உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, November 6, 2014

அப்பாஸ் அலி விலகல் - ததஜவின் வெளக்கெண்ணெய் விளக்கத்தின் மீது எழும் சந்தேகங்கள்



அப்பாஸ் அலி நீக்கம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் விளக்கம்
செய்தி வெளியிடப்பட்ட நாள் Wednesday, November 5, 2014, 14:19

கொள்கைச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இந்த கொள்கை சகோதரர் என்ற ஒரு வார்த்தையை மட்டும் வாசித்த உடனே, தக்லீத் வாதிகள் அப்படியே உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை ஜில்லுன்னு குளிர்ந்து போயிருவாங்க...! பின்னே எங்கே இந்த அறிக்கையில் உள்ள சாரம்சத்தை அறிவை கொண்டு யோசிக்க இடமிருக்கு...? 
  
நம் ஜமாஅத்தில் பிரச்சாரகராக இருந்து வந்த அப்பாஸ் அலி குர்ஆனுக்கு முரண்படும் செய்திகள் விஷயத்தில் கொள்கை முரண்பாடு கொண்டு விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் நம் ஜமாஅத்தில் இருந்து விலகியுள்ளது உண்மையாகவே வரவேற்கத்தக்கதாகத் தான் ஜமாஅத் கருதுகிறது.

அப்பாடா, கீழே விழுந்தாலும் மீசையிலே மண் ஓட்டலப்பா....!

அவரது செயல்பாடும் நிலைபாடும் ஜமாஅத்திற்கு உகந்ததாக இல்லை என்பதற்காக அவர் பல முறை உயர் நிலைக்குழுவில் கண்டிக்கப்பட்டுள்ளார்.

எங்கள் ஜமாத்தில் ஒருவரின் நிலைபாடு சரியில்லை என்றால் உடனே அவரை ஜமாத்தை விட்டு தூக்கி ஏறிந்து விடுவோம் என்று மார்தட்டும் இந்த ஜமாஅத், அப்பாஸ் விசயத்தில் பலமுறை மீறப்பட்டும் பலமுறை கண்டிக்க மட்டுமே காரணம் என்ன..?.  (தவறு) இருக்கு.....! ஆனா (நடவடிக்கை) இல்லை....!!.

அது குறித்து சுருக்கமாக சில தகவல்களைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.

வெளிநாடுகளுக்கு பிரச்சாரப் பணிக்காக ஜமாஅத்தின் சார்பில் ஜமாஅத்தின் செலவில் அனுப்பப்படுவோர் எக்காரணம் கொண்டும் அங்குள்ள கிளைகளிடமோ தனி நபர்களிடமோ அன்பளிப்புகள் மற்றம் சன்மானம் பெறக் கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. 

அப்ப உள்நாட்டில் நடக்கும் பிரசாரத்திற்கு அன்பளிப்பும் சன்மானமும் வாங்கலாமா...?

இது குறித்து 09.04.12 அன்று பகிரங்கமாகவும் ஜமாஅத் சார்பில் எல்லா மண்டலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு மண்டலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அப்பாஸ் அலி மட்டும் இதை மீறி பெரிய அளவில் அளிக்கப்பட்ட அன்பளிப்புகளையும் பணத்தையும் பெற்று வந்தார். இது பின்னர் தெரிய வந்த போது உயர் நிலைக்குழுவிலை வைத்து கடுமையாக்க் கண்டிக்கப்பட்டு வெளிநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தார்.


09.04.2012  முன்பே தவறு நடந்துள்ளது என்று தெரிந்தே அப்பாஸை இயக்கத்தில் தொடரவிட்டதின் மர்மம் என்ன...? (தவறு) இருக்கு.....! ஆனா (நடவடிக்கை) இல்லை....!!.

ஆன்லைன் பீஜேயில் கேள்விக்குப் பதில் அளிக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.  

இதுவரைக்கும் தாம் கேட்ட கேள்விக்கெல்லாம் அண்ணன் பி.ஜே தான் பதில் சொல்றார் என்று மீண்டும் மீண்டும் கேள்வி கேட்ட வாசகர்களை மடையர்களாக்கிய ஏமாற்று வித்தை தற்போது வெளிவந்து விட்டது.

