உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, December 2, 2014

விவாதம் - நழுவும் ததஜவும் அறிஞர்களை கேட்டு விரட்டும் அப்பாஸ் அலியும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

இ முஹம்மது அவர்களுக்கு

நான் உங்களை விவாதிக்க அழைத்தது முதல் இன்று வரை டிஎன்டிஜே அறிகரோடு தான் விவாதம் நடைபெற வேண்டும் என்பதை பல முறை வற்புறுத்திக்கூறியுள்ளேன். நான் உங்களுக்கு அனுப்பிய மெயில்களை பார்த்தால் இதை யாரும் அறிந்துகொள்வார்கள். இது நான் இன்றைக்கு புதிதாக கூறும் நிபந்தனை அல்ல.

தொடர்ந்து நான் உங்களிடம் அந்த ஒரு அறிகரின் பெயரை குறிப்பிடுங்கள் என்று நான் கேட்டதற்கு காரணம் என்னவென்பது இப்போது மக்களுக்கு புரிந்திருக்கும். நீங்கள் விவாத நேரத்தில் யாரையாவது இறக்கிவிட்டு வேடிக்கை பார்கக்கூடாது என்பதற்காகவே அந்த அறிகரின் பெயரை தெளிவாகக் கூறுங்கள் என்று கூறினேன். நான் நினைத்தது சரிதான் என்று தற்போது நீங்கள் அளித்துள்ள பதில் கூறுகிறது.

ஹதீஸ்களை மறுப்பதற்கு வித்திட்டவரும் ஆணிவேராகவும் இருப்பவர் சகோதரர் பீஜே தான். எனவே அவரை விவாதத்திற்கு அழைத்தேன். அவருடன் விவாதிக்கும் அளவுக்கு உங்களுக்கு தகுதி இல்லை என்று நீங்கள் சொன்னீர்கள். நான் பிடிவாதம் பிடிக்கவில்லை. மற்ற அறிகர்களுடன் விவாதிக்க ஒப்புக்கொண்டேன்.

தற்போது நடைபெற இருக்கும் விவாதம் அரபு இலக்கணம் அரபு மொழிபெயர்ப்புடன் தொடர்புடையது. ஒருவர் தான் விவாதம் செய்ய முடியும் என்ற நிலையும் உள்ளது. நான் யாருடன் விவாதம் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை எனக்கும் உள்ளது.

எனவே கீழ்கண்ட டிஎன்டிஜே அறிகர்களில் யாராவது ஒருவரை குறிப்பிடுங்கள்.

1. பீஜே
2. ஷம்சுல் லுஹா
3. Mi சுலைமான்
4. Ms சுலைமான்
5. கோவை ரஹ்மதுல்லாஹ்.
6. அஷ்ரப்தீன் பிர்தவ்சி
7. அப்துன் நாசிர்
8. அல்தாபி

இவர்களில் யாராவது ஒருவரை குறிப்பிட்டால் இன்ஷா அல்லாஹ் இந்த விவாதம் நடக்கும். இல்லையென்றால் நீங்கள் உங்கள் வேலையை பார்க்கலாம். நான் என் வேலையை பார்க்க வேண்டியுள்ளது.

நான் விவாதம் செய்ய மனமில்லாம் தொடர்ந்து நழுவிக்கொண்டிருப்பதாகவும் நீங்கள் விட்டுக்கொடுத்து என்னை விரட்டிப்பிடித்துக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறீர்கள். உங்கள் கூற்றுப்படி விவாதிக்காமல் ஒட நினைக்கும் என்னை மேற்கண்ட நபர்களில் யாரையாவது குறிப்பிட்டு ஒடவிடாமல் தடுத்து நிறுத்துங்கள். இது முடிவாகிவிட்டால் இனி மெயில்களுக்கு எந்த வேலையுமில்லை. விவாததத்தில் சந்திக்கலாம்.

நாம் ஏற்கனவே வீடியோவில் பேசிக்கொண்ட ஒரு விசயம் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. என்னுடன் விவாதிக்க வரும் அறிகர் அமர்வுகளுக்கிடையில் மாறாமல் தலைப்பு முடியும் வரை அவரே விவாதிக்க வேண்டும் என்று நாம் பேசி முடிவு செய்ததை ஒப்பந்தத்தில் குறிப்பிடுங்கள்.

https://www.facebook.com/abbasalimisc/posts/410081342481591?fref=nf
==========================================================================

ததஜவுக்கு இன்னும் என்னென்ன கேவலங்கள் ஏற்படுமோ?

மவ்லவி அப்பாஸ் அலி அவர்களுக்கும் ததஜவினருக்கும் இடையில் விவாதம் இரண்டு கட்டமாக நடக்க இருப்பதாக அனைவரும் பரவலாக அறிந்துள்ளோம். இந்நிலையில் மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள் தன்னோடு விவாதிக்கவுள்ள 'அறிஞர்' பெயரை தெரிவியுங்கள் என பலமுறை ததஜ நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு நினைவுபடுத்தினார் என்பதும் பழைய செய்தி தான் ஆனால் நடந்தது என்ன?

