உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, November 6, 2014

ADT vs TNTJ விவாதம் தொடர்பில் வந்த சிறந்த பின்னூட்டங்கள்

Abu Haajar Ahamed Firdhous Ahamed Ashraf சொன்னது…
சகோதரர் அப்துல் ரஜாக் போன்றோர் ADTக்கும் TNTJக்கும் உள்ள வித்தியாசம் வெறும் இயக்க, நிர்வாக ரீதியிலானது தான் என்று எண்ணினால் அது தவறு. புரிந்து கொள்ளுங்கள் சகோதரரே ததஜவைப் பொறுத்து ADTல் உள்ளோர் அனைவரும் ஷிர்க் வைக்கும் முஷ்ரிக்குகள், காஃபிர்கள்; ஏனெனில் ததஜவால் கி.பி. 2000ம் ஆண்டு வாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஷிர்க்கான சூனியம் சம்பந்தமான ஸஹீஹ் ஹதீஸ்களை நம்புகிறார்கள்; 2010ம் ஆண்டு வாக்கில் மன்னடியில் ததஜ உயர்/மேல் நிலைக்குழுவில் கண்டுபிடிக்கப்பட்ட ஷிர்க்கான கந்திருஷ்டியை நம்புகிறார்கள். எனவே அவர்களுக்கிடையே எது தவ்ஹீத், எது ஷிர்க் என்பதிலேயே இன்னும் கருத்து வேறுபாடு உள்ளது.

வெறுமனே ஹத்தம், பாத்திஹா, கூடு, கந்தூரி, மவ்லூது போன்ற வழக்கமான பரலேவிகளின் வழிகேடுகளை எதிர்ப்பது மட்டுமல்ல தவ்ஹீது. அல்லாஹ்வின் வேதத்தையும், அவனுடைய தூதரின் ஸுன்னாவையும் எவ்வித நவீன சிந்தனைகளின் கலப்புமின்றி முன் சென்ற நல்ல தலைமுறையினர் எவ்வாறு விளங்கி செயல்படுத்தினார்களோ அவ்வாறு செயல்படுவது தான் உண்மையான தவ்ஹீத்.

சகோதரர்களே, நன்கு மனதில் பதிய வையுங்கள் “ததஜவின் வழிகேடு சூஃபிகள், பரலேவிகள், கப்றுமுட்டிகளின் வழிகேட்டைக் காட்டிலும் மிக கொடியது”. சூஃபிகள், பரலேவிகளின் நிறுவனர்கள் மரணித்துவிட்டனர்; அவர்களின் வழிகேடுகளும் பல ஆண்டுகளாக மக்களிடம் அறிஞர்களால் (நஜ்தின் இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் தொடங்கி பல நூற்றுக்கணக்கான அறிஞர்களால்) நன்கு எத்தி வைக்கப்பட்டுவிட்டது. ஆனால் ததஜவின் வழிகேடுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் மக்களிடம் “தவ்ஹீத்” என்ற பெயரிலும், “சீர்திருத்தம்” என்ற பெயரில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

இவர்களின் ஆய்வுகளும், மறுஆய்வுகளும் ஆண்டுகள்தோறும் வந்து பல நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்லிம்களை முஷ்ரிக்குகள் என பிரகடனம் செய்கிறது. ஸஹாபாக்கள் உள்ளிட்ட யாருக்கும் தெரியாத ஷிர்க்குகளை இவர்கள் சென்னை மன்னடியில் அமர்ந்து கொண்டு செய்யும் வருடாந்திர ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்துக் கொண்டுள்ளனர். ‘அதற்கு இது முரண்; இதற்கு அது முரண்’ என்ற பாணியில் பல்வேறு ஹதீஸ்கள் கொத்து கொத்தாக தூக்கிவீசப்படுகிறது. யாரெல்லாம் அவர்களின் ஆய்வுகளை ஏற்கவில்லையோ அவர்களெல்லாம் ததஜவைப் பொறுத்து ”முஷ்ரிக்குகள்; அவர்களுக்கு பின்னால் நின்று தொழக்கூடாது; அவர்களிடம் சம்பந்த உறவு கொள்ளக்கூடாது; அவர்கள் அறுத்த உணவை சப்பிடக்கூடாது; அவர்களுக்காக ஜனாசா தொழுகை வைக்ககூடாது; அவர்களுக்காக பாவ மன்னிப்பு கேட்ககூடாது” என்றெல்லாம் ததஜவினரால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இவர்களின் ஆய்வுகள் இன்னும் முற்றுப்பெறவில்லை. இன்னும் தொடரத்தான் செய்வார்களாம்.