இதற்காக ஒரு கேள்விக்கு இவ்வளவு என்று ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டது. இதில் ஏற்கனவே பதில் கொடுக்கப்பட்ட பல கேள்விகளுக்கு மீண்டும் பொய்யான கணக்குக் காட்டி பணம் பெற முயற்சிக்கும் போது அதை சைய்யத் இப்ராஹீம் சுட்டிக்காட்டியதுடன் நிர்வாகக்குழுவில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டார்.

கேள்வி கேட்கும் வாசகர்களுக்குத்தான் இதுவரை பத்திரிக்கையாளர்கள் ஊக்கத்தொகை கொடுத்து வந்ததை நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம். ஆனால் பத்திரிக்கை வரலாற்றில் முதன்முறையாக......., பி.ஜே ஆன்லைனில் பதில் சொல்வதற்கு அப்பாஸிற்கு ஊக்கத்தொகை கொடுக்கும் பழக்கத்தை அண்ணன் ஜமாஅத் ஏற்படுத்தி, மக்களின் பணத்தை பாழாக்கிய சம்பவமும் அரங்கேறியுள்ளது வெளிவந்துள்ளது. மக்களின் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இந்த ஜமாஅத் மீது என்ன நடவடிக்கை...?

இதுபோன்று நெல்லையிலிருந்து சென்னைக்கு ஜுமுஆ உரை நிகழ்த்த வந்த போது தலைமையில் ஜும்ஆ நிகழ்த்தி விட்டு போக்குவரத்து பெற்றார். மறுநாள் தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதற்கு தனியாக போக்குவரத்து கேட்டார். மாநிலச் செயலாளர் சாதிக் அப்பாஸ் அலியிடம் உங்களுக்கு தான் போக்கு வரத்து பணம் கொடுத்து விட்டோமே எனக் கேட்டபின் சுதாரித்து பணம் வேண்டாம் எனக் கூறினார். இதற்காகவும் நிர்வாகக்குழுவில் கண்டிக்கப்பட்டார். இதில் இருந்து அவர் பணத்துக்காக எதையும் செய்யும் தன்மையைப் புரிந்து கொள்ளலாம்.

ஜும்மா பயானுக்கு மட்டும் வந்தவர் அதற்கான செலவினை அந்த கிளையிடம் பெற்றுக்கொண்டார். ஆனால் தலைமையகத்தில் ஆலோசனை கூட்டத்திற்கு வந்தவர் அந்த கிளையில் இருந்து நடந்தா வரமுடியும். அதற்கு தனியாகத்தானே போக்குவரத்து கொடுக்கணும். 

பிஜே அவர்கள் இது குறித்து அவருக்கு அறிவுரை கூறினார். இப்படி நடந்து கொண்டதை அவரும் உணர்ந்து வருத்தம் தெரிவித்தார், இவரது இந்தப் பணத்தாசை இவரைக் கொள்கையை விட்டு வெளியேற்றி விடும் என்று நிர்வாக குழுவில் ஆலோசனை செய்யும் அளவுக்கு இவரது நிலை இருந்தது.

பணத்திற்காக கொள்கையை விட்டுவிடும் அளவிற்கு இவரது நிலை இருந்தது என்று தெள்ளத்தெளிவாக தெரிந்த பின்பும், இவரை அண்ணன் ஜமாத்தில் தொடர வைத்தது யார்....? ஏன்?? எதற்காக...??? இதிலிருந்து இவர்கள் கொள்கையற்றவர்கள் என்பது தெள்ளத்தெளிவாகின்றது அல்லவா....?
 
இவர் பண விஷயத்தில் சரியாக இல்லை என்பதால் வெளிநாட்டு மண்டலங்களுக்கு மீண்டும் பழைய சுற்றறிக்கை அனுப்பப்பட்டதுடன் உணர்விலும் போடப்பட்டது.

பழைய சுற்றறிக்கையை மீண்டும் வெளிநாட்டு மண்டலங்களுக்கு அனுப்பி எச்சரிக்கை செய்ததை உறுதிபடுத்தும் இவர்கள், இதே அறிக்கையில்,
ஆனால் அப்பாஸ் அலி மட்டும் இதை மீறி பெரிய அளவில் அளிக்கப்பட்ட அன்பளிப்புகளையும் பணத்தையும் பெற்று வந்தார். இது பின்னர் தெரிய வந்த போது உயர் நிலைக்குழுவிலை வைத்து கடுமையாக்க் கண்டிக்கப்பட்டு வெளிநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தார்.” என்று நா கூசாமல் அண்டப்புளுகை அவிழ்த்துவிட்டு விட்டு, அதே அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை படியுங்கள்.........


