உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, March 8, 2011

அரசியல் அவலம்: ஓர் தொகுப்பு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

கேவலத்தின் முகவரி மு.லீக்

அட, மானங்கெட்டவர்களா! இப்படித்தான் நம் சமுதாய கட்சியினர்களை அழைக்கத் தோன்றுகிறது. நேற்று நடந்து முடிந்த (08.03.2011) அரசியல் நாடகங்கள் மானமுள்ள தமிழக முஸ்லீம்களை வெறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. மமக என்றொரு கட்சி மூன்றுக்கு மேல் வேண்டாம் என்று ஒரு சாத்தானிடம், தெரிந்தே சரணடைய, பாரம்பரியமிக்க? மு.லீக் இன்னும் கெடுவேன் என்ன பந்தயம் என தமிழக முஸ்லீம் சமுதாயத்தையே இன்று முட்டாளாக்கி விட்டது.

2ஜி புகழ் திமுகவின் மிரட்டல் நாடகங்கள் எதுவுமே பாபரி மஸ்ஜித் துரோகிகளான காங்கிரஸிடம் பலிக்காமல் போக, கேட்ட 63 தொகுதிகளை தர வேண்டிய கட்டாயத்தில் முஸ்லீம் லீக்கின் பெயரில் ஒதுக்கிய மூன்றுறுறுறுறுறுறு தொகுதியிலிருந்து ஒன்றை பறித்து காங்கிரஸிடம் தந்துள்ளார் சிறுபான்மை மக்களின் காவலரான? கருணாநிதி, இவரோடு (குவிந்திருக்கின்ற) ஒட்டியிருக்கின்ற நிதியின் எள்முனை அளவு கூட நீதியில்லாதவர் என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார்.

நேற்றுப் பிறந்த, கோவை மாவட்டத்தை தாண்டாத ஜாதி கட்சியான கொ.மு.க விற்கு ஒதுக்கிய 7ல் ஒன்றைப் திரும்பப் பெறவோ, வி.சி.க்கு ஒதுக்கிய 10ல் ஒன்றை திரும்பப்பெறவோ திராணியில்லாத கருணாநிதி தன் தைரியத்தை (தமிழக இஸ்லாமிய இயக்கங்களால்) நாதியற்ற சமூகமாக்கப்பட்டு விட்ட இஸ்லாமியர்களிடத்தில் காட்டியுள்ளார், சொந்த சின்னத்தில் நிற்கத்துணியாமல் இரவல் சூரியன் சின்னத்தில் நிற்கும் போதே இந்த நிலைமையென்றால்... நினைக்கவே குமட்டிக் கொண்டு வருகிறது.

இந்த அவமானங்கள் எல்லாம் ஆளுக்கொரு பக்கம் திரும்பி நிற்கின்ற சமுதாய இயக்கங்களால் விளைந்தவினை என அடித்துச் சொல்லுமளவிற்கு கட்சி, இயக்கச் சண்டைகள். சமுதாயம் நலம் நாடி ஓரணியாய் வாருங்கள் என்று எத்தனை கூப்பாடுகள், வந்தீர்களா? உங்கள் அனைவரையும் சரமாரியாக வசைபாட என் மனம் நாடுகிறது இருந்தாலும் அடக்கிக் கொண்டு, இன்னும் கெட்டுவிடவில்லை வாருங்கள் ஒன்று சேருவோம், நம்முடைய சகோதர சண்டையை இன்னொரு நாளில் வைத்துக் கொள்வோம் இப்போதைக்கு ஒன்றுசேர்ந்து தேர்தலை சந்திப்போம், திமுக உட்பட அனைத்து கட்சிகளையும் அடுத்த தேர்தலில் நம் சமுதாயத்தின் முன் மண்டியிட வைப்போம், இன்ஷா அல்லாஹ் நம்மால் முடியும், காதில் விழுகிறதா என் சகோதரர்களே!

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். திருக்குர்ஆன் 12:8

முஸ்லீம்கள் பாடம் படிக்க நேற்று (08.03.2011) நடந்த இன்னொரு முக்கிய நிகழ்வு, ஏகப்பட்ட சங்கங்களாக செயல்பட்ட அத்தனை நாடார்களும் ஒன்று சேர்ந்து அவர்களின் ஜாதிக்காக ஒரு கட்சியே தொடங்கிவிட்டார்கள், இந்தத் தேர்தலில் போதிய தொகுதிகளை யாரும் ஒதுக்காவிட்டால் தனித்து போட்டியிட்டு தங்களின் பலத்தை காட்டப்போவதாகவும் அறிவித்தும் விட்டார்கள், எல்லாம் நேற்று வரை நாம் யாருமே அறியாத கொ.மு.க.விடம் படித்த பாடம்.

