அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
இன்று காலை 8 மணியளவில் ஈதுப்பெருநாள் தொழுகை அதிரை சானா வயலில் அமைந்துள்ள முஸல்லாவில் (மைதானத்தில்) பெருந்திரளாக குழுமிய அதிரை பொதுமக்களின் பேராதரவுடன் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இன்று காலை 8 மணியளவில் ஈதுப்பெருநாள் தொழுகை அதிரை சானா வயலில் அமைந்துள்ள முஸல்லாவில் (மைதானத்தில்) பெருந்திரளாக குழுமிய அதிரை பொதுமக்களின் பேராதரவுடன் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
பெருநாள் குத்பா உரையில், ரமலானுக்குப் பின் நம்முடைய அமல்கள் குறித்தும், இஸ்திஃபார் எனும் பாவமன்னிப்பு தேடுதல் குறித்தும் வலியுறுத்துப்பட்டன.
தொழுகைக்காக மக்கள் அதீதமாக பெருகியுள்ள நிலையிலும் இன்னும் பெருநாள் குத்பாவில் அமராமல் உடன் எழுந்து செல்பவர்களும், வலியுறுத்தியும் குத்பாவின் அவசியத்தை உணராத மக்கள் இன்னும் சிலர் உள்ளார்கள் என்பது வருந்தத்தக்கதே, இந்நிலை வரும் காலங்களில் மாறிட ஏகத்துவ சகோதரர்கள் தேவையான விழிப்புணர்பை ஏற்படுத்த முயல வேண்டும்.
பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனி பகுதிகளில் விரிவான ஏற்பாடுகளை ஈத் கமிட்டியினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
நேற்று அதிரை முழுவதும் பரவலாக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில், தேவையுடைய மக்களை தேடிச்சென்று அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கேற்படாத வகையில் அதிரை இஸ்லாமிக் மிஷன் [AIM] சார்பாக ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. ஃபித்ரா விநியோகத்திற்கு உறுதுணையாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சகோதரர்கள் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.
களத்திலிருந்து
அதிரைஅமீன்
படங்கள்
ஜமால் அஹமது
ஜமால் அஹமது
No comments:
Post a Comment