அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அல்லாஹ்வின் உதவியோடும் அதிரை மக்களின் மகத்தான ஆதரவோடும் CMP LANE பகுதியில் அமைந்துள்ள AL மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்று வரும் அதிரை ஜூம்ஆவின் பிரதான ஹாலிலும் பெண்கள் பகுதியிலும் ஏற்பட்ட இடப்பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதலாக 'சாமீயானா' பந்தல் போடும் நிலை ஏற்பட்டது, எல்லாப் புகழும் இறைவனுக்கே! என்ற போற்றுதலுடன் ஜூம்ஆ நிகழ்வுக்குள் வருகிறோம்.
இந்த வார ஜூம்ஆவில் முகவைலிருந்து வருகை தந்திருந்த மவ்லவி. அலாவுதீன் பாக்கவி அவர்கள் கலந்து கொண்டு, நபி (ஸல்) அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ற தலைப்பின் கீழ், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உலகாதய கல்வியை தர மெனக்கெடும் பெற்றோர்கள் மார்க்கத்தையும் வணக்கவழிபாடுகளையும் ரஸூல் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த அடிப்படையில் இளமை முதலே சொல்லித் தர வேண்டிய ஒழுங்குகளை விளக்கிக் கூறினார்கள்.
ஜூம்ஆ தொழுகைகளில் பெண்கள் கலந்து கொள்வது குறித்தும், தனி ஜூம்ஆக்கள் குறித்தும் நிலவும் ஐயங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விடைதரும் உரையாக இரண்டாவது அமர்வை அமைத்துக் கொண்டார்கள்.
அதிரையிலிருந்து
S. அப்துல் காதர்
S. அப்துல் காதர்
No comments:
Post a Comment