தானும் கெட்டு சமுதாயத்தின் மானத்தையும் ஏலம் போட்ட முஸ்லீம் லீக்கே உடனே திமுக கூட்டணியை விட்டு வெளியேறு, ம.ம.கவே அதிமுகவை விட்டு வெளியேறு, சோ.டெ.பா.இ கட்சியினர்களே நீங்களும் வாருங்கள் ஒன்றாக கைகோர்த்து தேர்தல் களத்தை சந்தியுங்கள், இன்றைய தோல்வி நாளைய வெற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஓட்டையும் வாங்கிக் கொண்டு சீட்டையும் பறித்துக் கொண்ட (அதாவது உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும்) திமுக, பாபரி மஸ்ஜித் விவகார அயோக்கியர்களான காங்கிரஸ், நரவேட்டை காட்டுமிராண்டி கும்பலான பாஜக, கரசேவை காவி நடிகையின் அதிமுக ஆகிய அனைவரையும் சமதூரத்தில் நிறுத்துவோம், இந்த தேர்தலில் இவர்களில் யாருக்கும் முஸ்லீம்களின் ஓட்டில்லை என்ற நிலையை ஏற்படுத்துவோம்.

இஸ்லாமியர்களின் இயக்கங்களே! நமது சமுதாயத்தின் பெயரைச் சொல்லி கட்சி நடத்துவோர் ஒன்றிணைந்து வந்தால் தயவுசெய்து நீங்களும் சமுதாயத்தின் நலன்நாடி இந்த ஒருமுறை மட்டுமாவது உங்களுடைய முந்தைய தீர்மானங்களை வாபஸ் வாங்குங்கள், பிற அமைப்புக்களுடனும் மக்களுடனும் கரம் கோர்க்க முன் வாரீர். தாத்தா ஜெயித்தாலும், செல்வி? ஜெயித்தாலும் முஸ்லீம்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை மாறாக இருப்பதை தான் பிடுங்குவார்களே தவிர வேறு எதையும் பிடுங்க மாட்டார்கள் என்பது யாருக்கும் தெரியததல்ல. ஒத்துவராத கட்சிகளையும் இயக்கங்களையும் ஒதுக்குவோம்.

பெயருக்கு ஆசிரியரான காதர் முகைதீன் ஒன்றை மட்டும் சரியாக செய்கிறார் அது சாமியாராக இருந்தாலும் சரி, மஞ்சள் துண்டு பகுத்தறிவாக இருந்தாலும் சரி யாருக்கும் பேதமில்லாமல் சமமாகவே மண்டியிடுகிறார், த்தூ... இதெல்லாம் ஒரு பொழப்பு. (தனி நபர் தாக்குதல் இன்றியே எழுத நினைத்தேன், இவருடைய இழிசெயலால் முடியவில்லை மன்னியுங்கள் சகோதரர்களே)

கட்சிகளே, இயக்கங்களே! தெளிவான முடிவெடுக்க இன்னும் நேரமிருக்கிறது, மனமிருக்கிறதா உங்களிடம்?

அதிரை அமீன்

-----------------------------------------------------------------------------------------------
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
(புனித குர்ஆன் 55:60)

முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)

மார்க்கத்தை விளங்காத மக்கள் செய்த துரோகத்தைக் காட்டிலும் விளங்கி புரிந்து கொண்ட அரசியல் தலைவர்களுகம்  சில மார்க்கஅறிஞர்களும் தான் அதிகளவில் துரோகம் இழைத்துள்ளனர். இது உலகம் முழுவதும் நடந்து வருகிறது  இதற்கு சமீபத்திய உதாரணம் தான் நம் நாட்டின் முஸ்லிம் அரசியல் தலைவர்கள்

நாளை மறூமையில் அல்லாஹ்விற்கு பதில் சொல்லவேண்டும் என்ற நினைவுடன் நம் செயல்கள அமைத்துக் கொள்ள அல்லாஹ் நமக்குத் தவ்பீக் செய்வானாக! ஆமீன்.

