உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, December 4, 2014

விவாதத்திலிருந்து ஒடியது யார்? இன்னும் களத்தில் நிற்கும் அப்பாஸ் அலி பீஜேக்கு அறைகூவல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

டிஎன்டிஜே மாநிலத் தலைவர் பீ ஜெய்னுல் ஆபதீன் அவர்களுக்கு….

நான் விவாதத்திலிருந்து ஓடிவிட்டதாக வாய்கூசாமல் பொய்யை பரப்பி வருகிறீர்கள். எனவே இது பற்றிய நியாயத்தை உங்களிடம் கேட்டு மக்களுக்கு உண்மையை விளக்க வேண்டிய அவசியம் எனக்குள்ளது.

05.11.14 அன்று நான் உங்களுடன் கருத்து வேறுபாடு கொண்டு உங்களை விட்டு விலகுவதாக அறிவித்தேன். உடனே என் மீது பொருளாதாரக் குற்றசாட்டைக் கூறி நான் பணத்திற்காகவே வெளியேறினேன் என்று பொய்யான காரணத்தை கூறினீர்கள். இது பற்றி உண்மை நிலவரத்தை நான் வீடியோ மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்தினேன்.

உங்களுக்கும் எனக்கும் இடையே ஒருவருட காலமாக நடந்த கடிதப் போக்குவரத்து அனைத்தும் என் மெயிலில் பதிவாகியிருந்தது. நான் உங்களை விட்டு வெளியேறியவுடன் எனது மெயில் பிளாக் செய்யப்பட்டு அதிலிருந்து அனைத்து விசயங்களும் திருடப்பட்டுவிட்டது. கடும் முயற்சி செய்து உள்ளே சென்ற போது இன்பாக்ஸ் empty யாக இருந்ததை பார்த்தேன். அதற்குப் பிறகு மறுபடியும் பிளாக் செய்யப்பட்டுவிட்டது.

இந்நிலையில் 10 11 14 அன்று நான் தான் உங்களை விவாதத்திற்கு வருமாறு முதலில் அழைத்தேன். அதில் நான் எழுதிய வாசகங்களை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

// நான் சகோதரர் பீஜே அவர்களை விவாதத்திற்கு அழைக்கிறேன். அவருக்கு இயலாவிட்டால் தவ்ஹீத் ஜமாத்தில் உள்ள மற்ற தாயிக்களை இது பற்றி விவாதம் செய்ய அழைக்கிறேன்.

இந்த விவாதம் தெருச்சண்டையைப் போன்றில்லாமல் வெறுமனே கருத்துப்பரிமாற்றமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஒரே நிபந்தனை. தவ்ஹீத் ஜமாத் மோதல் போக்கையும் தனிநபர் தாக்குதல்களையும் கைவிட்டு அழகிய முறையில் என்னுடைன் விவாதம் செய்ய முன்வர வேண்டும்.

தவ்ஹீத் ஜமாத்தில் சையது இப்ராஹீமைத் தவிர்த்து மற்ற யார் வேண்டுமானாலும் என்னை இதற்காக தொடர்பு கொள்ளலாம். இயக்கப் பற்றை ஒதுக்கி வைத்துவிட்டு மார்க்கப்பற்றுடன் சிந்திக்குமாறு சகோதரர்களை அன்பாய் கேட்டக்கொள்கிறேன்.//

முதன் முதலில் நான் உங்களை விவாதத்திற்கு அழைக்கும் போதே சையது இப்ராஹீம் விவாதம் தொடர்பாக பேசுவதற்கு கூட என்னைத் தொடர்புகொள்ள வேண்டாம் என்று கூறினேன். இந்த நபரைத் தான் தற்போது நீங்கள் என்னுடன் விவாதிக்க அனுப்பியுள்ளீர்கள். அதை நான் மறுத்தவுடன் விவாதிக்கவராமல் நான் ஓடுவதாக கூறுகிறீர்கள்.

முதன் முதலாக நான் விவாதத்திற்கு உங்களை அழைத்தவுடன் என்னை நீங்கள் விவாதத்திற்கு அழைப்பதற்கு திட்டமிருந்ததாகவும் நான் அழைத்ததை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவும் கூறினீர்கள்.

