உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, November 21, 2014

ததஜவுடன் விவாத ஒப்பந்தம் நடந்த போது உடனிருந்த சகோ. சலீம் அவர்களின் அறிக்கை


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சகோ. அப்பாஸ் அலியுடன் ததஜ செய்த விவாத ஒப்பந்தம் சம்பந்தமான ததஜ வெளியிட்டுள்ள அறிவிப்பையும், முதல் வீடியோ தொகுப்பையும் பார்த்தேன்.

அந்த ஒப்பந்தத்தின் போது கூட இருந்தவன் என்பதால் அதை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது, ஒரு திருடன் திருடிவிட்டு ஓடும்போது தான் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று திசை திருப்புவதற்காக, திருடன்... திருடன்... புடிங்க என்று முதலில் கத்திக்கொண்டு ஓடுவதுபோல்தான் இவர்களது அறிவிப்பும், மிக தந்திரமாக எடிட் செய்யப்பட்ட வீடியோ தொகுப்பும்உள்ளது.

சூனியம் சம்பந்தமாக மட்டுமே விவாத அழைப்பு என்று அப்பாஸ் அலி தெளிவாக குறிப்பிட்டுதான் விவாத அழைப்பு கொடுத்தார். வேறு குற்றச்சாட்டுகள் குறித்து பேசமாட்டோம் என்று இவர்களும் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டு சென்னையில் இடத்தையும் தேர்வு செய்து விவாத ஒப்பந்தத்திற்கு வரச்சொன்னார்கள்.

ஆனால் அங்கு நடந்தது என்ன?

ஒரு மோசமான எதிரி, நிராகரிப்பாளன் கூட இவ்வளவு அராஜகமாக நடந்துக் கொள்ள மாட்டான். அந்த அளவிற்கு அநாகரிகமான வார்த்தைகளாலும், செய்கைகளாலும் குத்தி குதறி எடுத்தார்கள்.

அசாதாரணமான சூழ்நிலையை ஏற்படுத்தி அப்பாஸ் அலியை நிலைகுலையச் செய்து அவரை அங்கிருந்து வெளியேற்றி, விவாத ஒப்பந்தத்திலிருந்து அப்பாஸ் அலி ஓட்டம் என்று மக்களிடத்திலே கொண்டு போக வேண்டும் என்பதுதான் அவர்களுடைய ஒரே நோக்கமாக இருந்ததை புரிந்துக்கொள்ள முடிந்தது.

ஒரு கட்டத்தில் நிலைமை கை மீறிப்போய் போலிஸ் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அல்லாஹ் அக்பர். அப்பாஸ் அலி அவர்கள் உச்ச பட்சமாக தான் அவமானப்படுத்தப்பட்டதையும் மிகவும் பொறுமையாக சகித்துக்கொண்டு, எப்படியும் இந்த விவாதம் நடந்தேயாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து ஒப்பந்தத்தை போடவைத்து அல்லாஹ்வுடைய உதவியினால் சாதித்தார் என்பதுதான் உண்மை.

இன்ஷாஅல்லாஹ். அங்கு என்ன நடந்தது என்ற உண்மையை சொல்லும் வீடியோ எடிட் செய்யப்படாமல் அப்படியே மக்கள் பார்வைக்கு வைக்க இருக்கிறோம். நியாய உணர்வுள்ள மக்களே, பார்த்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்.

https://www.facebook.com/salimkaraikal?fref=ts


No comments:

Post a Comment