உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, March 8, 2011

ALM பள்ளிக்கூட ஆண்டுவிழா

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்வாகும். அவர்கள் (மனிதர்கள்) அறியக்கூடாதா? (திருக்குர்ஆன் 29:64)

இஸ்லாத்தை பேணிய ஓர் அக்மார்க் ஆண்டுவிழா என நாம் நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் வண்ணம் சீர்மிகு ஆண்டுவிழா EPS பள்ளி என்று மக்களின் நினைவில் நிற்கும் அதிரை ALM பள்ளியில் கடந்த 06.03.2011 அன்று நடந்தேறியது.

அதிரை கல்வியாளர்களான பன்னூலாசியர் அதிரை அகமது அவர்கள் தலைமையேற்க, தமிழ்மாமணி புலவர் பஷீர் அவர்கள் சிறப்புரையாற்ற சுமார் 500க்கு மேற்பட்ட பெற்றோர்கள் (பெண்கள் மட்டும்) கலந்து கொள்ள, மாணவ, மாணவிகள் தங்களின் மார்க்கம் மற்றும் கல்வி சார்ந்த அறிவுத்திறன்களை வெளிப்படுத்தினர்.

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். திருக்குர்ஆன் 12:87

நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்' (அல்-குர்ஆன் 2:216)

மாற்றார்களுடையது மட்டுமல்ல, முஸ்லீம் கல்வி நிறுவனங்களாக, மார்க்கத்தையும் போதிப்பதாக இனங்காட்டிக் கொண்டுள்ள பல்வேறு அதிரை கல்வி நிலையங்களில் எதுவும் விதிவிலக்கில்லை என்று சொல்லுமளவில் சினிமா மேடைகளாய் போய்விட்ட தற்கால பள்ளி ஆண்டுவிழாக்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாய் மார்க்கத்துடன் கல்வியை கலந்து ஆண்டுவிழா நிகழ்வுகளை அமைத்திருந்த விதம் நாம் அதிரையில் தான் இருக்கின்றோமா?! என ஆச்சரியத்துடன் நம்மை நாமே ஒருமுறை கிள்ளிப்பார்த்துக் கொள்ளச்செய்தது. மாணவ, மாணவிகள் பள்ளியில் கற்ற மார்க்க அறிவை, எதிர்கால இலக்குகளை ஒருபுறம் வெளிப்படுத்த மறுபுறம் புலவர் பஷீர் அவர்கள் மார்க்கம் சார்ந்த கல்வியின் அவசியத்தை பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களை நடத்துவோர்களும் உணரும் வகையில் சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11).

கிட்டதட்ட ஓர் தர்பியா நிகழ்வுக்கு ஈடாக நடைபெற்ற இந்த ஆண்டுவிழாவை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து துணிவுடன் ஏற்பாடு செய்த பள்ளியின் தாளாளர் அப்துல் ரஜாக் அவர்களுக்காகவும் நிகழ்ச்சியின் இறுதிவரை உடனிருந்து இதுபோன்ற ஒரு வித்தியாசமான விழாவிற்கு வரவேற்பளித்த பெற்றோர்களுக்காகவும் ஏக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.

பலமான இறைநம்பிக்கையாளர் பலவீனமான இறை நம்பிக்கையாளரை விட சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவரும் ஆவார். இறை நம்பிக்கையாளர் அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்கு பயன்தரும் காரியங்களை அடைய ஆர்வம் கொள். முடியாது என்று எண்ணிவிடாதே. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை. இப்படிச் செய்திருந்தால் அப்படி நடந்திருக்குமே என்று கூறாதே. காரணம் 'இப்படிச் செய்திருந்தால்' என்ற வாசகம் ஷைத்தானின் செயலுக்கு வழிவகுக்கும். அல்லாஹ் விதித்தான். அவன் நாடியதை செய்கின்றான் என்று கூறு. (நபிமொழி) அறிவிப்பாளர்: அபுஹூரைரா ரலி நூல் : முஸ்லிம் (6945)

பாடம்:
ஆடல், பாடல், நாடகம், பிற மத கலாச்சாரங்களின்றி ஆண்டுவிழாவை நடத்தினாலும் ஆதரவு கிடைக்கின்தென்றால் குற்றம் பெற்றோர்கள் மீதில்லை, தேவை இறையச்சம் மட்டுமே.


'எனது உம்மத்தில் ஒரு பிரிவினர் இறைவனின் கட்டளைகள் மீது நின்று கொண்டே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவன் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்திட இயலாது' என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னுமாஜா பக்கம் – 1 பக்கம் – 1 அத்தியாயம்: முகத்திமா – முகப்பு ஹதீஸ் எண்: 7



அதிரையிலிருந்து
S. அப்துல் காதர்

No comments:

Post a Comment