உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, December 15, 2014

ஜனாதிபதி தேர்தலும் இலங்கை முஸ்லீம்களும்

2015 ஜனவரி மாதம் 6 ஆம் தேதி நடைபெறயிருக்கின்ற இலங்கை அதிபருக்கான தேர்தல் குறித்து முகநூல் வழியாக கிடைத்த செய்திகளின் அடிப்படையில் நமக்கு தோன்றிய கருத்துக்களை சகோதரனாக இலங்கை முஸ்லீம்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

(பின் வரும் அசிங்கமான பழமொழியை எழுதியதை பொருத்துக் கொள்க) கழுதை விட்டையில் முன் விட்டைக்கும் பின் விட்டைக்கும் உள்ள வேறுபாடு என்ன? என தமிழகத்தில நிலவும்; ஒரு சொல்வழக்கை நினைவுபடுத்திவிட்டு உள்ளே செல்லலாம், பொருள் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

மேலும், தற்போது ஹாங்காங்கில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டமும் அதற்கான காரணமும் தெரிந்திருப்பீர்கள் அதாவது சீன அரசாங்கம் தேர்வு செய்து நிறுத்தும் மூவரில் ஒருவரையே ஹாங்காங் மக்கள் தங்கள் ஆட்சித் தலைவராக தோந்தெடுக்க முடியும், அதாவது யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவர் சீன அரசின் கைத்தடியாகவே இருப்பார்.

மேற்காணும் நிலையிலேயே தற்போது நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தலை பார்க்கின்றேன்.

'இலங்கையின் மோடி' ராஜபக்சேயும் அவரது பயங்கரவாத காவிக்கும்பலும் அடித்து விரட்டப்பட வேண்டும் என்று இலங்கை முஸ்லீம்கள் ஆசைப்படுவதில் தவறில்லை மாறாக மைத்ரிபால சிறிசேனாவின் மீதோ அல்லது அவரை ஆதரிக்கும் எதிர்க்கட்சி கூட்டணி மீதோ முழு நம்பிக்கை வைக்கவும் கூடாது. ஒரு மாற்றம் வேண்டி மைத்ரிக்கு வாக்களிக்கலாமே ஒழிய முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருப்பார் என்ற எண்ணத்தில் ஓட்டளிக்கக்கூடாது, ஏன்?

பொதுபல சேனா என்கிற பயங்கரவாத அமைப்பின் செயற்பாடுகள் முழுமையாக இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்போடு ஒத்துப்போகின்றன எனவே, அவர்களின் வழிகாட்டலின் அடிப்படையிலேயே அவர்கள் இயங்குகிறார்கள் என கண்ணை மூடிக்கொண்டு நம்ப இடமுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தந்திரங்களின் ஒன்றான அனைத்துக் கட்சிகளிலும் அவர்களுடைய ஆட்கள் அங்கம் வகிப்பர், முக்கிய பதவிகளில் இருப்பர். எனவே, மகிந்தாவுடன் இருப்பதைப்போல் மைத்ரியுடனும், எதிர்க்கட்சிகளிலும் கட்டாயம் அத்தகையோர் இருப்பர்.

ராஜபட்சே மற்றும் மோடியுடனான மறைமுக உறவு அரசியல் அவதானிகளால் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுவதை அறியாதவர்கள் அல்ல நாம். இந்த கள்ள உறவு மைத்ரிக்கு தெரியாததல்ல மேலும் தேர்தலுக்குப்பின் அதிபரானால் மைத்ரியுடன் தொடர்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

பொதுபல சேனா என்கிற பயங்கரவாத அமைப்பை போன்ற 'ஹெல உருமய' என்ற முஸ்லீம் விரோத அமைப்பு மைத்ரிக்கு ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த மைத்ரி நேற்று வரை ராஜபக்சேவுடன் இருந்தவர் தான் மேலும் திடீர் திடீர் என விலகி ஆதரவளித்து வரும் மந்திரிமார்களும், எம்பிக்களும், பிற அரசியல் தலைவர்களும் சற்றுமுன்பு வரை பொதுபல சேனாவுடன் உறவாடியவர்களே.

மத்தளத்திற்கு இருபக்கமும் இடி என்பது போல் விடுதலைப்புலிகளாலும் இலங்கை ராணுவத்தாலும் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு எத்தகைய நீதியை இவர்கள் இருவரும் வழங்கியுள்ளனர் அல்லது வழங்குவார்கள் என நப்பாசை கொள்கின்றீர்கள்?

தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பு, அலுத்கம வன்முறை மற்றும் இன்று வரை பொதுபல சேனா செய்து வரும் அட்டூழியங்களுக்கு மகிந்தவோ அல்லது மைத்ரியோ என்ன பிரயாச்சித்தம் செய்தனர் அல்லது செய்வார்கள் என நம்புகின்றீர்கள்.

