உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, August 26, 2011

ஈத் எனும் பெருநாள் தொழுகை

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
 
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்
''மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதைவிட எனது (மஸ்ஜிதுன் நபவி) பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்''. (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்..... அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி), நூல்: புகாரீ 956
பெருநாள் தொழுகையில் பெண்கள்
பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வர வேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) போகச் சொல்மாறு நாங்கள் கட்டளையிடப்பட்டோம். அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்.  நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர், 'அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?' என்றார். அதற்கு, 'அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி),      நூல்: புகாரீ 351
ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்
பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
'பெருநாள் வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.' அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), நூல்: புகாரீ 986
தொழுகைக்கு முன் சாப்பிடுதல்நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள். 'சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.' அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரீ 953
அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி(ஸல்) அவர்கள் தனியான எந்தத் தக்பீரையும் கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப் பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. மேலும் பெருநாளில் கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை. மேலும் பெருநாளில் தக்பீர்களைச் சப்தமிட்டு கூறக் கூடாது.
(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம். (அல்குர்ஆன் 7:205)
தொழும் முறை
 பெருநாள் தொழுகை என்பது ஒரு ஸலாமைக் கொண்டு இரண்டு ரக்அத்துகள் தொழுவதாகும்.
'நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறுவார்கள். இவ்விரண்டு தக்பீர்களையும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.'அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ்(ரலி) நூல்: அபுதாவுத் 971, பைஹகீ 5968, தாரகுத்னீ
 தொழுகை முடிந்ததும் இமாம் குத்பா உரை நிகழ்த்துவார்கள். தொழுதவுடன் அதே இடத்தில் அமர்ந்து குத்பா உரையை கேட்கவேண்டும். உரை முடிந்தவுடன் களைந்து செல்வதே நபிவழியாகும்.
வீர விளையாட்டுக்கள்:ஆயிஷ(ரலி) அறிவித்தார்கள்...
அன்று ஈத் (பெருநாள்) தினமாக இருந்தது. (ஆப்பிரிக்கக்) கருப்பர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (வீர விளையாட்டு) விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரிடம் நான் (விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம், 'நீ இவர்களுடைய (வீர விளையாட்டைப்) பார்க்க விரும்புகிறாயா?' என்று கேட்டிருக்க வேண்டும். நான், 'ஆம்' என்று பதிலளித்தேன். உடனே, அவர்கள் என் கன்னம் அவர்களின் கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்க வைத்தார்கள். 'அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்' என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது, 'போதுமா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க நான், 'ஆம், போதும்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால் நீ போ!' என்று கூறினார்கள். நூல்: புகாரி 2907
புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். 'அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷத்தானின் இசைக் கருவிகளா?' என்று அபூ பக்ர்(ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷ(ரலி) நூல்: புகாரி 952
மேற்கண்ட ஹதீஸின் மூலம் முஃமின்களுக்கு மகிழ்ச்சியான பெருநாள் தினத்தன்று மார்க்கம் அனுமதித்த வழியில் வீர விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதை நபி(ஸல்) அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள்.
; தொழுவது, வீட்டுக்கு வந்தபின் தொழுகையை விடுவது, இஸ்லாமிய சூழலில் இருக்கும் வரை இஸ்லாத்தை கடைபிடிப்பது, பிறகு அதை விட்டுவிடுவது போன்ற செயல்கள் நமக்கு வாடிக்கையாகிவிட்டது. ஏன் இந்த மாறுபாடு? இது ஒரு உண்மை முஸ்லிமின் பண்பாக இருக்க முடியாது.
ரமலான் மாதத்தில் எந்த இறைவனை பயந்து வாழ்ந்தோமோ அதே இறைவன் ஷவ்வால் மாதத்திலும் மற்ற எல்லா மாதங்களிலும் நம்மை பார்த்துக் கொண்டிருக் கின்றான். இந்த உணர்வு நமது உள்ளத்தில் பதிந்திருக்க வேண்டும். ஆகவே ரமலான் மாதத்தோடு நல் அமல்களை முடித்துக் கொண்டு பழைய நிலைகளுக்கு திரும்பிவிடாமல் இஸ்லாத்தில் உறுதியாக இருப்பதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கம்
வாய்ப்பளிப்பானாக.

நன்றி:   தவ்ஹீது இல்லம்

No comments:

Post a Comment