உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, October 18, 2013

அதிரையில் ஓர் புதிய உதயம், ALMS ஜாமிஆ மஸ்ஜித்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
 
அதிரையில் ஓர் புதிய உதயம் ALMS ஜாமிஆ மஸ்ஜித்
 
Front View of ALMS Jamia Masjid
 
கடந்த 18.02.2011 முதல் அதிரை CMP லேனில் அமைந்துள்ள ALM பள்ளிக்கூடத்தில் நபிவழியில் ஜூம்ஆ தொழுகை நடைபெற்று வருவதை அனைவரும் அறிவோம் எனினும் பள்ளிவாசல் ஒன்று அமைந்தால் இன்னும் சிறப்பாக அமையுமே என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் அவா ஆகும்.
 
1st Floor
 
ALM பள்ளியின் தாளாளர் சகோதரர் அப்துல் ரஜாக் அவர்களின் சீரிய முயற்சியின் விளைவாய் பள்ளிவளாகத்தினுள் இன்று கம்பீரமாய் ஓர் இறையில்லம் எழுந்துள்ளதுடன் கடந்த வாரம் ஜூம்ஆ முதல் இறையில்லம் செயல்படத் துவங்கியது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
 
Ground Floor
 
 
ALMS ஜாமிஆ மஸ்ஜித் பிறருக்கு ஓர் முன்மாதிரியாய், எவ்வித ஆடம்பரமுமின்றி கட்டப்பட்டுள்ளதுடன், பள்ளிவாசல் துவக்கவிழாவோ, அறிவிப்போ ஏதுமின்றி அல்லாஹ்வை வணங்கும் நிகழ்வான ஜூம்ஆ தொழுகையுடன் கடந்த வாரம் (11.10.2013) துவங்கியதும் அதுவும் கூட ஜூம்ஆ தொழுகைக்கு வந்தபோது தான் துவக்கமே மக்களுக்கு அறிய வந்தது வரவேற்கத்தக்கதோர் இனிய அதிர்ச்சியாய் அமைந்திருந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
 
1st Floor Staircase
 
கீழ்த்தளமும், முதல் மாடியின் முன் பகுதியும் ஆண்களுக்கும், பின்பாதி பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது மாடி இன்னும் முழுமை பெறாமல் கட்டுமானத்தில் உள்ளது.
 
Another view of Ground Floor
 
இந்த வாரம் (18.10.2013), மவ்லவி. ஷேக் தாவூது ஃபிர்தவ்ஸி அவர்கள் கலந்து கொண்டு 'இஸ்லாம் கூறும் ஆடை கலாச்சாரம்' என்ற தலைப்பில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அழகியதோர் அறவுரையை குர்ஆன், ஹதீஸ் ஒளியிலும், ஸஹாபிய பெண்களின் வரலாற்று நிகழ்வுகளிலிருந்தும் ஆதாரங்களை எடுத்துக் கூறியும் பயனுள்ளதோர் ஜூம்ஆ உரையை நிகழ்த்தினார்கள்.
 
செய்தியும் படமும்
அதிரையிலிருந்து
J. ஜமால் முகமது
 
 

No comments:

Post a Comment