உங்களின் சகோதரன்
ஹாஜா- அதிரை

--------------------------------------------------------

ஓரு பின்னோட்டம் (Flash back):

//மேலும் திமுகவின் சிறுபான்மை பிரிவான முஸ்லிம் லீக்கிற்கு வழக்கம் போல் குடும்ப கட்டுப் பாட்டு கோட்பாட்டின் தாரக மந்திரமான இரண்டுக்கு மேல் வேண்டாம்(!) என்ற அடிப்படையில் இரண்டு தொகுதிகள் வழங்கப்படலாம். அதுவும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டால் ( போட்டியிட்டாலா?. பரம்பரை பழக்கத்தை மாற்ற முடியுங்களா?.) மூன்று கிடைக்கலாம். ஆக மொத்தம் இஸ்லாமிய இயக்கங்களுக்கு மொத்தமாக இந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பே உள்ளது. தவிர ஒன்றோ அல்லது இரண்டோ வேறுபடலாம்.//

மேற்கண்ட செய்தியினை நம் இணையத்தினை வாசிக்கும் சகோதரர்கள் அவ்வளவு சீக்கிரமாக மறந்திருக்க மாட்டார்கள்!. இனி என்ன செய்யப் போகிறாய்?.... என்ற நம் கட்டுரையில் தொகுதி உடன்பாடு எட்டப்படுவதற்க்கு முன்பே வந்த வாசகம்தான் இது!!. ஒன்றோ அல்லது இரண்டோ வேறுபடலாம் என்று நாம் அந்தப்பாராவை முடித்திருந்தோம்!. தற்போது அது உண்மையிலேயே வேறுபட்டுவிட்டது!. ஆம்!. அரசியல் சாணக்கியர் என்று சொல்லப்படுபவரால், “கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி” என்று, பிச்சையாக போடப்பட்ட மூன்றில் ஓரு தொகுதியை முஸ்லிம்லீக்கிடமிருந்து பிடுங்கப்பட்டு, அதை காங்கிரசிடம் திமுக அள்ளிக்கொடுத்துள்ளது!. கொடுப்பதில் காட்டாத தாராளத்தை, பிடுங்குவதில் திமுக காட்டியுள்ளது!. காங்கிரஸ்,திமுக இடையே நடந்த அரசியல் உள் விளையாட்டில் பலிகடா ஆக்கப்பட்டதோ முஸ்லிம்கள்!. 

தன்மானத்தை இழந்து, சுயசின்னத்தில் கூட போட்டியிட முடியாமல், அரசியல் அரங்கில் அனாதையாக இருக்கும் முஸ்லிம்லீகிற்கு இதுவும் வேண்டும்!. இதற்கு மேலும் வேண்டும்!. இதற்கு மேல் வேறு என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்பதும் எனக்கு தெரியும்!. ஏன் கொடுத்த மூன்று தொகுதியையும் திரும்ப தர வேண்டும் என்று கேட்டால் (பிடுங்கினால்) கூட, சரணம் சரணம் கச்சாமி....! சாமிசரணம் கச்சாமி.....! என்று அதை தாராளமாக வாரி கொடுப்பதற்கு கொடைவள்ளல் காதிர்முகைதீன் தயாராக இருந்திருப்பார்!. அதையே திமுகவும் செய்திருக்கலாம்!. தாழ்த்தப்பட்டோரை விட முஸ்லிம்களின் நிலை பரிதாபமாக உள்ளது என்ற நீதிபதி சச்சார் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் அரசியல் அரங்கில் காட்சிகள் நிறைவேறிக் கொண்டிருகின்றது!. பொறுத்திருந்து பாருங்கள்!. காதர்முகைதீனிடம் இருந்து கூடிய சீக்கிரமே, சட்டமன்ற மேலவையில் இடம் தருவதாக எங்களுக்கு திமுக வாக்களித்துள்ளது என்று ஓரு டயலாக் வரும்!.

பாருங்கள் சகோதரர்களே!. முப்பத்தி ஒன்று தொகுதியைப்பெற்ற பாமக விடம் ஒன்றை பிடுங்கியதை கூட நியாயப்படுத்திவிடலாம்!. ஆனால் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சமூகமான முஸ்லிம்களுக்கு திமுக சார்பில் தரப்பட்ட மூன்றே மூன்று தொகுதியைக்கூட விட்டுவைக்காமல், திரும்ப முஸ்லிம்லீக்கிடம் இருந்து பிடுங்கியது எந்தவிதத்தில் நியாயம்?. முஸ்லிம்கள் மேலும் மேலும் வஞ்சிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம்?. முஸ்லிம்லீக்கிடம் திரும்ப பெற்றதைப் போல், கடந்த தேர்தலில் பெற்ற ஒன்பது தொகுதியைவிட, ஓரு தொகுதியை அதிகம் பெற்ற விடுதலைசிறுத்தைகள் கட்சியிடமோ, முதன்முதலாக கூட்டணியில் சேர்ந்ததுமே, ஏழு இடங்களை பெற்ற கொங்கு முன்னேற்ற கழகத்திடம் இருந்தோ இவ்வாறு பெறமுடியுமா?. முடியவே முடியாது!. அவர்களிடம் திரும்ப பெற்றால், இந்நேரம் அவர்கள் கூட்டணியை விட்டு வெளியேறி மாற்று அணியில் சேர்ந்திருப்பார்கள். அந்த சமூகம் தங்களின் எதிர்ப்பை காட்டி திமுக விற்கு தேர்தலில் தக்கபாடம் புகட்டி இருப்பார்கள். 