ஆனால் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு பத்து நாட்களுக்கு முன் சவூதிக்கு பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டவர் இப்போதும் ஜமாஅத் நிலைபாட்டை மீறி அன்பளிப்புகள் பெற்று வந்துள்ளார், இது குறித்து ஜமாஅத் விசாரிக்கும் என்பதற்காக அவர் அவசரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்று கருதுகிறோம்.

பத்து நாட்களுக்கு முன் சவூதிக்கு பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டவர் இப்போதும் ஜமாஅத் நிலைபாட்டை மீறி அன்பளிப்புகள் பெற்று வந்துள்ளார், என்று கூறி, வெளிநாட்டில் பிரச்சாரம் செய்ய தடை செய்யப்பட்டவரை சவுதிக்கு பிரச்சாரம் செய்ய அனுப்பும் அளவிற்கு இவர்களுக்கு கொள்கையில் கோளாறு உள்ளது. இவர்தான் வெளிநாட்டிற்கு சென்றால் பணம் வாங்கி வந்துவிடுகின்றார் என்று தெரியுமல்லவா ...? பின்னே ஏன்  சவுதிக்கு அனுப்பினீர்கள்..? ஏம்பா சவூதி இந்தியாவிலா உள்ளது....?


இதுபோன்ற காரணங்களினால் அவர் வெளியேற வேண்டியவர் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

அண்ணன் ஜமாஅத் கொள்கைபடி வெளிநாட்டில் அன்பளிப்பு பெறக்கூடாது என்ற விதியை மீறி அன்பளிப்பு பெற்ற அப்பாஸ் மீது நடவடிக்கை எடுத்தாகிவிட்டது. ஆனால் அண்ணன் ஜமாத்தின் சுற்றறிக்கையை மீறி, அன்பளிப்பை கொடுத்த அந்த சவூதி வள்ளல் யார்....? அவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் பாயவில்லை......? வாங்கியது தப்பு என்றால் சுற்றறிக்கையை மீறி கொடுத்தும் தப்புதானே...?

அடுத்ததாக ஜமாஅத்தின் அடிப்படைக் கொள்கைக்கு மாற்றமாக தனிப்பட்ட நபர்களிடம் இவர் பேசியுள்ளார் என்ற விபரம் தெரிய வந்து 12.11.2013 அன்று இது குறித்து பேசுவதற்காக உயர் நிலைக் குழு கூட்டப்பட்டது.

தர்கா வழிபாட்டுக்காரர்களும் மத்ஹபு வழிபாட்டுக்காரர்களும் செய்வதை நாம் விமர்சிக்கக் கூடாது. அவர்கள் கூறுவதற்கும் ஆதாரம் உண்டு எனக் கூறினார். உயர்நிலைக் குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது.

தர்கா வழிபாட்டை நியாயப்படுத்தி ஷிர்க்கை உறுதி செய்த அப்பாஸ் மீது அப்பொழுதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை...? நடவடிக்கை எடுக்காமல் அதிர்ச்சியாக இருந்தது என்று மட்டும் கூறி, ஷிர்க்கிற்கு ஒட்டுமொத்த ஜமாத்தும் துணை போனது ஏன்...? இதை தற்போது கேட்கும் எங்களுக்கு அல்லவா பேரதிர்ச்சியாக உள்ளது.

ஒரு ஹதீஸ் பற்றி பேசும் போது பீஜே அவர்களிடம் இதைப் பலவீனமாக ஆக்கிவிடுவோமா என்று அப்பாஸ் அலி கேட்டார். பலவீனமான ஹதீஸை பலவீனம் என்று சொல்வது வேறு. சரியான ஹதீஸைப் பலவீனமாக்குவோமா என்று கேட்பது வேறு என்று பீஜே அவர்கள் அதைக் கண்டித்த விபரத்தையும் சபையில் அம்பலப்படுத்தினார்.

இந்த ஜமாத்தை விட்டு நான் வெளியேறக் காரணமே “ அண்ணன் ஜமாஅத்தில் சரியான ஹதீஸ்களை சரமாரியாக அதிராம்பட்டினம் விவாதம் உட்பட மறுத்ததுதான்” என்று அப்பாஸ் கூறுகின்றார். இந்த குற்றச்சாட்டை அண்ணன் ஜமாஅத் மீது கூறிய அப்பாஸ் மீதே, அதே குற்றசாட்டை கூறி தப்பிக்கப்பாற்பது ஏன்....? ஆக, ஒட்டுமொத்த ஜமாத்தும் மக்களை தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்தியதை அல்லாஹ் அவர்களை கொண்டே அம்பலப்படுத்தி உள்ளான்.