இவர்களின் இந்த தீய கொள்கைகளிலிருந்தும், உருவாகி வரும் புதிய தீனிலிருந்தும் தமிழ் பேசும் முஸ்லிம்களை குறிப்பாக சத்திய மார்க்கத்தின் தூய கொள்கைகளின் பக்கம் ஈர்க்கப்பட்டு வரும் நமதூர் இளைய தலைமுறையினரை காக்க வேண்டிய பொறுப்பு சத்தியத்தை அறிந்த அனைவருக்கும் உள்ளது.

Reply வியாழன், நவம்பர் 06, 2014 2:16:00 பிற்பகல் 
 
Abu Haajar Ahamed Firdhous Ahamed Ashraf சொன்னது…
கப்றுமுட்டிகளின் வழிகேட்டை விட, தனது ஆய்வை ஏற்காத முஸ்லிம்களை முஷ்ரிக்குகள், காஃபிர்கள் என்று முத்திரை குத்தும் ததஜவின் வழிகேடு பயங்கரமானது என்று நான் பலமுறை சொல்லியுள்ளேன்.

1400 ஆண்டுகளாக ஸஹாபாக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்திற்கும் தெரியாத ஷிர்குகள் (கண் திருஷ்டி, சூனியம்) சென்னை மன்னடியில் வைத்து கண்டுபிடிக்கபடுகிறது என்று சொல்பவர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

அல்லாஹ் எனக்கும், இயக்க மாயையில் சிக்கி நவீன காதியானிகளாக மாறிக்கொண்டிருப்போருக்கும் நேர்வழி காட்டுவானாக. யா அல்லாஹ், குரானையும் சுன்னாவையும் முன் சென்ற நல்லோர்களின் வழியில், கியாமத் நாள் வரை தொடர்ச்சியாக சத்தியத்தின் மீது எவ்வித நவீன சிந்தனை தாக்கமும் இல்லாமல் நிலைத்திருக்கும் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅ வின் அகீதா மீது நிலைத்திருக்கச் செய்வாயாக.

காலங்கள் தோறும் ஒவ்வொரு நாட்டிலும், பிராந்தியத்திலும் சமுதாயங்களுக்கிடையே தங்களுடைய கவர்சியான பேச்சுகளின் மூலம் மக்களை வழிகெடுத்த சைத்தானிய கூட்டங்களான காதியானிகள், முன்கர் ஹதீஸ், கவாரிஜ்கள், ஜஹ்மிய்யாக்கள், முஃதஜிலாக்கள், ஜபரிய்யாக்கள், அஷாயிராக்கள், மாத்ரூதிகள், இஹ்வானிகள் மற்றும் இன்ன பிற நவீன கூட்டங்களின் தீங்கை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக.
 
Shameed சொன்னது…
அதிராம் பட்டிணம் ஆட்டை கழுதை ஆக்கியது என்று சொல்வார்கள் ஆனால் இன்று வழிகேட்டில் இருந்தவரை (ஹதீஸ் நிராகரிப்பு)இறைவன் உதவியால் நேர்வழி படுத்தி உள்ளது
  •  Thanks to News Source: http://adirainirubar.blogspot.ae/2014/11/tntj.html & http://adirainirubar.blogspot.ae/2014/11/blog-post_6.html
  • No comments:

    Post a Comment