உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, March 25, 2011

இருவார ஜூம்ஆ நிகழ்வுகள் மற்றும் அரங்க நிகழ்ச்சி

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இந்த வார (25.03.2011) ஜூம்ஆவில், சகோதரர் (பொதக்குடி) அப்துல் ஸமது அவர்கள் கலந்து கொண்டு எதார்த்தமான நடையில், நம் வாழ்வின் நடைமுறை வாழ்க்கையில் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையினுள் தடுமாறி ஷிர்க் கலப்பது எவ்வாறு?, அல்லாஹ்வுடைய இலக்கணம் என்ன? நம் கண் மற்றும் செவிப்புலன்களினூடாக அல்லாஹ்வை எவ்வாறு உணர வேண்டும் என்பது குறித்து நம்முடைய அன்றாட வாழ்விலிருந்து உதாரணங்களை எடுத்துக்கூறி உரை நிகழ்த்தினார்கள்.

சென்ற வார (18.03.2011) ஜூம்ஆவில், சகோதரர் (கீழக்கரை) S.M. புகாரி அவர்கள் கலந்து கொண்டு அல்லாஹ்விடம் முழுமையாக சரணடைதல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு சஹாபிப் பெண்களின் வாழ்வுதனை எடுத்துக்கூறி நாம் எவ்வாறு அல்லாஹ்விற்கு முழுமையாக கட்டுப்பட வேண்டுமென உள்ளங்களை உசுப்பும் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து அன்று மாலை அஸர் முதல் மஃரிப் வரை ALM பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரங்க நிகழ்ச்சியில் சகோதரர் S.M. புகாரி அவர்கள் குழுமியிருந்த ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் நம்மிடையே இடைபுகுந்துள்ள பிற மத தாக்கங்கள், ரஸூல் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியது எது? வெறுத்தது எது? கப்ரு ஜியாரத்திற்கும் தர்கா வழிபாட்டிற்குமிடையேயுள்ள வித்தியாசங்கள் போன்ற ஒப்பீட்டு ஆய்வுரையுடன் நாம் பின்பற்ற வேண்டியது எது என்பதையும் கோடிட்டுவிட்டு அன்மித்துவிட்ட மரணத்தை குறித்தும் எச்சரித்துச் சென்றார்கள்.

அதிரையிலிருந்து
அப்துல் ரஹ்மான் மற்றும் சாகுல்

No comments:

Post a Comment