உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, October 21, 2013

மறுபடியும் தொடங்குன இடத்துக்கேவா! TIYA கவனிக்குமா?

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
 


 



படங்கள பாத்தீங்களா... தலைப்புக்கு வெளக்கம் தேவையில்லை தானே...இருந்தாலும் ஒருவேளை அசந்திருந்தா இருந்தா கொஞ்சம் அன்பா தட்டி எழுப்புவோம்.

ஆரம்பம் ஜோரு, அப்புறம் பாரு என குறை சொல்வதற்கு அரசு அமைப்பல்ல, TIYA சாதிக்க நினைக்கும் இளைஞர்களின் தன்னார்வ களம் என்பதில் இரு கருத்தில்லை.
 
 

அந்தப் பக்கமாக போய் வந்ததிலிருந்து மூக்க பொத்திக்கிட்டே இத எழுத வேண்டியதாப் போச்சு.

நாறிக்கிடந்த ஏரியாவை தத்தெடுத்து, சுத்தப்படுத்தி, சுகாதார தனலை மூட்டி, குழந்தைகள் விளையாடுமிடமாக, பெண்கள் பாதுகாப்பாய் நடைபயிற்சி மேற்கொள்ளும் பூங்காவனமாக மாற்றிடும் சிறப்பான திட்டங்களுடன் துவங்கியது ஏனோ பரிதாபகரமாய் இந்த தொட்டிலைப்போல் தொடர் அறுந்து தொங்குகின்றது.
 
 

 

அதேபோல், பூங்காவினுள் திறக்கப்படாமல் உள்ள கழிவறைக்கும், தெருவெங்கும் வைக்கப்பட்டும் பாராமரிக்கப்படாமல் உள்ள குப்பை தொட்டிகளுக்கும் விடிவு காலம் பிறக்குமா? நீங்கள் (TIYA) திட்டமிட்டதை செய்து முடிப்பீர்கள் என இன்னும் உறுதியாக நம்புகிறோம்.

ஓர் தன்னார்வ அமைப்பிடம் கேட்கும் கேள்வியை நோட்டுக்கு ஒட்டு வாங்குன அரசியல்வாதிகளிடம் கேட்க முடியுமா என சிலர் எதிர் கேள்வி கேட்கலாம் ஆனா அவங்க இப்பல்லாம் உழைக்கும் ஏழைங்க வயித்துல அடிக்கிறதுலயும், பத்த வச்சிட்டு ஜாமீனுக்கு அலையுறதுலயும் ரொம்ப பிஸியாம், அப்புறம் எப்படிங்க போய் தறுதலைகளிடம் கேக்குறது?

TIYA அன்பர்கள், இதை குற்றச்சாட்டாக கருதாமல் தோழையுடன் சுட்டிக்காட்டப்பட்ட விஷயமாக கருதி, வாதப் பிரதிவாதங்களை தவிர்த்து செயல்வீரர்களாக திகழ வாழ்த்துகிறோம்.

என்றென்றும் அன்புடன்
அதிரை அமீன்
 

No comments:

Post a Comment