மவ்லவி முர்ஷித் அப்பாஸி அவர்களை தனியாகத் தான் சந்திப்போம் என அதிரை டீயென்டீஜே வழிய, பெருந்தன்மையாக அதிரை தாருத் தவ்ஹீதும் வழிவிட பேச்சுவார்த்தையை சந்தைக்கடாக்கிய காட்சிகளை காண..
அதிரை டீஎன்டீஜே யுடன் பேச்சுவார்த்தை
மவ்லவி ஹைதர் அலிக்கும் மவ்லவி முர்ஷித் அப்பாஸிக்கும் வித்தியாசம் தெரியாத அதிரை டீயென்டீஜே
மேலத்தெருவில் தினமும் ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தான் அல் பாக்கியாதுஸ்
ஸாலிஹாத் பள்ளியில் உரையாற்றி வருகிறார். ஒருவேளை "அவரைத்தான்
இவருன்னு" நினைத்து விட்டனரோ, காலக் கொடுமையடா!
மவ்லவி முர்ஷித் அப்பாஸி அவர்கள் அதிரையின் ஊர் மத்தியில் நடுத்தெருவில் தொடர்ந்து 20 நாட்கள் இரவு வேளையில் உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில், மேலும் அதே தினங்களில் காலை வேளையில் அதிரை டீயென்டீஜேயினரின் தக்லீத் மடத்திற்கு அருகிலுள்ள பிலால் நகர் ITC மர்கஸில் பெண்களுக்கான தொடர் பயான் நிகழ்த்திக் கொண்டிருந்த நிலையில், மேலும் பயான் இல்லாத மற்ற நேரங்களில் தக்வா பள்ளிக்கு அருகிலிருக்கும் ஓர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் அவர்கள் முர்ஷித் அப்பாஸி அவர்களை தேடியது 'ஒரு பழமொழி சொல்வார்களே! இடையன் ஆட்டை தோளில் போட்டுக் கொண்டு மந்தையில் தேடினான்' என்பது போல் மேலத்தெரு பாக்கியாதுஸ்
ஸாலிஹாத் பள்ளிக்கு முன் போய் தேடி நகைப்பிற்குரிய செயலை அரங்கேற்றி மக்கள் மத்தியில் கேவலப்பட்டனர்.
No comments:
Post a Comment