ஆனால் இலங்கையில் நடந்த விவாதத்திற்கு சென்ற இந்த பி.ஜே குழுவினர், சரியான ஹதீஸை லைப் ஆக்கிவிடுவோம் என்று அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி கூறியதை பற்றி கேள்வி கேட்டபோது அது சும்மா தமாசுக்கு அப்படி கூறினார் என்று சப்பை கட்டு கட்டியதேன்...? பிர்தவுசிக்கு ஒரு முடிவு அப்பாஸிற்கு ஒரு முடிவா...?

நமக்கு பதில் சொல்ல முடியாவிட்டால் பலவீனமாக்கி விடுவோமா என்ற கேட்டவர் தற்போது இறை அச்சத்தைக் காரணம் காட்டியுள்ளார். இவர் எந்த ஆதாயத்துக்காக மாறினார் என்பதையும் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதையும் விரைவில் அறிந்து கொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.

உயர்நிலைக்குழுவில் இருந்த ஒவ்வொருவரும் இதைக் கடுமையாகக் கண்டித்தனர். ஒரு பாமரனுக்கு உள்ள கொள்கைத் தெளிவு கூட உங்களுக்கு இல்லை என்று ஆலிமல்லாத உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் அவரிடம் கேட்கும் அளவுக்கு எல்லா வழிகேட்டையும் நியாயப்படுத்தினார்.

எனவே நீங்கள் தெளிவு அடையும் வரை பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் மேலாண்மைக் குழு உறுப்பினர் பொறுப்பை விட்டும் விலகுமாறு உயர் நிலைக் குழு உத்தரவிட்டு அவ்வாறு ராஜினாமா செய்தார்.


“ஒரு பாமரனுக்கு உள்ள கொள்கைத் தெளிவு கூட உங்களுக்கு இல்லை என்று ஆலிமல்லாத உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் அவரிடம் கேட்கும் அளவுக்கு எல்லா வழிகேட்டையும் நியாயப்படுத்தினார்.”
என்று கூறும் ஒருவரை சமீபத்தில் நடந்த அதிராம்பட்டினம் விவாதம் நடந்து முடியும் வரை பயன்படுத்திக் கொண்டது ஏன்? யாருக்கு கொள்கை தெளிவு இல்லை...? அப்பாஸிற்கா இல்லை அண்ணன் ஜமாத்திர்க்கா..?

இத்தனை ஆண்டுகள் ஜமாஅத்தில் இருந்துள்ளார் என்பதால் இஸ்லாமியக் கல்லூரி ஆசிரியர் பணியிலிருந்து நீக்க வேண்டாம். வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அகீதா அல்லாத இலக்கணம் உள்ளிட்ட பாடம் மட்டும் நடத்தட்டும் என்று மேலாண்மைக் குழுத் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டதால் அப்போது நீக்கப்படவில்லை.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அதனால் அப்போது நீக்கவில்லை எனக்கூறும் இவர்கள் தற்போது நீக்க காரணம் என்ன...? அப்பாஸின் வாழ்வாதாரம் தற்போது உயர்ந்து விட்டதா...? அல்லது சவூதியில் அப்பாஸ் வாங்கி வந்த அன்பளிப்பு அப்பாஸின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக மாற்றிவிட்டதா...?

புரியாமல் இருந்து விட்டேன். எம் ஐ சுலைமான் அவர்கள் விளக்கம் சொன்ன பிறகு புரிந்து கொண்டேன். எனவே என்னைப் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துங்கள், நான் மனக்குழப்பத்தில் உண்மை அறியாமல் பேசிவிட்டேன் என்று வருத்தம் தெரிவித்தார். பிறகு 03.03.2014 முதல் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். அன்று முதல் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லி பத்து நாட்களுக்கு முன்னர் வரை ஒரு மாதம் ரியாத் ஜித்தா தம்மாம் ஆகிய மண்டலங்களில் பிரச்சாரம் செய்த போது சூனியம் குறித்து ஜமாஅத்தின் நிலைபாட்டைப் பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாக குரானுக்கு முரன்படும் செய்திகள் குறித்து ஆய்வு செய்வதாகக் கூறும் இவர் கடந்த சில மாதங்களில் குரானுக்கு முரன்படும் செய்திகள் குறித்தும் சூனியம் குறித்தும் மாவட்டங்கள் தோறும் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சிகளில் பிரதான தலைப்பாக எடுத்து அமைப்பின் நிலைப்பாட்டையே பேசினார்.

