மௌலவி, கான் பாகவி
நோன்பாளிகள் சஹர் உணவு உட்கொள்வதற்காகப் பின்னிரவில் உறக்கத்திலிருந்து விழிப்பது வழக்கம். சற்று முன்கூட்டியே எழுந்தால்,அபரிமிதமான நன்மைகளைப் பெற்றுத்தரும் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். தமிழகத்தைப் பொருத்தவரையில் நள்ளிரவு 2 மணிக்கு எழுவது பொருத்தமாயிருக்கும்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது மக்களுக்குச் சொன்ன முதலாவது அறிவுரை இதுதான்: மக்களே! சலாம் எனும் முகமனைப் பரப்புங்கள்! பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்! மக்களெல்லாம் உறங்கும்போது (நீங்கள் விழித்திருந்து) தொழுங்கள்! சொர்க்கத்தில் சுகமாக நுழைவீர்கள். (திர்மிதீ)
அடுத்து திக்ர் மற்றும் தஸ்பீஹ் ஓத வேண்டும். “அல்லாஹ்வை திக்ர் செய்வதால் உள்ளங்கள் அமைதியடைகின்றன” (13:28)என்கிறது திருக்குர்ஆன். உங்களுக்குத் தெரிந்த திக்ருகளை ஓதலாம்; இருந்தாலும், நபிமொழிகளில் இடம்பெற்றுள்ள திக்ருகளே சிறப்புக்குரியவை ஆகும். பின்வரும் திக்ருகள் நபிமொழிகளில் இடம்பெற்றவையாக இருப்பதால் இவற்றை ஓதிவாருங்கள்:
இதற்குமேல் நேரம் இருந்தால் சஹரிலேயே குர்ஆன் ஓதலாம். குர்ஆன் ஓதுவதன் சிறப்பு குறித்து நிறைய ஹதீஸ்கள் வந்துள்ளன. திருக்குர்ஆனை ஓதிவருபவருக்காக மறுமையில் குர்ஆன் பரிந்துரைக்கும்.அதன் பரிந்துரை ஏற்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்னது அஹ்மத்)
ரமளான் மாத்த்தில் ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுதுவிட வேண்டும். அத்துடன் ஃபர்ளுக்கு முந்திய மற்றும் பிந்திய சுன்னத்துகளையும் தவறாமல் தொழுதுவிட வேண்டும்.
புனித ரமளான் மாதத்தைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர். மற்ற நாட்களை மாற்றமான வழியில் கழிப்பவர்கள்கூட, நோன்பு நாட்களைக் கண்ணியமான முறையில் செலவிட வேண்டும் என்று எண்ணுகின்றனர்.
ரமளான் மாதத்தின் பகல் பொழுதையும் இரவு நேரத்தையும் வணக்க வழிபாடுகளில் செலவழிக்கவேண்டும் என்பது மட்டும் எல்லாருக்கும் தெரியும். எந்த வழிபாடுகள் என்பதோ, அந்த வழிபாடுகளை எந்த நேரத்தில், எந்த வரிசைப்படி நிறைவேற்றவேண்டும் என்பதோ பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை.
எனவே, ரமளான் மாதத்திற்கு ஒரு காலஅட்டவணை இருந்தால் கடைப்பிடிக்க இலகுவாக இருக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பு. அந்த அட்டவணை ஏன் கீழ்க்கண்டவாறு இருக்கக்கூடாது? சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!
புனித ரமளான் வழிபாடுகளில் உண்ணா நோன்பு முதலிடத்தைப் பெறுகிறது. அடுத்து தொழுகை. தொழுகையில் கடமையான தொழுகையும் உண்டு; கூடுதல் தொழுகையும் உண்டு. அடுத்து குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல், துஆ, தானதர்மங்கள் (ஸதகா) என வழிபாடுகள் அணி வகுக்கின்றன.
நள்ளிரவு வழிபாடு
நோன்பாளிகள் சஹர் உணவு உட்கொள்வதற்காகப் பின்னிரவில் உறக்கத்திலிருந்து விழிப்பது வழக்கம். சற்று முன்கூட்டியே எழுந்தால்,அபரிமிதமான நன்மைகளைப் பெற்றுத்தரும் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். தமிழகத்தைப் பொருத்தவரையில் நள்ளிரவு 2 மணிக்கு எழுவது பொருத்தமாயிருக்கும்.