தலைவர் எனும் பதவியை அலங்கரித்துக் கொண்டிருந்தாலும் (தொழுகையில்லாததால்) 'இல்ம்' எடுபட்டுவிட்ட ஒருவரை விவாதத்திற்கு முஸ்லீம் அறிஞர்கள் அழைத்தால் ஒடி ஒழிகிறார். சரி அவருக்காவது மேற்படி காரணமாவது இருக்கிறது ஆனால் தோள்தட்டி போர் பரணி பாடும் மற்ற 'ஆலிம்கள்' எங்கே சென்றனர் அல்லது விவாதத்திற்கு முன்பே தங்களது தோல்வியை அந்த அறிஞர்கள் ஒப்புக் கொண்டுவிட்டதாக எடுத்துக் கொள்ளலாமா? நீங்கள் ஒப்புக்கொண்ட கொள்கையை பற்றி பேச உங்களுக்கே தைரியமற்று போனது ஏன்?

அப்பாஸ் அலி அவர்களுடன் விவாதிக்க ததஜ அறிஞர்கள்; நான், நீ என வரிசையில் நிற்பதாக புருடா விட்டனர். சரி தொலைந்து போகட்டும் என அப்பாஸ் அலி அவர்களும் 'அறிஞரை' தேர்ந்தெடுக்க முடியாத இக்கட்டில் இருந்தால் 'சீட்டு குலுக்கி' போட்டாவது தேர்ந்தெடுங்கள் என சலுகை வழங்கினார் அதிலும் அவர்கள் ஏமாற்றமே அடைந்துள்ளனர், அறிஞருக்கு பதில் அரைவேக்காடு பெயர் வந்துள்ளதாம், யாரு இந்த செல்லாத ஓட்டை போட்டது என்று தெரியவில்லை.

அப்பாஸ் அலி அவர்கள் விவாதத்திற்கு வரவேகூடாது என்ற திட்டத்தின் வெளிப்பாடே இந்த தேர்வு. இதற்கிடையில் விசில் கிராக்கி ஒன்று 'அல்லாஹ்வே தேர்ந்தெடுத்து விட்டான்' என பொங்கி பூரித்துள்ளது. உண்மையில் அரைவேக்காடு பெயரை தேர்ந்தெடுத்த அந்த அரண்மனைகாரத் தெரு தலைமையக 'போலி கடவுளின்' பெயரை தைரியமாக வெளியே சொல்ல வெட்கமாகவுள்ளதோ? (நவூதுபில்லாஹ்).

அப்பாஸ் அலி அவர்களே, நீங்கள் எப்படியும் விவாதத்தில் சுவற்றை பார்த்து பேசும் நிலையை சந்திக்கத் தான் போகிறீர்கள் என்பதால் அவர்களின் மறைமுக ஆசைப்படி இந்த விவாதத்தை புறக்கணித்து விடுவதே நல்லது. இந்த விவாதம் நடந்தாலும் எந்த பிரயோஜனமும் ஏற்பட போவதில்லை ஏனென்றால் நீங்கள் விவாத இடைவேளையில் ஒண்ணுக்கு போற சீனை எல்லாம் எடுத்துப்போட்டு 'ஓட்டம்' என படம் காட்டத்தான் போகிறார்கள், அதை நம்பவும் எப்போதும் போல் பக்தர்கள் இப்போதே தயாராக தான் உள்ளார்கள்.

இதற்கும் மேல் நீங்கள் விவாதிப்பீர்களானால், நபி (ஸல்) அவர்கள் அபு ஜஹ்லையோ, உமரையோ (ரலி) இஸ்லாத்தின் பக்கம் திருப்புவாயாக என பிரார்த்தித்த வழிகாட்டுதலின்படி நீங்களும் தூயவன் அல்லாஹ்விடம் கையேந்துங்கள், உங்களோடு மோத வருபவருக்கு அல்லாஹ் நேர்வழியை வழங்கக்கூடும்.

இன்னும் அல்லாஹ்வுக்காக, மறுமை வெற்றிக்காக தவறான ததஜவில் இருக்கும் சகோதரர்கள் சிந்திக்க வேண்டும். எனது நேர்வழிக்கும் உங்களுடைய நேர்வழிக்கும் எல்லாம் வல்ல ரஹ்மான் அருள் செய்வானாக!

https://www.facebook.com/adirai.ameen?fref=nf

1 comment:

  1. ஒரு A4 பேப்பரை சமமாகக் கிழித்து, அந்த நாலு சீட்டிலும் 'செய்யது இப்ராஹீம்' எழுதி, ஒன்றைக் குலுக்கி எடுத்தால், செய்யது இப்ராஹிம்தானே வருவார்.

    ReplyDelete