உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, August 31, 2011

நல்லிணக்கத்திற்கான நற்சேவை

"படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பமாகும்" எனும் நபிமொழிக்கிணங்க. சாதி, மதம், இனம், குலம் போன்ற பாகுபாடுகள் பார்க்காமல், பாதிப்பிற்குள்ளானவர் யாராயிருந்தாலும், அவசர உதவி தேவைப்படுவோர் எவராயிருந்தாலும், அவர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவி கிடைக்க வேண்டும் என்பது சமூக நலம் விரும்புவோரின் எதிர்பார்ப்பாகும்; நம் இந்திய அரசுச் சாசனமும் அதைத்தான் கூறுகின்றது.  எனவே, ஜனநாயக அடிப்படையிலும் இச்சேவையானது பாராட்டத் தக்கதும் வரவேற்கத் தக்கதுமாகும்.

அதிரையின் மக்கள் தொகை, வசதி வாய்ப்புகள், தேவைகள் ஆகியவற்றைக் கருத்துள் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன் நம் சமுதாய அமைப்புகளுள் ஒன்றான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அதிரைக் கிளை நமதூருக்கு ஓர் மருத்துவம் மற்றும் துயர்துடைப்பு அவசர வாகனத்தின் தேவையை உணர்ந்து, அதற்கான நன்முயற்சிகளில் முனைந்து பாடுபட்டு வந்தது.

இவ்வாகனத்தின் தேவை உணரப்பட்டபோது, இதன் விலை ஆறு லட்சமாக இருந்தது.  ஆனால், அது கைக்கு வந்து கிடைத்து வாங்கியபோது, சுமார் ஒன்பது லட்சமாக உயர்ந்துவிட்டது.  எனினும், நம் சமூக ஆர்வம் மிக்க (குறிப்பாக வெளிநாடுவாழ்) சகோதரர்களின் ஒத்துழைப்பினால், அத்தொகையைக் கொடுத்து இவ்வாகனம் கையகப் படுத்தப்பட்டுள்ளது.  அல்ஹம்து லில்லாஹ்!

அதன் சமுதாய அர்ப்பணிப்பு விழா, எதிர்வரும் 11 – 09 – 2011 ஞாயிற்றுக் கிழமை மாலை ஐந்து மணியளவில் நமதூர் பேருந்து நிலையத்தின் அருகில் நடைபெற இருக்கின்றது.  அவ்வமயம், த. மு. மு. க. மற்றும் ம. ம. க. மாநிலத் தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைகளும் பாராட்டுரைகளும் சமூக விழிப்புணர்வு உரைகளும் நிகழ்த்துவார்கள்.

கலந்துகொள்வோர்:

பேராசிரியர் டாக்டர் M.H. ஜவாஹிருல்லாஹ், MBA, MLA
S. ஹைதர் அலி (த.மு.மு.க. பொதுச் செயலாளர்)
M. தமீமுன் அன்சாரி M.A. (ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர்)
பேராசிரியர் J.  ஹாஜா கனி M.A. (த.மு.மு.க. மாநிலச் செயலாளர்)

அதிரை த.மு.மு.க. அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.

தகவல் : அதிரை அஹமது

No comments:

Post a Comment