ஆனால் இதன் பிறகு உன்னுடை பொருளாதார பிரச்சனையைப் பற்றித் தான் முதலில் பேசுவோம் என்று கூறி என்னை விவாதத்திற்கு வரவிடாமல் ஆக்கும் அடுத்தகட்ட முயற்சியை செய்தீர்கள்.

இது பற்றி நான் விளக்கம் அளித்து வலியுறுத்தியவுடன் பொருளாதாரப் பிரச்சனையைப் பற்றி பேசமாட்டோம். மார்க்கத்தைப் பற்றியே பேசுவோம் என்று ஒன்றுக்கு இரண்டு முறை வாக்குறுதி கொடுத்தீர்கள்.

நீங்கள் சொன்ன இடத்திற்கு நான் விவாத ஒப்பந்தத்திற்கு வந்தவுடன் நீங்கள் அனுப்பிய ஆட்கள் முதன் முதலில் பொருளாதாரப் பிரச்சனையப் பேசி என்னை கடுமையாக சாடி முன்பளித்த வாக்குறுதியை மீறி என்னை விவாதத்திலிருந்து விரட்டுவதற்குரிய வேலையை செய்தார்கள். அதை நான் பொருட்படுத்தாமல் மார்க்கத்தைப் பற்றி பேசுவதிலேயே கவனமாக இருந்தேன்.

ஒரு வழியாக ஒப்பந்தம் என்ற பெரும் சோதனையை கடந்து விவாதம் நடக்கும் இடம் தேதி முடிவாகி மண்படம் புக் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் நான் என்னுடன் விவாதிக்கும் அறிஞரை தெளிவுபடுத்துங்கள் என்று கோரிக்கை வைத்தேன்.

எராளமான அறிஞர்கள் என்னுடன் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் யாரை முடிவு செய்வது என்பதை விவாத நெருக்கத்தில் தெறிவிப்போம் என்றும் கூறினீர்கள். சீட்டுக்குலுக்கிப்போட்டு முடிவு செய்யுங்கள் என்று நான் கூறியவுடன் சீட்டுக்குலுக்கிப் போட்டதில் சையது இப்ராஹீம் பெயர் தான் வந்துள்ளது என்று கூறினீர்கள்.

இதற்கு நான் பதிலளித்து சையது இப்ராஹீம் வேண்டாம். டிஎன்டிஜேவில் உள்ள கிட்டதட்ட 8 அறிஞர்களின் பெயர்களை கூறி இவர்களில் யாரை வேண்டுமானாலும் கூறுங்கள். விவாதிக்கிறேன் என்றேன்.

சையது இப்ராஹீமை நான் தவிர்ப்பதற்குரிய உண்மையான காரணத்தை கூறி அவரை குறைபடுத்த வேண்டாம் என்று நினைத்தேன். அதை தெரிவிக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.

இந்த விவாதம் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். தெருச்சண்டை போன்று இருக்கக்கூடாது என்பதை நான் ஆரம்பம் முதல் என் எழுத்துக்களில் தெரிவித்திருக்கிறேன். சையது இப்ராஹீமுடன் விவாதம் செய்தால் கண்டிப்பாக இது நிறைவேறாது. 

சென்னையில் நடந்த விவாத ஒப்பந்தத்தில் என்னை கிருக்கன் என்றும் என் மீது காரி துப்புவார்கள் என்றும் கொள்கை அற்றவன் என்றும் வாய்க்கு வந்தவாறு எனக்கு முன் பேசினார். 

இவர் பேசிய வார்த்தைகள் எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. நான் அதை வெளிக்காட்டாமல் பதிலுக்கு அவரை நான் ஏசவில்லை. அறிவுரை தான் கூறினேன். இது தான் சையது இப்ராஹீமின் இயல்பான பண்பு. அவர் பேசிய பேச்சுக்களை பார்த்தவர்கள் யாரும் இந்த உண்மையை மறுக்கமாட்டார்கள். தவ்ஹீத் ஜமாத்தில் உள்ளவர்களும் இதை அறிந்தே இருக்கிறார்கள்.

இவரைப் பற்றி உங்களுக்கும் டிஎன்டிஜே சகோதரர்களுக்கும் நன்கு தெரியும். ஒரு முறை நிர்வாகக்குழுவில் M.I.சுலைமான் விசயத்தில் தேவையில்லாமல் பேசியதற்காக சகோதரர் கலீல் ரசூலால் கடுமையாக கண்டிக்கப்பட்டவர்.