அவர் எங்கே தன் எண்ணம் போல் பேசினார்...?. அண்ணன் ஜமாஅத் என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லியதைத்தானே சொன்னார்.

ஆனால் தற்போது சவுதிக்குப் பயணம் செய்து வந்த பின் அமைப்பிலிருந்து விலகுவதாகவும் அமைப்பின் கொள்கை குறித்து பல மாதங்கள் ஆய்வு செய்ததாக சொல்லும் இவரது இரட்டை நிலை இவர் பணத்திற்காக எதையும் செய்வார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. எனவே பணத்திற்காக கொள்கையை பனயம் வைக்கும் இவரது நடவடிக்கைகளும் கொள்கையிலிருந்து இவர் தடம்புரண்டதும் நிரூபனமான காரணத்தினல் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். இயக்கம் தொடர்பாக இவருடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்.


எனவே பணத்திற்காக கொள்கையை பனயம் வைக்கும் இவரது நடவடிக்கைகளும் கொள்கையிலிருந்து இவர் தடம்புரண்டதும் நிரூபனமான காரணத்தினல்” என்று கூறும் இவர்கள், இவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் தான் இவரை நீக்கவில்லை என்று இதே அறிக்கையில் கூறுவது எதனால்..?


தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை அப்பாஸ் அலியின் இந்த நடவடிக்கையால் ஜமாஅத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இவரை விட பன்மடங்கு பிரச்சாரம் செய்துவந்த ஹாமித் பக்ரி ,இணைவைப்பிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவிட்டு பின்னர், தான் கொண்ட கொள்கையிலிருந்து வழிகெட்டு கப்ருவணங்கியாக மாறிவிட்டார். அவர் தடம்புரண்டபோது. உறுதியுள்ள கொள்கைச் சகோதரர்களிடம் இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

அதுபோலத்தான் அப்பாஸ் அலியின் நிலையும். அப்பாஸ் அலி கொள்கை மாறிப்போனதால் அவருக்கு உலக ஆதாயம் ஏற்படலாம். ஆனால் சூனியம் குறித்தும் குர்ஆனுக்கு முரன்படும் செய்திகள் குறித்தும் மக்கள் மன்றத்தில் அவர் விளக்கமளிக்க முன்வந்தால் நமது கொள்கை சகோதரர்கள் அவருடைய கடந்த கால விளக்கங்களை வைத்தே அவரின் அசத்தியக்கொள்கையை அம்பலத்துவார்கள். இதனால் சத்தியம் மேலோங்கத்தான் செய்யும் இன்ஷாஅல்லாஹ்.

இதே எச்சரிகையைதான் நாங்களும் அங்கு மிச்ச மீதமுள்ள கொள்கை(?) சகோதரர்களுக்கும் கூறுகின்றோம்...!.  இனி நீங்கள் அங்கே இருந்தால் அவர்கள் உங்களையும் இதேபோல வழிகேட்டில் விட்டுவிட்டு, அவர்கள் சொல்ல சொல்லியதை மக்களிடம் சொல்ல வைத்து விட்டு, உங்களுக்கு பிரச்சனை என்று வரும்போது நீங்கள் கூறிய ஆடியோ-வீடியோ பதிவை உங்களுக்கு எதிராகவே திருப்பிவிடும் குறுக்கு புத்தி கொண்டவர்களிடம் வசமாக மாட்டிக்கொள்ளாதீர்கள். இன்று அப்பாஸிற்கு வந்த நிலை நாளை உங்களுக்கும் வரலாம்.

உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதி ஆக்கி வைப்பாயாக்நபி(ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனை நாமும் கேட்போமாக.


இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
பொதுச் செயலாளர்

என்ற இதே துவாவை நீங்களும் கேட்டுவிட்டு அண்ணன் ஜமாத்திலிருந்து அப்படியே வெளியேற நாங்கள் துவா செய்கின்றோம்.

No comments:

Post a Comment