உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, December 24, 2014

'குர்ஆனை புரிந்து கொள்ளுங்கள்' அதிரை ALM பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாம்


அதிரையில் உள்ள பள்ளிக்கூட நிறுவனர்களில் ALM பள்ளியின் தாளாளர் சகோதரர் அப்துல் ரஜாக் அவர்கள் சற்று வித்தியாசமான சிந்தனை கொண்டவர்கள். பொதுவாக பள்ளிக்கூட நிறுவனர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்கச் செய்யும் ஒரு நவீன கருவியாக மட்டும் கருதும் இக்காலத்தில் சகோதரர் அப்துல் ரஜாக் அவர்கள் ஆசிரியர்களின் நலன், அறிவுத்திறன், கல்வியை போதிக்கும் மாண்பு, உலகம் மற்றும் மார்க்க அறிவு ஆகியவற்றையும் அதிகரிக்க அக்கறை கொள்வது வியப்பான ஒன்றே.

தன்னுடைய ALM பள்ளி மாணவர்கள் சிறந்தவர்களாக உருவாவது போலவே அவர்களை உருவாக்கும் ஆசிரியைகளுக்கும் தேவையான மேலதிக பயிற்சியை, மனோபலத்தை உருவாக்க வேண்டும் என்ற நன்னோக்கில் ALM பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஆசிரியைகளுக்கு பல்வேறு காலகட்டங்களில் பயனுள்ள பல நிகழ்ச்சிகளை நேரிடையாகவும் பவர்பாயிண்ட் திரையிடல்கள் வழியாகவும் ஏற்பாடு செய்துள்ளார்.


கடந்த சில மாதங்களுக்கு முன் மவ்லவியும் மனோவியல் ஆலோசகருமான அப்துல் ஹமீது ஷரயி அவர்களை கொண்டு 'மாணவர்களை கையாள்வது மற்றும் கல்வியில் நாட்டமுள்ளவர்களாக மாற்றுவது' குறித்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள், அதில் ஆசிரியைகள், ஊழியர்கள், மாணவ மாணவியர் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

அந்த அடிப்படையிலேயே தற்போதும் ஆசிரியைகளுக்கு பிரயோஜனம் அளிக்கக்கூடிய வகையில், 'அல்குர்ஆனை எவ்வாறு எளிதாக ஓதுவது மற்றும் புரிந்து கொள்வது' என்ற கருத்தின் கீழ் 3 நாள் பாடத்திட்டம் ஒன்றை மவ்லவி மதார்ஷா ஃபிர்தவ்ஸி அவர்கள் பவர் பாயிண்ட் திரை விளக்கம் மூலம் வழங்கி வருகிறார்கள்.

நேற்று துவங்கிய இவ்வகுப்புக்கள் நாளையுடன் (25.12.2014 வியாழன் அன்று) இந்த வகுப்புக்கள் நிறைவடையவுள்ளன. பயனுள்ள இந்த வகுப்பில் ஆசிரியைகள், வழமைபோல் அதிகமான மாணவிகள், மாணவர்கள் மட்டுமின்றி பொது அழைப்பு விடுக்கப்பட்டு பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.பள்ளியின் சார்பாக நடைபெற்ற இந்த 3 நாள் சிறப்பு முகாமுக்கான ஏற்பாடுகளை சகோதரர் அப்துல் ரஜாக் அவர்களுடன் இணைந்து சகோதரர் மீடியா மேஜிக் நிஜாமுதீன், அப்துல் ரஹ்மான் ஆகியோர் செய்திருந்தனர். சகோதரர் கமால் வீடியோ பதிவு செய்தார். இதன் வீடியோ பதிவுகள் இனி வரும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கான ஒரு காணொளி பாடமாக தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

செய்தி வடிவம்
அதிரை அமீன்
படங்கள்
ஆசிக் அஹமது

குறிப்பு: ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'UNDERSTAND AL-QURAN ACADEMY' எனும் இந்நிறுவனம் இதுவரை எண்ணற்ற குர்ஆனிய கல்வியாளர்களை உருவாக்கியுள்ளது. இதன் கிளை நிறுவனம் சென்னையிலும் செயல்பட்டுக் கொண்டுள்ளது, மாதாந்திர வகுப்புக்களும் நடைபெற்று வருகின்றன. இதுபோன்றதொரு தொடர் வகுப்பு கடந்த 2 வருடங்களாக வெள்ளிதோறும் துபை, தெய்ரா, அல் பரஹாவிலுள்ள அல் மனார் சென்டரில் சகோதரர் (திருத்துறைபூண்டி) ஜலால் அவர்களால் நடத்தப்பட்டு பெண்கள் உட்பட நூற்றுக்கணக்காணோர் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகுப்பு குறித்து வெளிவந்த விளம்பரமொன்றை மறுபதிவு செய்கின்றோம்.


No comments:

Post a Comment