ஆன்லைன் பீஜேவில் சையது இப்ராஹீமின் பயான் மட்டும் பதிவு செய்யப்பட்டபோது சகோதரர் அப்துன் நாசர் அவர்கள் அதை உங்களிடம் ஆட்சேபித்தார். சையது இ்பராஹீம் பேச்சு மோசமாக உள்ளது எனவே இதை ஆன்லைன் பீஜேவில் போட வேண்டாம் என்று கூறியதை நீங்கள் மறந்துவிட்டீர்களா?

ரமலான் சஹர் நேர நிகழ்ச்சிகளில் இவருடைய பேச்சுக்களை கேட்க முடியாமல் தவ்ஹீத் சகோதரர்களே உங்களிடம் புகார் செய்ததையும் நீங்கள் மறந்துவிட்டீர்களா?

தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியில் மாற்றுக்கருத்துடையவர்களை அசிங்கமாகவும் கீழ்த்தரமாகவும் இவர் பேசிய காரணத்தால் தவ்ஹீத் ஜமாத் மக்களிடமே அதிர்ப்தி கிழம்பி கடைசியாக அந்தப் பொறுப்பிலிருந்து இவரை நீக்கி மற்றவர்களிடம் அந்த பொறுப்பை நீங்கள் ஒப்படைத்ததும் உங்களுக்கு ஞாபகம் இல்லையா?

கொஞ்சம் கூட நாக்கூசாமல் தப்சீர் இப்னு கஸீரை குப்பையில் துாக்கிப்போடுங்கள் என்று சையது இப்ராஹீம் பகிரங்கமாக பேசியது டிஎன்டிஜே அறிஞர்களால் கூட ஜீரணிக்கமுடியாத விசயம். 

இந்த நிலையில் இனி இவருடன் விவாதம் நடந்தால் அங்கும் இப்படித் தான் நடப்பார். கருத்துபரிமாற்றத்துக்கு பதிலாக தெருச்சண்டை போடும் நிலையே ஏற்படும். எனவே தான் டிஎன்டிஜேவில் உள்ள எட்டு அறிஞர்களின் பட்டியலைக் கூறி இவர்களில் யார் வேண்டுமானாலும் என்னுடன் விவாதிக்க வரட்டும். நான் விவாதிக்கிறேன் என்று கூறினேன்.

உண்மையில் டிஎன்டிஜேவிற்கு என்னுடன் விவாதிக்கும் எண்ணம் இருந்தால் சையது இப்ராஹீம் அல்லாத நான் கேட்டுக்கொண்ட அறிஞர்கள் யாரையாவது கூறி விவாதம் செய்வதற்கு முன்வரலாமே? அதை செய்யாமல் நான் ஓடிவிட்டேன் என்று கதை கூறுவதில் என்ன நியாயம் உள்ளது?

முதன் முதலில் நான் உங்களை மட்டும் விவாதத்திற்கு அழைத்தபோது என்னுடன் விவாதம் செய்வதற்கு உங்களுக்கு தகுதியில்லை என்று கூறி என்னுடன் விவாதம் செய்யாமல் ஓடிவிட்டீர்கள். தற்போது சையது இப்ராஹீம் என்னுடன் விவாதம் செய்வதற்கு தகுதியற்றவர் என்று நான் கூறும் போது நான் விவாதத்திலிருந்து ஓடிவிட்டதாக எப்படி உங்களால் கூறமுடிகிறது?

சையது இப்ராஹீமிற்கு பயந்து நான் ஓடிவிட்டதாக நீங்கள் கருதினால் எனக்கு பயந்து முன்னரே நீங்கள் ஓடிவிட்டீர்கள் என்று தான் மக்கள் கருதுவார்கள். 

சையது இப்ராஹீம் அல்லாத மற்ற அறிஞர்களோடு விவாதம் செய்யத்தயாராக இருக்கிறேன் என்று நான் கூறி இன்னமும் விவாதகளத்தில் தொடர்ந்து நின்றுகொண்டு உங்களுக்கு மெயில் அனுப்பிக்கொண்டிருக்கிறேன். 

