உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, August 28, 2011

பாங்கு சொல்லும் போது அதை செவிமடுப்பவர்:

ஒரு மனிதர் தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமார்(ரழி)
பாங்கின் அர்த்தம்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
 அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :
முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.
ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) :
தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்
 ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் :
வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
லா இலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை.
 முஅத்தீன் (அழைப்பாளர்) பாங்கு சொல்லும் போது அதை செவிமடுப்பவர் அதே போன்று சொல்ல வேண்டும் 'ஹய்யஅலஸ் ஸலாஹ், ஹய்யஅலல் பலாஹ்' என்று சொல்லும் போது மாத்திரம் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி' என்று சொல்ல வேண்டும், பின்பு முஅத்தீன் 'லா இலாஹ இல்லல்லாஹ்'என்று சொல்லும் போது யார் தூய உள்ளத்துடன் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று பதில் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
 லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


 எவர் 'லா இலாஹ இல்லல்லாஹ்' வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதை உளத்தூய்மையுடன் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
( தொழுகை அழைப்பான) பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும்போது
அல்லாஹூம்ம ரப்ப ஹாதிஹித் தஃவத்தித் தாம்மாத்தி வஸ்ஸலாத்தில் காயிமத்தி ஆத்தி முஹம்மதனில் வஸீலத்த வல்ஃபளீலத்த வப்அஸ்ஹூ மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹூ
பொருள்: பரிபூரணமான இந்த அழைப்புக்கும் நிலைபெறப் போகும் தொழுகைக்கும் சொந்தக்காரணமாகிய அல்லாஹ்வே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு 'வஸீலா' என்ற உயர் பதவியையும் சிறப்பையும் வழங்கி, அன்னாரை நீ வாக்களித்துள்ள புகழுக்குரிய இடத்தில் எழுப்புவாயாக!
என்று யார் ஓதுகின்றாரோ அவருக்கு எனது பரிந்துரையுண்டு' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
உங்களின் சகோதரன்
ஹாஜா- அதிரை

No comments:

Post a Comment