உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, March 6, 2011

04.03.2011 - இந்த வார அதிரை ஜூம்ஆ நிகழ்வுகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அல்லாஹ்வின் பேரருளால் அதிரை AL மெட்ரிக் பள்ளியில் (EPS) கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் அதிரை ஜூம்ஆவில் இந்த வாரம் மவ்லவி. நிழாமுதீன் அஷ்ரபி, முஃப்தி அவர்கள் கலந்து கொண்டு ஜூம்ஆ பிரசங்கம் நிகழ்த்தினார்கள்.

பிரசங்கத்தின் முதல் அமர்வில், நன்மையை ஏவி தீமையை தடுப்போம் என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் மையக்கருவாய் முஸ்லீம்களின் சொல்லும் செயலும் வௌ;வேறாக இருக்கக்கூடாது என்றும் நல்லவற்றை துணிந்து செய்திட வேண்டுமெனவும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் ஆதாரங்களுடன் ஆணித்தரமாக எடுத்துச் சொன்னார்கள்.

இரண்டாம் அமர்வில், ஜூம்ஆவின் சிறப்புக்களையும் அதன் ஒழுங்குகளையும் அனைவருக்கும் எளிதாய் புரியும் வண்ணம் விளக்கினார்கள். வழமைபோல் பொதுமக்கள் பெருமளவில் வருகை தந்திருந்தனர்.

அதிரையிலிருந்து
அப்துல் காதர்

நிச்சயமாக ஒருவரது இணைவைப்புக்கும் இறைமறுப்புக்கும் அடையாளம் என்பது
 தொழுகையைக் கைவிடுவதுதான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).
அத்தியாயம்: 1, பாடம்: 1.35, ஹதீஸ் எண்: 116
நூல் : முஸ்லீம்

"
ஆதமின் மைந்தன் (மனிதன்) சஜ்தா (சிரவணக்கத்திற்கான) வசனத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் ஷைத்தான் அழுதவாறே, "அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் சிரவணக்கம் செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் சிரவணக்கம் செய்து விட்டான். அவனுக்குச் சொர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்குச்) சிரம் பணியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம் தான்" என்று கூறியபடி விலகிச் செல்கிறான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).
குறிப்பு :இதே ஹதீஸ் அல் அஃமஷ் (ரலி) அவர்களது வழி அறிவிப்பில், "நான் மாறு செய்தேன். எனவே, எனக்கு நரகம்தான்" என்று இடம் பெற்றுள்ளது.  
அத்தியாயம்: 1, பாடம்: 1.35, ஹதீஸ் எண்: 115

No comments:

Post a Comment