உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, December 6, 2014

நேற்றிரவு கையெழுத்தான அன்சர் தப்லீகி vs பீஜே இடையேயான ஒப்பந்த வரைவு

நேற்றிரவு (06.12.2015) கையெழுத்தான அன்சர் தப்லீகி பீஜே இடையேயான ஒப்பந்த வரைவு உங்களின் முதல் பார்வைக்காக, இன்ஷா அல்லாஹ் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்த நகல்கள் மற்றும் சலிப்பை ஏற்படுத்தும் விவாத ஒப்பந்த வீடியோ பதிவுகள் விரைவில்..


بسم الله الرحمن الرحيم


06-12-2014 அன்று சென்னை பஹிரா மேன்ஷனில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாதிற்கும், இலங்கையை சார்ந்த அன்சர் தப்லீகி அவர்களுக்கும் இடையில் கீழ்கண்டவாறு விவாத ஒப்பந்தம் செய்யப்பட்டது.

   I.      தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் சார்பாக கலந்து கொண்டவர்கள்:
1.    கலீல் ரசூல்
2.    முகம்மது யூசுஃப்

  II.      அன்சர் தப்லீகி அவர்களின் சார்பாக கலந்து கொண்டவர்கள்:
1.    அப்துல் ஹமீது
2.    நிஜாமுதீன்

III.      விவாதிப்போர் :
1.    தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் சார்பாக பி. ஜெய்னுலாபிதீன்
2.    இலங்கை அன்சர் தப்லீகி.

IV.      விவாதத்தின் தலைப்பு மற்றும் விவாதம் நடைபெறும் நாள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் இருவரும் ஏற்கனமேயே பேசி முடித்து விட்டார்கள்.இன்று  ஏனைய விஷயங்கள் கீழ்கண்டவாறு பேசி முடிவெடுக்கப்பட்டது.

                    விவாத இடம் :
                    திருச்சி

  V.      விவாத அமர்வின் கால அமர்வு :
1.    முதல் அமர்வு                    காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.
2.    இரண்டாம் அமர்வு           பகல் 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
3.    மூன்றாம் அமர்வு              மாலை 7:00 மனி முதல் இரவு 9:00 மணி வரை.

VI.      விவாத செலவுகள் :
          அரங்கம், ஒலி ஒளி அமைப்பு, தண்ணீர் ஜெனரேட்டர் மற்றும் இரண்டு தரப்பும் சமமாக பயன்படுத்தும் செலவுகளை இரு தரப்பினரும் சமமாக பகிர்ந்து கொள்வது.

VII.      அரங்க ஏற்பாடு :
1.    இரு தரப்பிலும் பரஸ்பரம் எழுத்தில் ஒப்புக்கொண்ட செலவுகள் மாத்திரமே சமமாக பகிர்ந்து கொள்ளப்படும்.
2.    அரங்கம் குறித்து மற்ற ஏற்பாடுகளைச்  செய்ய தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் சார்பில் திருச்சி நசீர் தொலைபேசி எண் 9894022287 அவர்களும் மற்றும் அன்சர் தப்லீகி அவர்களின் சார்பில் திருச்சி பாபு தொலைபேசி எண் 9443780161  ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
3.    21.12.2014 தேதிக்குள் மண்டபத்தை பதிவு செய்திடல் வேண்டும்.

VIII.      பார்வையாளர்கள் மற்றும் ஒழுங்குகள்:
1. ஒவ்வொரு தரப்பிலும் தலா 50 நபர்கள் மாத்திரம் பார்வையாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.
2. ஒவ்வொரு அமர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாகவே இருக்கையில் அமர வேண்டும்.
3. விவாதத்தின் ஒவ்வொரு அமர்வும் முடிந்த பின்  5 நிமிடங்கள் கழித்து பார்வையாளர்கள் அரங்கை விட்டு வெளியில் செல்லவேண்டும்.
4. அமர்வின் இடையில் வெளியே செல்பவர் அந்த அமர்வு முடியும் வரை எக்காரணம் கொண்டும் அரங்கினுள் அனுமதிக்கப்பட மாட்டார்.
5.    அரங்கினுல் செல்ஃபோன், டேப், பேட், கேமரா, ஒலி ஒளி கருவிகள் எதுவும் பயன்படுத்தக்கூடாது.
6.  விவாதம் தொடங்கிய பின் இருக்கையை விட்டு எழுவதோ பிறரிடம் பேசுவதோ விவாதத்தில் குறுக்கிடுவதோ கருத்து சொல்வதோ, சப்தமிடுவதோ, துண்டு சீட்டு கொடுப்பதோ, கிண்டல் செய்வதோ, கேலி செய்யும் விதமாக ஒலி எழுப்புவதோ முகம் காட்டுவதோ, சைகை செய்வதோ பிரசுரங்கள் வினியோகிப்பதோ ( அரங்கின் உள்ளேயும் வெளியும் ) கூடாது. மீறுபவர்கள் வெளியேற்றப்படுவதோடு கண்டிப்பாக இறுதிவரை அரங்கினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
7.    ஓவ்வொரு தரப்பின் பார்வையாலர்களும் அவர்கள் அமர்வதற்கு தனித்தனியாக இடம் ஒதுக்கப்படும்.
8.    ஓவ்வொரு தரப்பின் பார்வையாளர்களும் அத்தரப்பின் அனுமதி அடையாளச் சீட்டுடன் வந்தால் மட்டுமே அரங்கினுள் அனுமதிக்கபடுவார்கள்.
9. தத்தமது அணியைச்சார்ந்த பார்வையாலர்களால் ஏற்படும் எல்லா அசம்பாவிதங்களுக்கும் அந்தந்த அணியை சார்ந்தவர்களே பொறுப்பாவார்கள்.

