உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, October 16, 2013

அதிரை தியாகத் திருநாள் தொழுகை

அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்லாஹ்வின் பேரருளால் வழமையான உற்சாகத்துடன் இந்த வருட தியாகத் திருநாள் அதிரை மக்களால் கொண்டாடப்பட்டது.


அதிரை ஈத் கமிட்டி சார்பாக வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் பெருநாள் தொழுகை இவ்வருடமும் அதிரை மேலத்தெரு சானா வயல் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்புடன் நிறைவடைந்தது.



பெருநாள் தொழுகையை தொடர்ந்து மவ்லவி ஷேக்தாவூது ஃபிர்தவ்ஸி அவர்கள் குத்பா பேருரை நிகழ்த்தினார்கள். மவ்லவி அவர்கள் தனதுரையில் ரஸூல் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவில் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புரையின் ஒரு பகுதியான ஹஜ்ஜூப் பெருநாளின் புனிதத்தன்மையையும் பிற மனிதர்களின் மானம் மரியாதைகளை காப்பதின் அவசியங்களையும் அழகுற எடுத்துரைக்க இனிதே நிறைவுற்றது.


இறுதியாக, பெருமளவில் குழமியிருந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி இன்முகத்துடன் தத்தமது வீடுகளை நோக்கி விரைந்தனர்.

செய்தியும் படமும்
அதிரையிலிருந்து
J. ஜமால் முகமது

No comments:

Post a Comment