சையது இப்ராஹீமை குறிப்பிட்டால் நான் விவாதிக்க வரமாட்டேன் என்று நினைத்துத் தான் நீங்களும் அவரை இப்போது குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த விவாதம் நடக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் இவரை கூறியிருக்கமாட்டீர்கள்.

என்னுடன் விவாதம் செய்ய பல அறிஞர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்று கூறும் டிஎன்டிஜே அந்த அறிஞர்களில் ஒருவரை என்னுடன் விவாதிக்க அனுப்ப இவ்வளவு பெரிய தயக்கம் ஏன்?

நான் டிஎன்டிஜேவில் இருந்தபோது நான் முதலாம் தர ஆய்வாளராக உங்களுக்குத் தென்பட்டேன். அதனால் சகோதரர் முஜாஹிதிற்கு என்னுடன் விவாதிக்கும் அளவுக்கு தகுதி இல்லை என்றும் என்னை விட அடுத்த நிலையில் உள்ளவர்களே முஜாஹிதுடன் விவாதிப்பார்கள் என்றும் ஒரு பயானில் குறிப்பிட்டீர்கள். இவ்வாறு நீங்கள் கூறும் நேரத்தில்தான் நான் உங்களோடு சூனிய விசயத்தில் மாற்றுக்கருத்து கொண்டு என் மீது நடவடிக்கை எடுத்திருந்தீர்கள்.

ஆனால் இன்று நான் உங்களை விட்டு வெளியேறிய பிறகு அப்பாஸ் அலி தவ்ஹீத் ஜமாத்தில் வெறுமனே ஆய்வாளராக தோற்றம் காட்டினார் என்றும் இனி ஆய்வாளராக காட்சி தரமாட்டார் எனவும் கூறுகிறீர்கள். ஆய்வாளர் என்ற பட்டம் எனக்குத் தேவையில்லை. நான் செய்யப்போகிற விவாதம் பயனற்றுவிடக்கூடாது என்பதே என் நோக்கம்.

டிஎன்டிஜே உறுப்பினர் கேட்கும் கேள்விக்கு கூட என்னால் பதில் சொல்லமுடியாது என்று கூறும் நீங்கள் நான் கேட்கும் அறிஞர்களில் ஒருவரை என்னுடன் விவாதிக்க அனுப்பி என்னை விவாதத்தில் ஒரு கை பார்த்துவிடலாமே?

விவாதம் தொடர்பாக எனக்கும் டிஎன்டிஜே தலைமைக்கும் இடையே தொடர்ந்து கடிதப்போக்குவரத்து நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நான் விவாதத்திலிருந்து ஓடிவிட்டதாக உங்களுடைய இணையதளத்தில் வெளியிட்டீர்களே தவிர என்னுடைய மெயிலுக்கு முறைப்படி நீங்கள் இதை தெரிவிக்கவில்லை. இது இஸ்லாமிய முறையா? கடிதப்பறிமாற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் போதே திடீரென நான் ஓடிவிட்டதாக முடிவெடுத்து உங்கள் இணையதளத்தில் அறிவிப்பது எந்த வகையில் நியாயமானது?

சையது இப்ராஹீமைத் தவிர வேறு யாரும் என்னுடன் விவாதிக்க வரமாட்டார்கள் என்பதை நீங்கள் தெரிவித்துவிட்டீர்கள். இதிலிருந்து யார் விவாதிக்க வராமல் ஓடுகிறார்கள் என்பதை சிந்திக்கும் மக்கள் நிச்சயம் அறிந்துகொள்வார்கள். 

நான் ஓடுவதாகக் கூறி விவாதத்திலிருந்து நீங்கள் பின்வாங்கிவிட்டாலும் இப்போதும் நான் உங்களுடன் விவாதிக்க தயாராகவே இருக்கிறேன். சையது இப்ராஹீமைத் தவிர்த்து நான் குறிப்பிட்ட அறிஞர்களில் யாரை வேண்டுமானாலும் முடிவு செய்யுங்கள். 

விவாதம் நடக்க வேண்டும். அந்த விவாதம் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. இதற்கு நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் தயாரா? இல்லையா? என்பதை எனக்கு மெயிலில் தெரிவியுங்கள். 

இப்படிக்கு
அப்பாஸ் அலி

Thanks to News Source:

No comments:

Post a Comment