IX.      வாலண்டியர்ஸ், அவர்களின் பொறுப்புகள் :
1. அரங்கின் உள்ளேயும் வெளியேயும் தரப்பிற்கு 10 நபர்கள் நியமிக்கபடுகிறார்கள்.
2.    பார்வையாளர்களை கண்கானிப்பதும் அவர்களின் உணவு தண்ணீர் போன்ற தேவைகளை நிறைவேற்றுவதும் பாதுகாப்பு ஏற்பாடும் இவர்களின் பொறுப்பாகும்.
3.    இரு தரப்பின் செயல்வீரர்களும் தனித்தனியாக செயல்படுவார்கள்.

  X.      தனித்தனி செயல்பாடுகள் :
1. தத்தமது அணியின் அறிஞர்கள், பார்வையாளர்கள், செயல்வீரர்கள், கேமராமேன்கள், உதவியாளர்கள் ஆகியோர்களின் உனவு தண்ணீர் போன்ற தேவைகளுக்கு அந்தந்த அணியினரே பொறுப்பாவார்கள்.

XI.      வீடியோ :
1. வீடியோ பதிவின் போது தேதியும், நேரமும் அதில் இடம் பெறவேண்டும். அவரவர் தனித்தனியாக வீடியோ பதிவு செய்து கொள்ள வேண்டும்.

XII.      நேர கண்கானிப்பாளர்கள் :
1. நேரத்தை கண்கானிப்பதற்கு அணிக்கு ஒருவர் வீதம் 2 கண்கானிப்பாளர்கள் நியப்படுகிறார்கள்.
2. விவாதத்தின்போது பேசுபவரின் துவக்க நேரத்தையும் முடிவடையும் நேரத்தையும் சுட்டிக் காட்டுவது மட்டுமே இவர்களின் பொறுப்பாகும்.
3.    விவாதத்தின் துவக்கத்தில் ஒப்பந்தத்தை வாசிப்பார்.

XIII.      விவாதிப்போர் :
1.    விவாதிப்பவருக்கு உதவியாளராக தலா இருவர் இருப்பர்.
2.    விவாதிப்பவர், அவரின் உதவியாளர்கள், நேர கண்கானிப்பாளர்கள், ஒலி ஒளி அமைப்பாளர்கள் ஆகியோர் தவிர வேறு யாரும் மேடையில் ஏற அனுமதியில்லை.
3.    விவாதிப்பவருக்கு மட்டுமே ஒலி பெருக்கியை உபயோகிக்க அனுமதி உண்டு.

XIV.      விவாத ஒழுங்குகள் ;
1.    ஒவ்வொரு தலைப்பு விவாதம் துவக்கத்தின்போதும் டாஸ் போடப்பட்டு அதில் வென்றவர் யார் விவாதத்தை துவங்குவது என்பதை முடிவு செய்வார்.
2.    விவாதத்தின் போது இரு தரப்பினரும் 12 + 3 நிமிடங்கள் என்ற என்ற அடிப்படையில் சரிசமமாக விவாதிக்க வேண்டும். இதில் முதல் 12 நிமிடங்கள் மட்டுமே விவாதம் நடைபெறும். மற்ற 3 நிமிடங்கள் அமைதி காக்க வேண்டும்.
3.    விவாதத்தின் போது இரு தரப்பினரும் பொது மக்களை நோக்கியே பேச வேண்டும்.

XV.      பொதுவானவை :

1. இதுவரை இருதரப்பும் எடுத்துள்ள முடிவுகளை ஒரு தலைபட்சமாக மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ, எதையும் சேர்ப்பதற்கோ, நீக்குவதற்கோ இரு தரப்பிலும் எவருக்கும் அதிகாரம் இல்லை. விவாதிக்கும் இருவரும் உடன்பட்டால் ஒழிய எந்த விதியையும் மாற்றக்கூடாது.
2. விவாதம் நடைபெறும் மண்டபத்தின் உள்ளே அல்லது வெளியே எந்த விளம்பரமும், வியாபாரமும் செய்யக்கூடாது.
3.    இரு தரப்பினரும் இணையவழி நேரடி ஒளிப்பரப்பு செய்து கொள்ளலாம்.

XVI.      கலந்துகொண்டவர்களின் ஒப்புதல் கையொப்பம் :

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் தரப்பில்
1.    கலீல் ரசூல்
2.    முகம்மது யூசுஃப்

அன்சர் தப்லீகி அவர்களின் தரப்பில்
1.    அப்துல் ஹமிது
2.    நிஜாமுத்தீன்

No comments:

Post a Comment