தஹஜ்ஜுத்
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது மக்களுக்குச் சொன்ன முதலாவது அறிவுரை இதுதான்: மக்களே! சலாம் எனும் முகமனைப் பரப்புங்கள்! பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்! மக்களெல்லாம் உறங்கும்போது (நீங்கள் விழித்திருந்து) தொழுங்கள்! சொர்க்கத்தில் சுகமாக நுழைவீர்கள். (திர்மிதீ)
எனவே, நள்ளிரவு இரண்டு மணிக்கு எழுந்து அங்கத் தூய்மை (உளூ)செய்து ‘தஹஜ்ஜுத்’ எனும் இரவுத் தொழுகை தொழ வேண்டும்.இரண்டிரண்டு ரக்அத்களாக எட்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.அவரவருக்குத் தெரிந்த குர்ஆன் அத்தியாயங்களை ஓதித் தொழலாம்.
எனினும், ருகூஉவில் வழக்கமாக ஓதும் தஸ்பீஹுடன் பின்வரும் தஸ்பீஹையும் சேர்த்து ஓதுவது நல்லது.
سُبْحَانَكَ اللّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ ، اَللّهُمَّ اغْفِرْ لِيْ.
சுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க அல்லாஹும்மஃக்ஃபிர் லீ.
பொருள்: இறைவனே! எங்கள் அதிபதியே! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 60, தஸ்பீஹ் எண் - 34)
அவ்வாறே, ருகூஉவிலிருந்து எழும்போது வழக்கமாகச் சொல்லும் سَمِعَ الله لِمَنْ حَمِدَهْஉடன்
رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ، حَمْداً كَثِيْراً طَيِّباً مُّبَارَكاً فِيْهِ.
ரப்பனா வ லக்கல் ஹம்து, ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி.
எனும் புகழ்மாலையையும் சேர்த்து ஓத வேண்டும்.
பொருள்: எங்கள் இறைவா! தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழனைத்தும் உனக்கே உரியவை. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 62, துஆ எண் - 39)
அவ்வாறே, சஜ்தாவில் வழக்கமான தஸ்பீஹ் ஓதியபின்…
سُبْحَانَكَ اللّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ ، اَللّهُمَّ اغْفِرْ لِيْ.
சுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க அல்லாஹும்மஃக்ஃபிர் லீ.
பொருள்: எங்கள் இறைவா! தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழனைத்தும் உனக்கே உரியவை. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 64, தஸ்பீஹ் எண் - 42)
இரு சஜ்தாக்களுக்கிடையே…
اَللّهُمَّ اغْفِرْ لِيْ ، وَارْحَمْنِيْ ،وَاهْدِنِيْ ، وَاجْبُرْنِيْ، وَعَافِنِيْ ، وَارْزُقْنِيْ ، وَارْفَعْنِيْ.
அல்லாஹும்மஃக்ஃபிர் லீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வஜ்புர்னீ, வ ஆஃபினீ, வர்ஸுக்னீ,வர்ஃபஉனீ.
பொருள்: இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக. எனக்கு அருள் புரிவாயாக. என்னை நல்வழியில் செலுத்துவாயாக. எனக்கு ஏற்படுகின்ற சோதனைகளை நிவர்த்திப்பாயாக. எனக்கு விமோசனம் வழங்குவாயாக. எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக. என்னை மேலோங்கச் செய்வாயாக. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 67, துஆ எண் - 49)
தொழுகை அமர்வில், அத்தஹிய்யாத், வழக்கமான ஸலவாத் ஆகியவற்றை ஓதியபின் பின்வரும் துஆக்கள் ஓதுவது கூடுதல் பலன்தரும்:
اَللّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْماً كَثِيْراً ، وَّلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ ،
فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيْمُ.
அல்லாஹும்ம இன்னீ ளலம்த்து நஃப்சீ ளுல்மன் கஸீரா, வ லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த, ஃபஃக்ஃபிர் லீ மஃக்ஃபிரத்தம் மின் இன்திக்க வர்ஹம்னீ
இன்னக்க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்.
பொருள்: இறைவா! எனக்கு நானே வெகுவாக அநீதி இழைத்துக்கொண்டேன். உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, உன் தரப்பிலிருந்து எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக. எனக்கு அருள் புரிவாயாக. நிச்சயமாக நீயே மிகவும் மன்னிப்போனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய். (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 73, துஆ எண் - 57)
اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ،
وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ، اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ.
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மசீஹித் தஜ்ஜால், வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்தி, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் மஅஸமி வல்மஃக்ரம்.
பொருள்: இறைவா! அடக்கத் தலத்தின் (கப்றின்) வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். (மாபெரும் குழப்பவாதியான) மசீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோரு கிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். (ஹிஸ்னுல்முஸ்லிம், பக்கம் – 72, துஆ எண் - 56)
اَللّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ
وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلهِ إِلاَّ أَنْتَ.
அல்லாஹும்மஃக்ஃபிர் லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து,
வ மா அஅலன்த்து, வ மா அஸ்ரஃப்த்து, வ மா அன்த்த அஅலமு பிஹி மின்னீ,
அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு, லா இலாஹ இல்லா அன்த்த.
