உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, December 3, 2012

நடுநிலைச் சமுதாயத்தின் இன்றைய நிலை!

ஒன்று பட்டிருந்த மனித சமுதாயம் ஷைத்தானின் மேலாதிக்கத்தால், பகமை மேலோங்கி, மூடத் தனத்தில் மூழ்கி, நரக நெருப்புக்குழியின் கரையில் நெருங்கிய போதெல்லாம், இறைவன் தன் கருணையால் நபிமார்களை அனுப்பினான். நேர்வழி காட்டுதலையும் அந்நபிமார்கள் மூலம் சிதருண்ட மக்களுக்கு அவ்வப்போது அருளி சகோதரர்களாக்கினான்.
 
இவ்வாறு அருளப்பட்ட அனைத்து முந்தைய வேதங்களையும் உள்ளடக்கியதே இறுதி மறையாம் அல்குர்ஆன். இக்குர்ஆனில் முந்திய காலங்களில் நடந்த அனைத்து நல்லது கெட்டதுகளையும், மிகத்தெளிவாக விளக்கி எச்சரித்து, மக்களை பண்பட்ட இறை நெருக்கமுள்ளவர்களாக வாழ வகை செய்துள்ளான் வல்ல அல்லாஹ்.
 
இவ்வளவு தெளிவான இறுதி வேதமுள்ள நிலையிலும் உலக மக்களும், குறிப்பாக இதைப் பின்பற்றுகிறோம் என்று வானளாவ சொல்லும் முஸ்லிம்களும், இறைவழி காட்டுதலுக் கொப்ப வாழ்கிறார்களா? முந்தைய ஒன்றுபட்ட சமுதாயத்தைக் கூறு போட்டுச் சிதைத்து, மக்களைச் சுரண்டி தங்களின் வயிறுகளை நிரப்புவதோடு மறுமையில் மிகப் பெறும் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்கள் புரோகித பூசாரிகள் என்பதை இறைவன் தனது திரு மறையில் மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறான்.எனினும் நாம் எவ்வித படிப்பினையும் பெறாதவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அன்றைய, இன்றைய யூத கிறிஸ்தவ சமுதாயங்கள் எப்படி புரோகித குருமார்களை சுய சிந்தனையற்று, குறுட்டுத்தனமாக நம்பி மோசம் போனதோ, இப்போதும் போய்க் கொண்டிருக்கின்றனவோ, அதே வழியில் இறுதிவேதம் கொடுக்கப்பட்ட நாமூம் மோசம் போய் கொண்டிருக்கிறோம்.
வல்ல அல்லாஹ் தனது திருமறையில் நன்மையை ஏவி, தீமயைத் தடுத்து அல்லாஹ்வைத் திடமாக நம்பும் இந்த உம்மத்தில் உள்ளவர்களைப் பார்த்து “மேன்மைமிக்க சமுதாயம்” என்கிறான் (3:110). மற்ற சமுதாயத்திலுள்ள மக்களுக்கு நம்மை சாட்சியளார்களாக ஆக்கி நம்மை “நடு நிலைச் சமுதாயம்” (2:143) என்று புகழாரம் வேறு சூட்டுகிறான்.
 
உண்மையில் நாம் மேன்மைமிக்க சமுதாயமா? சுயசிந்தனையற்று ஆடுமாடுகளைப் போல் முல்லாக்களுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டு குர்ஆன்-நபிவழிக்கு மாற்றமாக நடந்து கொண்டிருக்கும் நாம் நடுநிலைச் சமுதாயமா? சிந்தியுங்கள்! நம் நிலையைச் சீர்தூக்கிப் பாருங்கள்.
“முஸ்லிம்” என்ற அல்லாஹ் கொடுத்த ஒரே இயக்கமாக ஒரே தலைமயின் கீழ் ஒன்றுபட்டு இயங்கக் கடமைப்பட்ட முஸ்லிம் சமுதாயம் பிரிந்து பல இயக்கங்களாக பல தலைமைகளின் கீழ் செயல் படுவதால்தான் பதவி ஆசையால்தான் இந்த அலங்கோலம் என்பதை யாரால் மறுக்க முடியும்?

ஒன்றுபட்ட் சமுதாயத்தை பிளந்து சுய ஆதாயம் தேடும் மதப்புரோகிதர்களையும், அற்ப உலக ஆதாயத்தைக் குறிக்கோளாகப் கொண்டுள்ள அரசியல் வாதிகளான இயக்கங்களையும் புறக்கணிப்போம்.
மக்களை மடையர்களாக்கி, பிரித்து சின்னாப்படுத்தி, சிதைத்து வழி நடத்திக் கொண்டிருக்கும் அவர்களைக் கண்மூடி பின்பற்றும் நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடித்திருக்கிறீரகளா? நமது நிலைகளை ஒரு கனம் எண்ணிப் பார்ப்போம், சீர்திருந்துவோம். முஸ்லிம்களாக ஒரணியில் ஒன்றுபடுவோம்; அணி திரள்வோம். வல்ல அல்லாஹ் நம்மை நேர்வழியில் நடத்திச் செல்வானாக
 
thanks to readislam.net

No comments:

Post a Comment