உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, December 8, 2014

அடம்பிடிக்கும் ததஜவுக்கு கெடு வைத்து அப்பாஸ் அலி மீண்டும் விவாத நினைவூட்டல் கடிதம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயலாளர் இ முஹம்மது அவர்களுக்கு

நான் டிஎன்டிஜேவிலிருந்து விலகியது முதல் இன்று வரை உங்களுடன் விவாதம் செய்து மக்களுக்கு உண்மையை புரிய வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறேன். என்னை விவாதத்திற்கு வரவிடாமல் ஓடவைப்பதற்கு நீங்கள் செய்த முயற்சிகள் என்ன என்பதையும் அது எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பதையும் இதற்கு முன்பு நான் விவரித்திருக்கிறேன்.

ஆனால் நீங்கள் நான் விவாதத்திலிருந்து ஓடிவிட்டதாக நீங்களாகவே அறிவித்து என்னுடன் விவாதிக்க வராமல் ஓடிக்கொண்டே இருப்பதை மக்கள் அறிந்துகொண்டிருக்கிறார்கள் நான் விவாதத்திலிருந்து ஓடிவிட்டேன் என்று மக்களை நம்பவைப்பதற்கு தற்போது சையது இப்ராஹீம் பற்றி முன்பு நான் எழுதிய தகவல்களை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

சையது இப்ராஹீம் தனி்ப்பட்ட முறையில் என்னை தொடர்பு கொள்வது பற்றியும் விவாத ஒப்பந்தத்தில் கலந்துகொள்வதும் பற்றியும் விவாதம் செய்வது பற்றியும் நான் விவாத ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு எழுதியதை தற்போது சுட்டிக்காட்டி என்மீது பழியை போட்டு விவாதிக்கவராமல் ஓடிவிடலாம் என்று நீங்கள் திட்டுமிட்டுள்ளீர்கள்.

நாம் யாருடன் விவாதிக்கப் போகிறோமோ அவருக்கு நம்முடன் விவாதிக்கும் தகுதி இருந்தால் தான் அவருடன் விவாதிக்க வேண்டும் என்பதை டிஎன்டிஜே தான் விவாத ஒப்பந்தத்தில் கூறியது.

விவாத ஒப்பந்தத்தில் சகோ பீஜேவை நான் விவாதிக்க வருமாறு கூறினேன். அதற்கு கலீல் ரசூல் பீஜேவுடன் விவாதிக்கும் தகுதி உங்களுக்கு இல்லை. உங்களைப் போன்றவர்களுடன் அவர் விவாதம் செய்யமாட்டார் என்று கூறினார்.

யார் வந்தால் என்ன? ஆளைப் பார்கக்கூடாது. கருத்தைத் தான் பார்க்க வேண்டும்? உப்புசப்பில்லாத காரணத்தைக் கூறி விவாதத்திலிருந்து ஏன் ஓடினீர்கள் என்று தற்போது என்னை விமா்சனம் செய்பவர்கள் இதை அப்படியே பீஜேவிடம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் கேட்க மாட்டார்கள்.

சகோதரர் முஜாஹித் பீஜேவுடன் தான் விவாதிப்பேன் என்று கூறிய போது பீஜே அவருடன் விவாதிக்க மறுத்தது மட்டுமல்லாமல் முதல் நிலை ஆய்வாளரான அப்பாஸ் அலி போன்றவர்கள் கூட முஜாஹிதுடன் விவாதிக்க வரமாட்டார்கள். Sltj போன்ற மூன்றாம் தர தாயிக்களுடனே விவாதம் செய்ய முஜாஹிதுக்கு தகுதியுள்ளது என்று கூறி விவாதிப்போரின் தகுதி தராதரங்களைப் பற்றி பேசினார்.

ஆளைப் பார்கக்கூடாது. கருத்தைத் தான் பார்க்க வேண்டும் என்ற வசனம் சகோதரர் பீஜேவிற்கும் டிஎன்டிஜேவிற்கு மட்டும் பொருந்தாதாம். மற்றவர்கள் இது பற்றி பேசினால் அப்போது மட்டும் இந்த வசனத்தைப் பற்றி பேசுவார்களாம். இது நியாயமான பார்வையா?

விவாதிக்க வருபவரின் தகுதியை பார்த்து அதற்கு ஏற்ற நபரை விவாதம் செய்ய அனுப்ப வேண்டும் என்பதையே சகோதரர் பீஜேவும் டிஎன்டிஜேவும் அதன் தொண்டர்களும் கொள்கையாக கொண்டுள்ளார்கள்.

