உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, December 20, 2014

அபுதாபியில் நடைபெற்ற TIYAவின் சிறப்பு மலர்க்குழு ஆலோசணை கூட்டம்

அமீரகம் மற்றும் அதிரை மேலத்தெருவில் செயல்படும் அதிரை தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்க அமைப்பு அல்லாஹ்வின் அருளால் தனது 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற நிகழ்வை சிறப்பிக்கும் வண்ணமும் TIYAவின் சேவைகள் எதிர்கால தலைமுறைக்கான வரலாறாய் மக்கள் மத்தியில் பதியப்பட வேண்டும் என்பதற்காகவும் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இச்சிறப்பு மலர் சம்பந்தமான ஆலோசணை கூட்டம் 19.12.2014 வெள்ளியன்று மாலை அஸருக்குப்பின் அபுதாபி, முஸஃபாவில் தலைவர் முகமது மாலிக் அவர்கள் தலைமையிலும், நிர்வாகிகள், உறுப்பினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையிலும் நடந்தேறியது. 
 
இந்நிகழ்வுக்கு அபுதாபி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மேலத்தெருவை சேர்ந்த மூத்த சகோதரருமான M. காதிர் முகைதீன் காக்கா அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்கள், அவர்களிடமிருந்து பயன்மிக்க பல ஆலோசணைகள் பெறப்பட்டன.
 
இவ்வாலோசணை அமர்வில் சிறப்பு மலர் குறித்து பல்வேறு கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மேலும் இச்சிறப்பு மலருக்கான வேலைகளை முன்னெடுத்து செல்வதற்காக அறுவர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. 
 
இறுதியாக, கஃபாராவுடன் ஆலோசணை அமர்வு நிறைவுற்றது.
தகவல்
அபுசுமையா
 
Thanks to : TIYA

1 comment:

  1. கடல்கரைத் தெரு யு யே இ சகோதரர்கள் செய்தது போன்று, நீங்களும் மேலத்தெரு கந்தூரிக்கு எதிர்ப்பான தீர்மானத்தை எடுத்து, ஊரிலுள்ள கந்தூரிக் கமிட்டியாருக்கு உங்கள் தீர்மானத்தை எடுத்துரைத்து, அறிவு பூர்வமாகச் சிந்திக்கச் சொல்லுங்களேன்.

    ReplyDelete