உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, August 7, 2011

அழைப்புப் பணியின் அவசியம் - Part 2


بِشْمِ اللّهِ الرّحْمَنِ الرَّحِيْم
ஈமானுக்கு சிறப்பு:
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள், தீயதைவிட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின் மீது திடமாக நம்பிக்கை கொள்கிறீர்கள்…” (3: 110)
என்ற மேற்படி வசனத்தை நோக்கும் போது ஏலவே நாம் குறிப்பிட்டதை உணரலாம்.
பற்று: அடுத்து ஒருவன் ஒரு கொள்கையில் எவ்வளவு தூரம் நம்பிக்கை வைத்தவன் என்பதை அந்தக் கொள்கைக்காக அவன் செய்யும் தியாகம், அது வாழ அவன் எடுக்கும் முயற்சி என்பவற்றின் மூலமே நாம் உணரமுடியும். அல்லாஹ்வை நான் ஈமான் கொண்டுள்ளேன். இஸ்லாத்தை என் வாழ்க்கைத் திட்டமாகவும், இறைதூதரை என் தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுள்ளேன். நான் இந்த அடிப்படையில் வாழ்வேன் மற்றவர்கள் இப்படி வாழ்வதற்காக எந்த முயற்சியையும் நான் எடுக்கமாட்டேன். அதேவேளை நான் ஏற்ற கொள்கைக்கு எதிராக எவராவது செயல்பட்டால் எனக்கு எரிச்சலோ கோபமோ வராது. அதைத்தடுப்பதற்கு முற்படமாட்டேன் என்ற நிலையில் ஒருவர் வாழ்ந்தால் அவர் கொள்கைப் பற்றுடையவர் என்று எவரும் கூற மாட்டர். உண்மையும் அதுதான்.
இவ்வகையில் இஸ்லாத்தை இதயத்தில் ஏற்று அதைப்பிறருக்கும் எடுத்துச் செல்லும் போதுதான் ஒருவன் இஸ்லாம் என்ற கொள்கையில் பற்றுடையவனாக இருக்க முடியும். எனவே, இறைவன் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் தராதரத்தை மதிப்பிடும் சாதனமாக இந்த அழைப்புப்பணி அமைந்துள்ளது எனலாம்.
வாழ்க்கையின் வெற்றி: மனித வாழ்வின் வெற்றியே இதில் தங்கியிருப்பதாக அல்குர்ஆன் கூறுகின்றது.
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு (நல்ல) அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக் கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)என்ற சூறா அல் அஸ்ரின் கூற்றை நோக்கும் போது அழைப்புப்பணி என்பது ஒரு இஸ்லாமியனின் இலட்சியத்துடன் இரண்டறக் கலந்ததாக இருக்க வேண்டும் என்பதை விளங்கலாம்.
முஸ்லிம் என்பதன் சிறப்பு: முஸ்லிம் என நம்மை நாம் அறிமுகம் செய்து கொள்வதில் பெருமிதம் கொள்கின்றோம். இந்த முஸ்லிம் என்ற பெயர் அழகைப் பெறவேண்டுமானால் நாமும் நல்லமல் செய்வதுடன் பிறரையும் அதன்பால் அழைத்துக் கொண்டு நம்மை நாம் ஒரு முஸ்லிமாகப் பிரகடனப்படுத்த வேண்டும். வெறுமனே முஸ்லிம் எனக் கூறிக்கொள்வதில் அழகோ சிறப்போ இல்லை என்பதை பின்வரும் வசனம் உணர்த்துகின்றது.
அல்லாஹ்வின்பால் (மக்களை) அழைத்து, (தானும்) நற்செயல்செய்து; நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுபவனை விட சொல்லால் மிக அழகானவன் யார்?” (41:33)
இதிலிருந்து நான் முஸ்லிம் எனக்கூறும் நமது வார்த்தை அழகு பெறவேண்டுமென்றால் தஃவாப் பணியில் நாம் ஈடுபடுதல் வேண்டும் என்பதை உணரலாம்.
மார்க்கக் கடமை: தஃவாப் பணிபுரிவது பர்ழுஅய்ன்அனைவரும் அவசியம் செய்தேயாக வேண்டிய கடமையாகும். இப்பணியைச் செய்யாதபோது குற்றவாளியாக நேரிடும் என்ற கருத்தை சில அறிஞர்கள் கூறுகின்றனர். மற்றும் சிலரோ இல்லை இது பர்ழுகிபாயா”, சிலர் செய்துவிட்டால் மற்றவர்கள் மீதுள்ள கடமை நீங்கிவிடும். அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்என்பர்.
தஃவாப் பணியைப் பொறுத்த வரையில் சில போது பர்ழுஅய்னாக உள்ளது. சிலபோது பர்ழுகிபாயாவாக மாறலாம். உதாரணமாக, ஒரு சபையில் மார்க்க முரணான செயல் நடை பெறுகிறது. ஒருவர் அதனைத் தடுக்கின்றார் அத்தோடு அந்தத் தவறு கைவிடப்படுகின்றது. இந்த வேளையில் அங்கிருந்த ஒவ்வொருவரும் அந்தத் தவறைக் கண்டிக்க வேண்டியதில்லை. இப்போது ஒருவர் செய்தால் மற்றவர்கள் மீதுள்ள பொறுப்பு நீங்கிவிட்டது எனலாம்.
மேற்குறித்த அதே சந்தர்ப்பத்தில் ஒருவர் கூறியபின்னரும் அத்தவறு நடைபெறுகின்றதென்றால் அங்கிருக்கக்கூடிய மற்றவர்களும் இவருக்குத் துணையாக தமது அதிருப்தியை வெளிக்காட்டக் கடமைப்படுவர். இப்போது தஃவா பர்ழு அய்னாக மாறும் எனக்கூறலாம்.
எது எப்படியிருப்பினும் தஃவத் பணி பர்ழு-கட்டாயமானது என்பதில் கருத்து வேறுபாடில்லை. நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றும் அனைவரும் இப்பணியைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை சூறா யூசுப்பின் 108-வது வசனம் கூறுகின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...
By. Aduthurai S.Hameed

No comments:

Post a Comment