நான் டிஎன்டிஜேவில் இருந்த போது முதல் நிலை ஆய்வாளர் என்று கூறிய சகோதரர் பீஜே தற்போது அப்துன் நாசர் ரஹ்மதுல்லாஹ் போன்றவர்களை கூட என்னுடன் விவாதிக்க அனுப்ப தயங்குவது ஏன்?

பீஜேவுடன் தான் விவாதிப்பேன் என்று முஜாஹித் கூறியது தவறு என்று டிஎன்டிஜே கூறினால் நான் சையது இப்ராஹீமுடன் தான் விவாதம் செய்ய வேண்டும் என்று கூறுவதும் அடம்பிடிப்பதும் அதை விட பன்பமடங்கு மோசமானச் செயலாகும்.

இந்த விசயங்களை நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன். நான் அயோக்கியத்தனம் செய்கிறேன் அண்டப்புளுகுகளை கூறுகிறேன் என்று விமா்சித்த நீங்கள் இதற்கு ஏன் பதில் சொல்லாமல் விட்டீர்கள்? மக்கள் இதற்கு பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏன் உங்களால் இதற்கு பதில் சொல்லமுடியவில்லை?

அரபு இலக்கணம் பற்றியும் மொழிபெயர்ப்பு பற்றியும் நான் விவாதத்தில் பேசினால் அதை சையது இப்ராஹீமால் எப்படி அறிந்துகொள்ள முடியும்? துணைக்கு வந்தவர்கள் சொல்வதைத் தான் அவர் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டும். அவர்கள் கூறுவது சரியா? தவறா? என்பதைக் கூட அவரால் முடிவு செய்ய முடியாது. சரியாகத் தான் சொல்வார்கள் என்று தக்லீத் செய்தால் மட்டுமே இது பற்றி அவர்கள் பேசியதை அப்படியே விவாதத்தில் ஒப்பிக்க முடியும்.

பலர் விவாதம் செய்யும் நிலை இருந்தால் தனக்குத் தெரிந்த விசயத்தை மட்டும் இவர் பேச வாய்ப்புள்ளது. ஆனால் தற்போது நடக்கப்போகும் விவாதம் ஒருவருக்கொருவர் என்பது தான். அரபு தெரியாத நபர்கள் மார்க்க விசயத்தில் விவாதிக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. தனக்கு அறிவில்லாத விசயத்தில் மற்றவர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக நம்பி விவாதிக்கவரக்கூடாது என்றே கூறுகிறேன். சையது இப்ராஹீமை தவிர்ப்பதற்கு வேறு பல காரணங்களையும் முன்பு கூறியுள்ளேன்.

நான் பீஜேவுடன் தான் விவாதிப்பேன் என்று அடம்பிடிக்கவில்லை. பிறகு ஏன் சையது இப்ராஹீமையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்க வேண்டும். தவ்ஹீத் ஜமாத்தில் சையது இப்ராஹீமை விட்டால் வேறு அறிஞர்களே இல்லையா? அவர்களை விவாதத்திற்கு விட்டால் விவாதத்தை சொதப்பிவிடுவார்கள் என்ற பயமா? என்னுடைய கோரிக்கை நியாயமானது தான் என்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் அறிவார்கள்.

இதன் பிறகும் நான் ஓடிவிட்டேன் என்று டிஎன்டிஜே கூறினால் நியாயமாக சிந்திக்கும் மக்கள் பின்வரும் முடிவையே எடுப்பார்கள்.

1. பீஜே ஓடிவிட்டார்.
2. ஷம்சுல்லுஹா ஓடிவிட்டார்.
3. Mi சுலைமான் ஓடிவிட்டார்.
4. Ms சுலைமான் ஓடிவிட்டார்.
5. அல்தாபி ஓடிவிட்டார்.
6. அஷ்ரப்தீன் பிர்தௌவ்ஸி ஓடிவிட்டார்.
7. கோவை ரஹ்மதுல்லாஹ் ஓடிவிட்டார்.
8. அப்துன் நாசர் ஓடிவிட்டார்.

விவாதத்திற்குரிய நாள் நெருங்கிவிட்டது. இனியும் தேவையில்லாமல் எழுதுவதை நிறுத்திவிட்டு நீங்கள் விவாதிக்க முன் வர வேண்டும். சையது இப்ராஹீமை தொங்கிக்கொண்டு விவாதத்திலிருந்து ஓடக்கூடாது. 10. 12. 14 க்குள் நீங்கள் மேற்கண்ட அறிஞர்களில் ஒருவரின் கையெழுத்திட்டு ஒப்பந்த பைலை எனக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


No comments:

Post a Comment