பொருள்: இறைவா! நான் முந்திச் செய்த, பிந்திச் செய்(ய இருக்)கிற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த, வரம்பு மீறிச் செய்த, என்னைவிட நீ அறிந்துள்ள (இன்ன பிற) பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக. நீயே முன்னேறச் செய்பவன். நீயே பின்னடைவைத் தருபவன். உன்னைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 74, துஆ எண் - 58)
திக்ர்
அடுத்து திக்ர் மற்றும் தஸ்பீஹ் ஓத வேண்டும். “அல்லாஹ்வை திக்ர் செய்வதால் உள்ளங்கள் அமைதியடைகின்றன” (13:28)என்கிறது திருக்குர்ஆன். உங்களுக்குத் தெரிந்த திக்ருகளை ஓதலாம்; இருந்தாலும், நபிமொழிகளில் இடம்பெற்றுள்ள திக்ருகளே சிறப்புக்குரியவை ஆகும். பின்வரும் திக்ருகள் நபிமொழிகளில் இடம்பெற்றவையாக இருப்பதால் இவற்றை ஓதிவாருங்கள்:
سُبْحَانَ الله (33 சுப்ஹானல்லாஹ் (33) - அல்லாஹ் தூயவன்
وَالْحَمْدُ لله (33 அல்ஹம்து லில்லாஹ் (33) - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
وَالله أَكْبَرُ (33 அல்லாஹு அக்பர் (33) - அல்லாஹ் மிகப் பெரியவன்.
أَسْتَغْفِرُ الله (100 அஸ்தஃக்ஃபிருல்லாஹ் (100) - அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்.
لاَ إِلهَ إِلاَّ الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ،
لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْر.
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அவன் ஏகன். அவனுக்கு இணையானவன் யாருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. அவன் அனைத்துப் பொருட்கள்மீதும் ஆற்றல் உள்ளவன். (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 84, துஆ எண் - 69)
اَللّهُمَّ أَنْتَ رَبِّيْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ
وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ
عَليَّ وَأَبُوْءُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ.
அல்லாஹும்ம அன்த்த ரப்பீ லா இலாஹ இல்லா அன்த்த, கலக்த்தனீ வ அன அப்துக்க, வ அன அலா அஹ்திக்க வ வஅதிக்க மஸ்த்ததஅத்து, அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஉத்து,அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூஉ பி தன்பீ ஃபஃக்ஃபிர் லீ ஃப இன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த.
பொருள்: இறைவா! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குக் கொடுத்த உறுதிமொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் பாவங்கள் புரிந்துள்ளேன் என்று உன்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக. ஏனெனில், பாவத்தை மன்னிப்பவர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 100, துஆ எண் - 79)
حَسْبِيَ الله لاَ إِلهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْم.
ஹஸ்பியல்லாஹ், லா இலாஹ இல்லா ஹுவ, அலைஹி தவக்கல்த்து,
வ ஹுவ ரப்புல் அர்ஷில் அளீம்
பொருள்: அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். அவன் மகத்தான அரியணையின் (அர்ஷின்) அதிபதி ஆவான். (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 104, துஆ எண் - 83)
بِسْمِ الله الَّذِيْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي اْلأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ.
பிஸ்மில்லாஹில்லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ழி
வ லா ஃபிஸ்ஸமாஇ வ ஹுவஸ் ஸமீஉல் அலீம்
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (பாதுகாப்புக் கோருகிறேன்). அவனது பெயருடன் பூமியிலும் வானத்திலும் எந்தப் பொருளும் இடையூறு அளிக்க முடியாது. அவன் செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான் . (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 107, துஆ எண் - 86)
أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ.
அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்.
பொருள்: அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகளின் மூலம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 113, துஆ எண் - 97)
لاَ إِلهَ إِلاَّ الله ُالْعَظِيْمُ الْحَلِيْمُ ، لاَ إِلهَ إِلاَّ الله ُرَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ ،
لاَ إِلهَ إِلاَّ الله ُرَبُّ السَّموَاتِ وَرَبُّ اْلأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ.
லா இலாஹ இல்லல்லாஹுல் அளீமுல் ஹலீம், லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில்அளீம், லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ழி வ ரப்புல் அர்ஷில் கரீம்
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அவன் மகத்தானவனும் சாந்தமானவனும் ஆவான். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அவன் மகத் தான அரியணையின் (அர்ஷின்) அதிபதி ஆவான். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அவன் வானங்களின் அதிபதியும் பூமியின் அதிபதியும் சங்கைக்குரிய அரியணையின் அதிபதியும் ஆவான். (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 135, துஆ எண் - 122)
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله.