ஆனால் தன்மானம் இழந்த முஸ்லிம்லீக்கிடம் இருந்து மட்டுமே, இதுபோல் திரும்ப பெறமுடியும்!. “இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா" என்று திமுகவிலே கேவலமாக பேசப்படுபவரும், இதற்கு துணை போகியுள்ளவருமான காதர்முகைதீனிடம் இருந்து, முஸ்லிம்லீக் கட்சியின் தலைவர் பதவியை பிடுங்கவேண்டும். இவர் உடனே தூக்கி எறியப்பட வேண்டும்!. சட்டமன்ற இருக்கையில் இடம் பெறாமல், கருணாநிதியின் இதயத்தில் இடம் பெரும் இவரைப் போன்றவர்கள் இருக்கும்வரையும், இதுபோன்று சமுதாய நலனை குப்புறதள்ளிய சுயநலவாதிகள் இருக்கும்வரையும், முஸ்லிம்கள் ஒருக்காலும் அரசியல் அரங்கில், தங்களின் பங்களிப்பை பெறமுடியாது!. தற்போது பிறைக்கொடி அம்மனமாக திரிகின்றது!. இந்த துரோகத்திற்கு தானா முஸ்லிம்லீக் கட்சியினர் லட்சக்கணக்கில் செலவு செய்து விழா எடுத்து கருணாநிதிக்கு விருது கொடுத்தனர்?.

முஸ்லிம்லீக்கின் கடைசி அத்தியாயத்தினை காதர்முகைதீன் அவர்கள் எழுதிவிட்டார். முஸ்லிம்லீக்கை புதைகுழியில் இவர் தள்ளிவிட்டார். இனி முஸ்லிம்லீக் என்ற பெயரை உச்சரிக்கவே இவர் தகுதியற்றவர். தற்போது இவர்கள் பெற்று இருக்கும் இரண்டு தொகுதிகளில் கூட, நிச்சயம் மமக வை எதிர்த்து நிறுத்தப்படுவார்கள். அதற்கும் முஸ்லிம்லீக் துணைபோய், மேலும் இரண்டு முஸ்லிம்கள் சட்டமன்றத்திற்கு செல்வதையும் தடுத்துவிடுவார்கள். இனி அடுத்த சட்டமன்ற தேர்தலில், முஸ்லிம்லீக் என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருக்காது என்றே நமக்கு தோன்றுகின்றது. எந்த கோரிக்கையாவது நிறைவேற்றக்கோரி முஸ்லிம்லீக் கட்சி களத்தில் இறங்கி போராட்டம் நடத்தியதுண்டா?. எனவே முஸ்லிம்லீக் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் அடிப்படை உறுப்பினர் பதவியை உடனே ராஜினாமா செய்துவிட்டு, மாற்று கட்சியான மமக வில் சேர்ந்துவிடுங்கள். 

குறைந்தபட்சம் அந்த கட்சியாவது தங்களின் பங்களிப்பை இனி அரசியலில் ஆற்றட்டும்!. அல்லது முஸ்லிம்களின் அரசியல் வெற்றிடத்தை ததஜ களத்தில் இறங்கி நிரப்பட்டும்!. அல்லது பாப்புலர் பிரன்டின் சோசியல் டெமாக்ரடிக் பார்டி அதை நிரப்பட்டும்!. ஏனெனில் எங்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும். எங்களின் கோரிக்கையை எடுத்துக்கூற பிரதிநிதிகள் சட்டமன்றத்தின் இருக்கையில் இடம் வேண்டும்!. எவர்களின் இதயத்திலும் எங்களுக்கு இடம் வேண்டாம்!. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் மனிதர்களின் இதயத்திற்கு அட்டாக் வந்துவிடலாம்!.


Posted by அதிரை முஜீப் 

2 comments:

 1. அன்பின் அ.இ.செ: தலை(வலி) வெட்டி ஒட்டிச் சேர்த்திருக்கும் படத்தினை தூக்கிடவும் இதுவல்ல நம் வழி...

  உள்ளதைச் சொல்கிறோம் உண்மையை மட்டுமே காண்பிப்போம் !

  ReplyDelete
 2. சகோதரர் அபூ இபுறாஹீம்
  படம் நாங்கள் இணைத்தது அல்ல என்றாலும் உங்களுடைய சுட்டலை ஏற்று தவறிலிருந்து நீங்கிக் கொண்டோம்
  AIM

  ReplyDelete