிரட்டியிருந்தபடி இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அப்பாவி ததஜ தொண்டர்களுடன் குண்டர்களும் கலந்து கொண்டனர். அறந்தாங்கி நிகழ்ச்சிக்கு அனுப்பியது போல் அப்பாஸ் அலி மட்டுமல்ல மற்ற தவ்ஹீத் தாஈக்கள் பேசும் கூட்டங்களுக்கும் தொடர்ந்து அனுப்ப வேண்டும் என ததஜ தலைமையை கேட்டுக் கொள்கின்றோம். குறைஷிகள் குர்ஆனுடைய வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளும் தங்கள் காதுகளில் விழக்கூடாது என்பதற்காக பஞ்சுகளை காதில் திணித்துக் கொண்டு திரிந்த நிலையில் உள்ள அப்பாவி ததஜவினர் இதன்வழி சத்தியத்தை விளங்க வாய்ப்பு ஏற்படும் இன்ஷா அல்லாஹ்.

குண்டர்கள் வீடியோ வெளியாகிவிட்டது
https://www.facebook.com/video.php?v=1525739181011933&set=vb.100007275972339&type=2&theater

தீவிரவாத எதிர்ப்பு!!!? நாடகங்களை நடத்தி வரும் நடிகர் கூட்டத்தின் ஒரு சில குண்டர்கள் கூட்டம் நிறைவுற்றபின் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்ள முயன்றனர் அவர்களிடம் மவ்லவி அப்பாஸ் அலி எழுப்பிய கேள்வி ஒன்றே ஒன்று தான் அது, நான் இன்று வழங்கிய விளக்கவுரையில் தவறு இருக்கின்றதா? என்ற எதிர் கேள்விக்கு அவர்கள் அனைவரும் 'இல்லை' என்று ஒருசேர மறுதலித்தனர். இந்த பதிலை அந்த சகோதரர்கள் வாயிலிருந்தே வெளிப்படுத்திய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

அப்பாவி ததஜவினர் மவ்லவி அப்பாஸ் அலி அவர்களை நோக்கி எழுப்பிய முக்கிய கேள்வியான 'உங்கள் வயதென்ன? பீஜே வயதென்ன? அவருடைய அனுபவத்துடன் எப்படி மோதலாம் என ததஜ அப்பாவி தொண்டர்கள் கேட்டது ததஜ அல்லாத பிற தவ்ஹீத் தாஈக்கள் மிகத்தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய விஷயத்தை இலகுவாக படம்பிடித்துக் காட்டியது. ததஜ அல்லாத தாஈக்களே! உங்களுடைய பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து இந்த அப்பாவிகளுக்கு விளக்கம் தர போகிறீர்களா? அல்லது வழமைபோல் அவர்களின் வசையாடலுக்கும், பெண், பொருளாதாரம் போன்ற அவதூறுகளுக்கும் பயந்து ஒதுங்கிக் கொள்ளப்போகிறீர்களா?

அப்பாஸ் அலி அவர்களின் மிகவும் அமைதியாக, பண்பட்ட பேச்சு மற்றும் விளக்கங்களினால் திருப்தியுற்ற ததஜ சகோதரர்களில் ஒரு சிலர் ததஜவிற்கு முழுக்குப் போட்டனர் மேலும் முழுக்குபோடும் சிந்தனையில் பலர் கலைந்தது, ஆக்ரோஷமாக வந்து அடங்கிப்போன அவர்களின் புற நடவடிக்கைகயின் மூலம் தெரிந்தது. அப்பாஸ் அலி அவர்கள் மீதான ததஜ தலைமையின் வழக்கமான பொருளாதார குற்றச்சாட்டுக்களை ததஜவினரே மதிக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. ஏகத்துக்கும் எகிறியவர்களை அவர்களிலிருந்தே சிலர் அடக்கினர்.

இறுதியாக, மறுக்கப்படும் ஸஹீஹான ஹதீஸ்கள் மற்றும் ஷிஹ்ர் சம்பந்தமாகவும் ததஜவினருக்கு எழும் அனைத்து சந்தேகங்களையும் தங்களுடைய தலைமைக்கு தெரிவித்து இன்ஷா அல்லாஹ் நடைபெறயிருக்கின்ற விவாதத்தில் எழுப்பும்படி கோரிக்கை வைத்து விடைபெற்றார்.

களத்திலிருந்து தகவல் தொகுப்பு
குர்ஆன் ஹதீஸ் பிரியன்No comments:

Post a Comment