லா ஹவ்ல வ லா குவ்வத்த இல்லா பில்லாஹ்
யுக்தியும் சக்தியும் அல்லாஹ்வின் மூலமே அன்றி வேறு யார் மூலமும் இல்லை. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 151, துஆ எண் - 152)
اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ ، كَمَا صَلَّيْتَ عَلى إِبْرَاهِيْمَ ،
وَعَلى آلِ إِبْرَاهِيْمَ ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ ، اَللّهُمَّ بَارِكْ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ
كَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهِيْمَ ، وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத், கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம, இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்மபாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத், கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம, இன்னக்க ஹமீதும் மஜீத்
பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனும் ஆவாய்.
இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ அருள்வளம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக் கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ அருள்வளம் வழங்குவாயாக. நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனும் ஆவாய். (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 70, துஆ எண் - 53)
துஆ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒவ்வோர் இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது அல்லாஹ் கீழ்வானிற்கு இறங்கிவந்து, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை ஏற்கிறேன்.என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்” என்று கூறுகின்றான். (ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் – 6321)
அல்லாஹ்விடம் நீங்கள் கேட்க விரும்பும் எந்தக் கோரிக்கையையும் உங்களுக்குத் தெரிந்த எந்த மொழியிலும் கேட்கலாம். இருப்பினும், குர்ஆனில் இடம்பெறுகின்ற துஆக்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லிக் கொடுத்துள்ள துஆக்களும் சிறப்புக்குரியவை ஆகும். அத்தகைய துஆக்களை ஓதிப் பயனடையலாம்.
குர்ஆன் ஓதுதல்
இதற்குமேல் நேரம் இருந்தால் சஹரிலேயே குர்ஆன் ஓதலாம். குர்ஆன் ஓதுவதன் சிறப்பு குறித்து நிறைய ஹதீஸ்கள் வந்துள்ளன. திருக்குர்ஆனை ஓதிவருபவருக்காக மறுமையில் குர்ஆன் பரிந்துரைக்கும்.அதன் பரிந்துரை ஏற்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்னது அஹ்மத்)
ரமளானில் மூன்று முறை குர்ஆனை ஓதி முடிப்பதற்குத் திட்டமிடலாம். அப்படியானால் நாளொன்றுக்கு3 பாகம் (ஜுஸ்உ) ஓத வேண்டும். சஹரில் ஒரு ஜுஸ்உ; நோன்பு துறந்தபின் ஒரு ஜுஸ்உ; பகலில் ஒரு ஜுஸ்உ. இவ்வாறு ஓதிவந்தால், மூன்று குர்ஆன் முடியும். அல்லது 2 முறை குர்ஆனை முடிக்கலாம்.தராவீஹில் ஹாஃபிள் ஓதுவதைக் கவனமாக்க் கேட்டால், அது ஒரு குர்ஆன் ஆகிவிடும்.
தொழுகையும் தர்மமும்
ரமளான் மாத்த்தில் ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுதுவிட வேண்டும். அத்துடன் ஃபர்ளுக்கு முந்திய மற்றும் பிந்திய சுன்னத்துகளையும் தவறாமல் தொழுதுவிட வேண்டும்.
அத்துடன், ரமளான் மாத்த்தின் சிறப்புத்தொழுகையான ‘தராவீஹ்’ தொழுகையில் கலந்துகொண்டு, இயன்றவரை முழுமையாகத் தொழுதுவர வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் இப்புனித மாத்த்தில் அதிகமாகத் தர்ம்ம் செய்வார்களாம்! ஆகவே, இம்மாதத்தில் தானதர்மங்கள் செய்துவாருங்கள். நோன்பாளி நோன்பு துறப்பதற்கு உதவுங்கள்; மாற்றுத் திறனாளிகள்,கைவிடப்பட்ட பெண்கள், ஏழை மாணவர்கள், கௌரவமாக வாழ்ந்து பிள்ளைகளால் துரத்தப்பட்ட பெரியவர்கள் ஆகியோரின் உணவு, உடை உள்ளிட்ட அவசியத் தேவைகள் நிறைவேற உதவுங்கள்.
‘ஸகாத்’ ரமளானில்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. எனினும், மாதத்தின் சிறப்பைக் கருதி இம்மாதத்தில் ஸகாத் நிறைவேற்றலாம்.
ஆக, புனித ரமளான் மாதத்தைத் திட்டமிட்டு நேரங்களைப் பிரித்துக் கொண்டு பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். அதன் மூலம், இம்மையிலும் மறுமையிலும் நற்பலன் அடைவோம்!
மௌலவி, கான் பாகவி
மௌலவி, கான் பாகவி
No comments:
Post a Comment