அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணையால் இந்த வருடமும் ஈத் கமிட்டியினரால் நபி வழி திடல் தொழுகை மேலத்தெரு சாணாவயலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு ஏக இறைவனாம் அல்லாஹ்வை வணங்கி மகிழ்ந்தனர்.
பெருநாள் குத்பா உரையில் சகோதரர் ஜமீல் காக்கா அவர்கள் 'தலைவர்களின் பொறுப்புகள்' என்ற தலைப்பில் மக்களை அவர்கள் எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்றும் தலைவர்களை பிறர் எவ்வாறு, எந்த எல்லைக்குள் நின்று பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும், கண்மூடித்தனமாக தலைவர்களை பின்பற்றுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும், இன்றைய சர்வதேச பிரச்சனையான ஃபலஸ்தீனர்களின் துயரம் குறித்தும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
இறுதியாக பொதுமக்கள் அனைவரும் தங்களுக்குள் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறியவர்களாக இனிதே கலைந்து சென்றனர்.
தகவல்
நிஜாம்
போட்டோ
நஜி (எ) நஜிமுதீன்
No comments:
Post a Comment