பொதுபல சேனா முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டபோது இதே மைத்திரி மகிந்தாவின் அரசில் சக்தி வாய்ந்த ஒரு மந்திரியாவே இருந்தார். ராஜபட்சவுடன் உறவாடிக் கொண்டிருந்த போது மைத்ரி பல இடங்களில் முஸ்லீம்களுக்கு எதிராக பேசியதும் இன்று இலங்கை அரசியல் களத்தில் ஆதாரத்துடன் வெளிவருவதை அறிந்திருப்பீர்கள்.

தற்போதும் அதிபராக இருக்கின்ற காரணத்தால் முறையாகவோ அல்லது தேர்தலில் தில்லுமுல்லுகள் செய்தோ மீண்டும் ராஜபக்சே வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஒருவேளை தோற்றாலும் அவரால் மறைமுகமாக களமிறக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ள (இருக்கலாம்) மைத்ரி தான் வெற்றி பெறுவார். மைத்ரி நிறுத்தப்பட்டதன் மூலமாக எதிர்க்கட்சிகள் தங்களின் சொந்த கட்சி வேட்பாளரை நிறுத்த முடியாத நிலையை எற்படுத்தியதாகவே உணர்கிறேன்.

எனவே, யார் வெற்றி பெற்றாலும் சரி முஸ்லீம்களின் தொல்லை விட்டுப்போகும் என மட்டும் கற்பனையில் சஞ்சரிக்க வேண்டாம் மாறாக அரசியல் மட்டத்தில் அனைத்து முஸ்லீம் கட்சிகளையும் தலைவர்களையும் ஒன்றிணைக்க முயற்சி செய்யுங்கள். முஸ்லீம்களின் பாதுகாப்பிற்காக அல்லாஹ்வை மட்டும் நம்புங்கள், துஆக்களை அதிகப்படுத்துங்கள், தஃவாவை தீவிரப்படுத்துங்கள்.

நபி (ஸல்) அவர்கள் பெரிய எதிரிகளை எதிர்ப்பதற்காக மதினாவை சுற்றியுள்ள முஸ்லீமல்லாத கோத்திரங்களுடன் நல்லுறவை பேணியதை போல், ஓப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டது போன்ற ராஜதந்திர நோக்கில் உங்களைப் போன்றே இலங்கை அரசால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் உள்ளங்களை வெல்லுங்கள் (ஈழ தீவிரவாத இயக்கங்களை அல்ல). மனிதநேயத்துடன் பழகும் சிங்களவர்களுடன் நீங்களும் நேசக்கரம் நீட்டுங்கள். பொதுபல சேனாவிற்கு எதிரான நல்லிணக்கம் விரும்பும் புத்த பிக்குகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஆனால் எந்த நிலையிலும் இஸ்லாத்திற்கு எதிரான சமரச நிலையை பேண வேண்டாம்.

இந்தத் தேர்தலில் பதிவாகும் முஸ்லீம்களின் வாக்குகள் ராஜபக்சே மற்றும் மைத்ரியின் மனதில் அச்சம் ஏற்படக்கூடிய அளவில் அமைய வேண்டும் அதாவது இலங்கை முஸ்லீம்களை பகைத்துக் கொண்டால் சிங்களவனானலும் இலங்கையின் அரசியலில் ஒன்றும் செய்ய இயலாது என்கிற நிலை ஏற்பட வேண்டும் அதற்கு குறுக்கே வரும் எத்தகைய செல்வாக்குமிக்க முஸ்லீம் அரசியல்வாதியையும் தூக்கி வீசத்தயங்க வேண்டாம்.

எந்த ஒரு அரசியல்வாதியின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டாம் அவர் ராஜபட்சேவோ, மைத்ரியோ, எதிர்கட்சியினரோ, முஸ்லீம் கட்சிகளின் தலைவர்களாகவோ இருந்தாலும் சரியே.

இறுதியாக, நமது ஒரே பாதுகாவலன் அல்லாஹ்வே, நம்பிக்கை வைப்பதற்கு அல்லாஹ் ஒருவன் மட்டுமே பொருத்தமானவன் என்று கூறியும், குர்ஆனும் முஹமது நபி (ஸல்) அவர்களும் காட்டிய வழியில் அல்லாஹ்விற்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெறுவோமாக!

குறிப்பு:
இலங்கை முஸ்லீம் சகோதரர்களே! இலங்கை அரசியல் குறித்த எனது பார்வையில் தவறிருந்தால் கண்ணியமாக சுட்டிக்காட்டுங்கள், தெளிவுபெற்றுக் கொள்கின்றேன். 

சகோதரத்துவத்துடன்
அபூ ஹாரித்

No comments:

Post a Comment